சிறுநீரகங்கள் நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றும் வடிகட்டியை போல் செயல்படுகின்றன. இவை டீடாக்ஸ் செயல்பாட்டை மேற்கொண்டு, உடலில் இருந்து நச்சுக்கள் மற்றும் கூடுதல் திரவத்தை வெளியேற்றுகின்றன.
சிறுநீரகங்கள் நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றும் வடிகட்டியை போல் செயல்படுகின்றன. இவை டீடாக்ஸ் செயல்பாட்டை மேற்கொண்டு, உடலில் இருந்து நச்சுக்கள் மற்றும் கூடுதல் திரவத்தை வெளியேற்றுகின்றன.
உடல் ஆரோக்கியத்திற்கும் உணவு நேரடி தொடர்பு உண்டு என்பதை மறுக்க இயலாது. அந்த வகையில் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஐந்து உணவுகளை பற்றி இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குடைமிளகாய் அதிலும் சிவப்பு குடை மிளகாயில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, போலிக் அமிலம் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளது. இதில் சிறுநீரகங்களின் வீக்கத்தை குறைக்க உதவும் ஆக்ஸிஜனேற்றிகளும் நிறைந்துள்ளன.
காலிபிளவர்: உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவும் நார்ச்சத்துள்ள காய்கறிகளில் காலிபிளவர் ஒன்று. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஃபோலிட் சிறுநீரக செயல் திறனை மேம்படுத்துகிறது.
ஆப்பிள்: நாள் ஒன்றுக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், சிறுநீரக செயல்பாடு மிகவும் மேம்படும். ஆப்பிளில் உள்ள பெட்டின் எனப்படும் நார்ச்சத்து, சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கும் ரத்த சர்க்கரை அளவையும் கொழுப்பையும் கட்டுப்படுத்துகிறது.
பூண்டு: அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸனேற்ற பண்புகள் நிறைந்த பூண்டு, சிறுநீரகங்களின் வீக்கம் மற்றும் ஆக்ஷன் ஏற்ற சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது. அதோடு உடலில் சேரும் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
ஆலிவ் எண்ணெய்: உடலுக்கு தேவைப்படும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ள ஆளு எண்ணெயில் ஆக்சிஜனேற்றுகளும் நிறைந்துள்ளன. இது சிறுநீரகத்தில் ஏற்படுத்தும் அழுத்தத்தையும் வீக்கத்தையும் குறைத்து, செயல் திறன் மேம்பட உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.