PHOTOS

சனி வக்ர பெயர்ச்சி: நவம்பர் வரை 5 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும், கேட்டது கிடைக்கும்

Sani Vakra Peyarchi: நீதியின் கடவுளான சனி பகவான் ஜூலை 13 ஆம் தேதி வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். இதனால் பல ராசிகளுக்கு விசேஷ பலன்கள் கிடைக்கவுள்ளன. அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Advertisement
1/10
சனி பெயர்ச்சி பலன்கள்
சனி பெயர்ச்சி பலன்கள்

சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி மீனத்தில் பெயர்ச்சி ஆனார். இந்த சனி பெயர்ச்சி இந்த ஆண்டின் மிக முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. இப்போது ஜூலை 13 ஆம் தேதி காலை 09:36 மணிக்கு மீனத்தில் சனி வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார்.

 

2/10
சனி வக்ர பெயர்ச்சி
சனி வக்ர பெயர்ச்சி

சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் நடக்கும். இவர்களுக்கு இந்த காலத்தில் சனி பகவானின் அருளால் வெற்றிகள் குவியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

3/10
ரிஷபம்
ரிஷபம்

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு, சனி வக்ர பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும். இந்த நேரத்தில், ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கலாம். இவை அவர்களுக்கு நன்மை பயக்கும். இப்போது செய்யும் பணிகள் அனைத்தும் சனி பகவானின் அருளால் வெற்றிகரமாக நடந்துமுடியும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும்.

4/10
மிதுனம்
மிதுனம்

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி சுபமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் வெற்றி காண்பார்கள். சுய தொழிலில் லாபமும் உயரும். வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும்.

5/10
கடகம்
கடகம்

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு, சனி வக்கிர பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை ஆதரிக்கும். இந்த நேரத்தில், நிலுவையில் உள்ள உங்கள் வேலைகள் நிறைவடையும். நிதி ரீதியாக இந்த நேரம் லாபகரமானதாக இருக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு இந்த நேரம் லாபகரமானதாக இருக்கும். இனிமையான பேச்சால் பல நன்மைகள் நடக்கும்.

6/10
கும்பம்
கும்பம்

கும்பம்: சனி கும்ப ராசியை ஆளும் கிரகம். மீனத்தில் சனியின் வக்கிரப் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களின் வருமானத்தை அதிகரிக்கும். இந்த சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் பொருளாதார நிலை மேம்படும். பண வருகையால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். சனியின் அருளால், அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும்.

7/10
மீனம்
மீனம்

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு, சனியின் வக்கிர இயக்கம் நன்மை பயக்கும். பழைய சச்சரவுகள் முடிவடையும். உறவுகளில் இனிமை வரும். உங்கள் பணிகள் பாராட்டப்படும். திருமண வாழ்க்கையில் உங்களுக்கு கிடைக்கும் அன்பு அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

8/10
சனி பகவானின் அருள் பெற
சனி பகவானின் அருள் பெற

சனி பகவானின் பரிபூரண அருள் பெற, "ஓம் காகத்வஜாய வித்மஹே, கட்க அஸ்தாய தீமஹி, தன்னோ மந்த ப்ரசோதயாத்" என்ற சனி காயத்ரொ மந்திரத்தை தினமும் பாராயணம் செய்வது நல்லது.

9/10
ஏழரை சனி
ஏழரை சனி

இது தவிர சனி பெயர்ச்சி கெடு விளைவுகள், ஏழரை சனி தோஷங்கள் நீங்க தினமும் சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை சொல்லாம். இவை சனி பகவானின் அருள் கிடைக்கச்செய்யும்.

10/10
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.





Read More