Gratuity Calculator: Gratuity என்றால் என்ன? இதற்கான கணக்கீடு என்ன? அடிப்படை சம்பளத்திற்கு ஏற்ப யாருக்கு எவ்வளவு பணிக்கொடை கிடைக்கும்?
நீங்கள் உங்கள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து 5 வருடங்கள் ஆகிவிட்டதா? உங்கள் நிறுவனம் 1972 ஆம் ஆண்டு பணிக்கொடை செலுத்தும் சட்டத்தின் கீழ் உள்ளதா? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஒரே நிறுவனத்தில் 5 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக பணிபுரியும் ஊழியர்கள் பணிக்கொடையை பெறுவதற்கான தகுதியை பெறுகிறார்கள். ஒரே நிறுவனத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு வெகுமதியாக பணிக்கொடை வழங்கப்படுகின்றது
பணிக்கொடை கணக்கீட்டிற்கு 6 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட எந்தவொரு பணிக்காலமும் ஒரு முழு ஆண்டாகக் கணக்கிடப்படும். 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள், 1972 ஆம் ஆண்டு பணிக்கொடை வழங்கல் சட்டத்தின்படி பணிக்கொடை செலுத்த வேண்டும்.
பின்வரும் சூழ்நிலைகளில் பணிக்கொடை வழங்கப்படுகிறது: பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன், 5 ஆண்டுகள் தொடர்ச்சியான சேவையை முடித்த பிறகு, பணியில் இருக்கும்போது விபத்து அல்லது நோய் காரணமாக மரணம் அல்லது இயலாமை ஏற்பட்டால், பணிக்கொடை வயதை எட்டும்போது பணிக்கொடை அளிக்கப்படுகின்றது.
பணிக்கொடை தொகையை கணக்கிட ஒரு பணியாளரின் ஆண்டுகளின் எண்ணிக்கையும் கடைசியாக பெறப்பட்ட அடிப்படை சம்பளமும் பயன்படுத்தப்படுகிறது.
பணிக்கொடையைக் கணக்கிடுவதற்கான சூத்திரம் என்ன? பணிக்கொடை=(கடைசியாகப் பெற்ற சம்பளம் x சேவை ஆண்டுகளின் எண்ணிக்கை) X 15/26. இங்கே, 15 என்பது வருடத்திற்கு 15 நாட்கள் ஊதியத்தைக் குறிக்கிறது, மேலும் 26 என்பது ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து, ஒரு மாதத்தில் 30 நாட்களைக் குறிக்கிறது.
5 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு எவ்வளவு கிராஜுவிட்டி கிடைக்கும்? ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். 8 ஆண்டுகள் மற்றும் 8 மாத சேவைக்குப் பிறகு கடைசியாகப் பெற்ற சம்பளம் ரூ.56,000, ரூ.72,000 மற்றும் ரூ.84,000 ஆக இருந்தால், பணிக்கொடை எவ்வளவு கிடைக்கும் என இங்கே காணலாம். 8 ஆண்டுகள் மற்றும் 8 மாத 9 ஆண்டுகளாகக் கருதப்படும்.
ரூ.56,000 அடிப்படை சம்பளம், 8 ஆண்டுகள் மற்றும் 8 மாத சேவை (9 ஆண்டுகளாக ரவுண்ட் ஆஃப் செய்யப்பட்டுள்ளது) கொண்ட ஒரு ஊழியருக்கு பணிக்கொடையை கணக்கிடுவோம். பணிக்கொடை = (56,000 × 9 × 15) ÷ 26, பணிக்கொடை = ரூ. 2,90,769
ரூ. 72,000 அடிப்படை சம்பளம், 8 ஆண்டுகள் மற்றும் 8 மாத சேவை (9 ஆண்டுகளாக ரவுண்ட் ஆஃப் செய்யப்பட்டுள்ளது) கொண்ட ஒரு ஊழியருக்கு பணிக்கொடை கணக்கிடுவோம். கிராஜுவிட்டி= (72,000 × 9 × 15) ÷ 26. கிராஜுவிட்டி = ரூ. 3,73,846
ரூ.64,000 அடிப்படை சம்பளம், 8 ஆண்டுகள் மற்றும் 8 மாத சேவை (9 ஆண்டுகளாக ரவுண்ட் ஆஃப் செய்யப்பட்டுள்ளது) கொண்ட ஒரு ஊழியருக்கு பணிக்கொடையை கணக்கிடுவோம். பணிக்கொடை = (84,000 × 9 × 15) ÷ 26, பணிக்கொடை = ரூ.4,36,153
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இந்தத் தகவல் பொதுவான கணக்கீடுகளை அடிப்படையாகக் கொண்டது. சரியான தொகையை அறிய, உங்கள் நிதி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது நிறுவனத்தின் மனிதவளத் துறையிலிருந்து தகவலைப் பெறலாம்.