PHOTOS

மேஷம் முதல் மீனம் வரை... இந்த வார ராசிபலன்... சிலருக்கு சூப்பர்... சிலருக்கு சுமார்

Weekly Horoscope: ஜூலை 7ம் தேதியுடன் துவங்கும்  இந்த வாரத்தில், சில ராசிகளுக்கு  பண வரவையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் என்றும், அதே சமயம் சில ராசிகளுக்கு சுமாரான வாரமாக இருக்கும் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

Advertisement
1/13
மேஷ ராசிக்கான இந்த வார பலன்கள்
மேஷ ராசிக்கான இந்த வார பலன்கள்

மேஷம்: புதிய சக்தி மற்றும் தைரியம் உண்டாகும். பணியிடத்தில் சவால்களை சந்திக்கலாம் என்றாலும், உங்கள் திறமையால் அனைத்தையும் சமாளித்து விடுவீர்கள். வீட்டில் நிலவு வந்த பிரச்சனையும் முடிவுக்கு வரும். நிதி விஷயங்களில் செலவுகளை கட்டுப்படுத்தினால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

 

2/13
ரிஷப ராசிக்கான இந்த வார பலன்கள்
ரிஷப ராசிக்கான இந்த வார பலன்கள்

ரிஷபம்: சிறிது குழப்பமான மனநிலை ஏற்படலாம். உங்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துவதால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வேலையில் முழு கவனம் செலுத்துவது நல்லது இல்லையென்றால் விமர்சனங்களை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும்.

3/13
மிதுன ராசிக்கான இந்த வார பலன்கள்
மிதுன ராசிக்கான இந்த வார பலன்கள்

மிதுனம்: கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும். வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். சொத்துக்கள் தொடர்பான முடிவை எடுப்பதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது. ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகமாகும்.

4/13
கடக ராசிக்கான இந்த வார பலன்கள்
கடக ராசிக்கான இந்த வார பலன்கள்

கடகம்: வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையிலான வாய்ப்புகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எதிர்பார்த்த நல்ல செய்தி உங்களுக்கு வந்து சேரும். கடின உழைப்பிற்கான பலன்கள் சிறிது தாமதமாகலாம். 

5/13
சிம்ம ராசிக்கான இந்த வார பலன்கள்
சிம்ம ராசிக்கான இந்த வார பலன்கள்

சிம்மம்: சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது. உங்கள் முன்னுரிமைகளில் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கையில் மிக முக்கிய முடிவு ஒன்று எடுக்க நேரிடலாம். பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். உடல்நல பிரச்சினைகளும் நீங்கி நிவாரணம் கிடைக்கும்.

6/13
கன்னி ராசிக்கான இந்த வார பலன்கள்
கன்னி ராசிக்கான இந்த வார பலன்கள்

கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உடல்நல பாதிப்பு காரணமாக செலவு அதிகரிக்கலாம். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதால், பல எதிர்கால சிக்கல்கள் தவிர்க்கப்படும். மாணவர்கள் கடின உழைப்பை காட்ட வேண்டிய நேரம் இது. பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு.

7/13
துலாம் ராசிக்கான இந்த வார பலன்கள்
துலாம் ராசிக்கான இந்த வார பலன்கள்

துலாம்: புதிய வேலையை தொடங்குவதற்கு முன், நன்றாக யோசித்து முடிவு செய்யவும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கக்கூடும். உடல்நிலை சிறப்பாகவே இருக்கும். வேலை செய்யும் இடத்திலும் உங்கள் திறமை பாராட்டப்படும். மதிப்பும் மரியாதையும் கூடும்.

8/13
விருச்சிக ராசிக்கான இந்த வார பலன்கள்
விருச்சிக ராசிக்கான இந்த வார பலன்கள்

விருச்சிகம்: நிலுவையில் உள்ள பணிகள் நிறைவடையும். வேலையில் அல்லது தொழில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

9/13
தனுசு ராசிக்கான இந்த வார பலன்கள்
தனுசு ராசிக்கான இந்த வார பலன்கள்

தனுசு: உங்கள் லட்சியங்கள் நிறைவேறும் காலம் இது. நேர்மறை மாற்றங்கள் உண்டாகும். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்புகள் பலன் கொடுக்கும். மனைவியுடன் கருத்து வேறுபாடு இருக்கலாம். எனினும் விரைவில் தீர்வு உண்டாகும்.

10/13
மகர ராசிக்கான இந்த வார பலன்கள்
மகர ராசிக்கான இந்த வார பலன்கள்

மகரம்: நிதானம் மற்றும் பொறுமையுடன் செயல்பட வேண்டி இருக்கும். எனினும் சூழ்நிலையை சிறப்பாக சமாளிப்பீர்கள். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்க கூடும். செலவுகளை கட்டுப்படுத்துவது முக்கியம். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

11/13
கும்ப ராசிக்கான இந்த வார பலன்கள்
கும்ப ராசிக்கான இந்த வார பலன்கள்

கும்பம்: வேலை மாற்றம் அல்லது இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சிறுபாக்குவாதங்கள் உண்டாகலாம். எனினும் மனம் திறந்து பேசுவதால், பிரச்சனைகள் தீரும்.

12/13
மீன ராசிக்கான இந்த வார பலன்கள்
மீன ராசிக்கான இந்த வார பலன்கள்

மீனம்: பணியிடத்தில் புதிய பொறுப்புகள் மற்றும் அங்கீகாரம் கிடைக்கலாம். நிதிநிலை சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். படைப்பாற்றல் கொண்டவர்களுக்கு தங்கள் திறனை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் தேடி வரும். வணிகத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகலாம்.

13/13

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.





Read More