PHOTOS

குரு அதிசார பெயர்ச்சி... சில ராசிகளுக்கு சந்தோஷம்... சில ராசிகளுக்கு சிக்கல்... உங்களது ராசி என்ன?

குரு பெயர்ச்சி 2025: தேவர்களின் குரு என்று அழைக்கப்படும் குரு பகவான், ஆண்டுக்கு ஒரு முறை பெயர்ச்சியாகும் சுப கிரகம். ஆனால் 2025 ஆம் ஆண்டில் மூன்று முறை தனது ராசியை மாற்றிக் கொள்கிறார். ஜோதிடத்தில் இதனை அதிசார பெயர்ச்சி என்கின்றனர்.

Advertisement
1/10
மிதுனத்தில் குரு பெயர்ச்சி
மிதுனத்தில் குரு பெயர்ச்சி

மிதுனத்தில் குரு பெயர்ச்சி: கடந்த மே மாதம் 14ஆம் தேதி, குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். சனி பெயர்ச்சிக்கு அடுத்தபடியாக, ஜோதிடத்தில் மிகவும் மிக்கத்துவம் வாய்ந்த பெயர்ச்சி குரு பெயர்ச்சி.

2/10
குரு அதிசார பெயர்ச்சி
குரு அதிசார பெயர்ச்சி

குரு அதிசார பெயர்ச்சி: பொதுவாக குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல, சுமார் ஒரு வருட காலம் எடுத்துக் கொள்ளும் நிலையில், தற்போது ஆறு மாதங்களிலேயே கடக ராசிக்கு செல்கிறார்.

3/10
கடகத்தில் குரு பெயர்ச்சி
கடகத்தில் குரு பெயர்ச்சி

கடகத்தில் குரு பெயர்ச்சி: வரும் அக்டோபர் மாதம் 18ம் தேதி, குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆவார். கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு, டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி மீண்டும் மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.

4/10
குருவின் இந்த அதிசார பெயர்ச்சி
குருவின் இந்த அதிசார பெயர்ச்சி

குருவின் இந்த அதிசார பெயர்ச்சி: சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிகளுக்கு சுமாரான பலன்களையும் கொடுக்கும் என்று ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். குருவின் அருளால் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகளையும், குருவின் கெடுபலன்கள் பாதிக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகளையும் அறிந்து கொள்ளலாம்.

5/10
ரிஷப ராசி
ரிஷப ராசி

ரிஷப ராசி: நிதிநிலை வலுவாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் தோன்றும். பழைய முதலீடுகளில் இருந்து எதிர்பாராத வகையில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையில் தொழிலில் முன்னேற்றம் காணலாம்.

6/10
மிதுன ராசி
மிதுன ராசி

மிதுன ராசி: தன்னம்பிக்கை சிறப்பாக இருக்கும். முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் வாய்ப்பு உண்டு. பதவி உயர்வு சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம்.

7/10
கன்னி ராசி
கன்னி ராசி

கன்னி ராசி: புதிய வாய்ப்புகள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இது எதிர்கால வளர்ச்சிக்கு உதவும்.

8/10
சிரமங்களை சந்திக்கும் மூன்று ராசிகள்
சிரமங்களை சந்திக்கும் மூன்று ராசிகள்

சிரமங்களை சந்திக்கும் மூன்று ராசிகள்: கடக ராசியினருக்கு நிதி இழப்பு ஏற்படலாம். விருச்சிக ராசியினருக்கு பணியிடத்தில் பிரச்சனைகளை சமாளிக்க போராட வேண்டி இருக்கும். மகர ராசியினருக்கு வருமானத்தை விட அதிக செலவு செய்ய நேரிடலாம்.

9/10
கலவையான பலன்களை பெறும் ராசிகள்
கலவையான பலன்களை பெறும் ராசிகள்

கலவையான பலன்களை பெறும் ராசிகள்: மேஷம் சிம்மம், துலாம் தனுசு, கும்பம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு, சுப பலன்கள் இல்லை என்றாலும், கெடு பலன்கள் இருக்காது. பொறுமையுடன் செயல்பட்டால் பிரச்சனைகள் எல்லாவற்றையும் சமாளித்து விடலாம். அஞ்சத் தேவையில்லை.

10/10
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.





Read More