PHOTOS

வக்கிரமடையும் புதன்... சிக்கலை சந்திக்கும் 5 ராசிகள்... பலன்களும் பரிகாரங்களும்

Mercury Retrograde Transit Effects: ஞானகாரகர் என்று அழைக்கப்படும் புதபகவான் வரும் ஜூலை மாதம் 18ஆம் தேதி வக்கிர பெயர்ச்சி அடைகிறார். ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை வக்கிர நிலையில் நீடிப்பார்.

Advertisement
1/8
புதன் வக்கிர பெயர்ச்சி
புதன் வக்கிர பெயர்ச்சி

புதன் வக்கிர பெயர்ச்சி: அறிவாற்றல் செல்வம் ஆகியவற்றை அள்ளி வழங்கும் ஞான காரகர் ஆகிய புதன் கிரகத்தின் ஜூலை மாத வக்ர பெயர்ச்சி காரணமாக மேஷம் உள்ளிட்ட ஐந்து ராசிக்காரர்கள் சிக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கும்.

 

2/8
புத பகவான்
புத பகவான்

புத பகவான் ஜூலை மாதம் 18ம் தேதி திங்கட்கிழமை, கடக ராசியில் வக்கிரம் அடைந்து, ஆகஸ்ட் 11ஆம் தேதி பக்ர நிவர்த்தி அடைகிறார். இந்த இடைப்பட்ட காலத்தில், பிரச்சனைகளை சந்திக்கும் ராசிகளையும் அவர்களுக்கான பரிகாரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

3/8
மேஷ ராசி
மேஷ ராசி

மேஷ ராசி: வேலையில் தடைகள் ஏற்படும். நம்பிக்கை இன்மை மன உளைச்சலை கொடுக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல்நல பிரச்சனை அதிகரிக்கும். விநாயகர் பெருமானை அருகம்புல் கொண்டு வழிபடுவது, கெடுபலன்கள் நீங்க உதவும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.

4/8
மிதுன ராசி
மிதுன ராசி

மிதுன ராசி: குடும்ப பிரச்சினைகள் ஏற்படலாம். இதனால் ஏற்படும் மன உளைச்சல் காரணமாக வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவது சிக்கல்களை தீர்க்க உதவும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.

5/8
கடக ராசி
கடக ராசி

கடக ராசி: எதிர்மறை எண்ணங்கள் மன தோன்றும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்வது நல்லது. இல்லையென்றால் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். விநாயகர் வழிபாடும், சங்கடஹர சதுர்த்தி விரதமும், இன்னல்கள் நீங்க உதவும் சிறந்த பரிகாரம்.

 

6/8
சிம்ம ராசி
சிம்ம ராசி

சிம்ம ராசி: முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன் தீர ஆலோசிப்பது நல்லது. நிதி பரிவர்த்தனைகளில் கூடுதல் கவனம் தேவை. துணையுடன் ஏற்படும் கருத்து வேறுபாடு, மன உளைச்சலை கொடுக்கலாம். சிவபெருமான் வழிபாடும் பிரதோஷ விரதமும், பிரச்சனைகளை தீர்க்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.

7/8
தனுசு ராசி
தனுசு ராசி

தனுசு ராசி: பணியிடத்தில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். செலவுகள் அதிகரிப்பதால் நிதிநிலை சிறிது பாதிக்கப்படலாம். எதிரிகள் உங்கள் வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். துர்க்கை அம்மன் வழிபாடும், ராகு கால பூஜையும் இன்னல்களை போக்கும் சிறந்த பரிகாரம்.

8/8
பொறுப்புத் துறப்பு
பொறுப்புத் துறப்பு

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

 





Read More