Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் அரசால் அளிக்கப்பட்ட வீட்டில் இருப்பவர்கள் சேர முடியுமா?
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டத்திற்கு பல விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அந்த விதிமுறைகளுக்குட்பட்டு வருபவர்களுக்கு மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
உதாரணமாக, ஏழை, எளிய குடும்பத்தினர் மாதம் ரேஷன் கடைகளில் அரிசி வாங்குபவர்கள் கட்டாயம் இந்த திட்டத்தில் பயனாளியாக தகுதியுடையவர்கள். ஆனால், குடும்பத்தின் ஆண்டு வரும் 2.5 லட்சத்துக்கு மேல் இருக்கக்கூடாது.
குடும்ப உறுப்பினர்களின் மொத்த ஆண்டு வருமானம் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் நிச்சயம் இந்த திட்டத்தில் சேர முடியாது. இதுதவிர, 5 ஏக்கருக்கு மேல் நன்செய் நிலம் வைத்திருப்பவர்கள், 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள் எல்லாம் இந்த திட்டத்தில் பயனாளியாக சேர முடியாது.
வார்டு உறுப்பினரைத் தவிர மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளில் இருக்கும், ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர், எம்எல்ஏ, எம்பி, நகர்மன்ற தலைவர், மேயர் உள்ளிட்டோரின் குடும்பத்தினர் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளியாக சேர தகுதியற்றவர்கள்
அரசு ஊழியர்கள் குடும்பத்தினர், ஓய்வூதியதாரர்கள் எல்லாம் இந்த திட்டத்தில் சேர முடியாது. வருமானவரி, தொழில்வரி செலுத்துபவர்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்களும் இந்த திட்டத்தில் பயனாளியாக முடியாது.
ஆனால், ஒரு குடும்பம் அரசால் வழங்கப்பட்ட வீட்டில் வசிக்கிறது என்றால், அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான விதிமுறைகளுக்குள் வருகிறார்கள் என்றால் நிச்சயம் இந்த திட்டத்தில் சேரலாம். அவர்களுக்கு எந்த தடையும் கிடையாது.
கலைஞர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் சரியான வங்கி கணக்கு எண், தொலைபேசி எண் சரியாக கொடுத்திருப்பதை உறுதிபடுத்திக் கொள்ளவும். இல்லையென்றால் உங்கள் பணம் வேறொருவர் வங்கி கணக்குக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது.
ஜூன் 4 முதல் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இது ஒரு அரிய வாய்ப்பு. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், ஏற்கனவே விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் ஜூன் 4 முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்திருக்கிறது.
அதனால், சரியான ஆவணங்களுடன் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கவும்.