PHOTOS

ஜூலையில் சனி, குரு அருளால் 3 ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றிகள் குவியும்

Sani Peyarchi Palangal:ஜூலை மாதம் சனி வக்ர பெயர்ச்சியும் குரு உதயமும் நடக்கவுள்ளன. இதனால் சில ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Advertisement
1/11
ராசிபலன்
ராசிபலன்

ஜூலை மாதம் இரு பெரிய கிரகங்களான சனி மற்றும் குருவின் நிலைகளில் பெரிய மாற்றங்கள் நிகழவுள்ளன. இதனால் அனைத்து ராசிகளின் வாழ்விலும் குறிப்பிட்டத்தக்க மாற்றங்கள் ஏற்படும்.

2/11
குரு உதயம்
குரு உதயம்

சுப கிரகமான குரு பகவான் ஜூலை 9 ஆம் தேதி உதயமாகவுள்ளார். அவர் தற்போது மிதுன ராசியில் அஸ்தமன நிலையில் உள்ளார். குரு பகவான் மே மாதம் 14 ஆம் தேதி மிதுன ராசியின் பெயர்ச்சி ஆனார். இந்த குரு பெயர்ச்சி ஜோதிட ரீதியாக அதிக முக்கியத்துவன் பெற்றுள்ளது.

3/11
சனி வக்ர பெயர்ச்சி
சனி வக்ர பெயர்ச்சி

நீதியின் கடவுளான சனி பகவான் ஜூலை 13 ஆம் தேதி வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி மீன ராசியில் பெயர்ச்சி ஆனார். இந்த சனி பெயர்ச்சியும் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

4/11
குரு பெயர்ச்சி பலன்கள்
குரு பெயர்ச்சி பலன்கள்

ஜூலை மாதம் இரு பெரிய கிரகங்களான சனி மற்றும் குருவின் நிலைகளில் பெரிய மாற்றங்கள் நிகழவுள்ளன. இதனால் அனைத்து ராசிகளின் வாழ்விலும் குறிப்பிட்டத்தக்க மாற்றங்கள் ஏற்படும்.

5/11
சனி பெயர்ச்சி பலன்கள்
சனி பெயர்ச்சி பலன்கள்

ஜூலை மாதம் நடக்கவுள்ள சனி வக்ர பெயர்ச்சி மற்றும் குரு உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

6/11
ரிஷபம்
ரிஷபம்

ரிஷபம்: குரு பெயர்ச்சிக்கு பிறகு வரும் குரு உதயமும் சனி பெயர்ச்சிக்கு பிறகு வரும் சனி வக்ர பெயர்ச்சியும் ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பை அளிக்கும். முதலீடு செய்ய இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். பழைய முதலீட்டிலிருந்து திடீர் பண ஆதாயங்களைப் பெறுவீர்கள். வேலை தொடர்பாக நீங்கள் நீண்ட பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் கிடைக்கும்.

7/11
மிதுனம்
மிதுனம்

மிதுனம்: சனி வக்ர பெயர்ச்சி மற்றும் குரு உதயத்தின் தாக்கத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு திருமண யோகம் கிட்ட வாய்ப்புள்ளது. வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வேலைகளை மாற்ற நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். உங்கள் நம்பிக்கை உச்சத்தில் இருக்கும்.

8/11
கடகம்
கடகம்

கடகம்: குருவின் உதயமும் சனியின் வக்கிரமும் கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். பணி இடத்திலும் தொழில் வாழ்க்கையில் அதிக முன்னேற்றம் அடையலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது. வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். பணியிடத்தில் உங்களுக்கு ஒரு பெரிய பொறுப்பு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

9/11
குரு பகவானின் அருள் பெற
குரு பகவானின் அருள் பெற

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், திருமண பாக்கியம், குழந்தை செல்வம் கிட்டவும், வாழ்வில் செல்வச் செழிப்பு அதிகரிக்கவும் குரு பகவானை வணங்கி தினமும், '‘குரவே சர்வ லோகானாம், பிஷஜே பல ரோகிணாம்; நிதயே சர்வ வித்யானாம், ஸ்ரீ தட்சிணாமூர்த்தயே நமஹ" என்ற ஸ்லோகத்தை பாராயணம் செய்வது நல்லது.

10/11
சனி பகவானின் அருள் பெற
சனி பகவானின் அருள் பெற

சனி பகவானின் அருள் பெற, 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்' என்ற ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்யலாம். இது  தவிர சனி தோஷம், ஏழரை சனி ஆகிய பாதிப்புகளில் சிக்கியுள்ளவர்கள் திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்று அவரை வழிபடலாம்.

11/11
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.





Read More