PHOTOS

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : ரேஷன் கார்டு இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாமா?

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ரேஷன் கார்டு இல்லாதவர்கள் விண்ணப்பிக்க முடியுமா? தெரிந்து கொள்ளுங்கள்

Advertisement
1/11

தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்துக்கான விரிவாக்கப் பணிகள் தொடங்கிவிட்டன. தகுதியான பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் நேரடியாக வீடுகளுக்கே சென்று தன்னார்வலர்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

 

2/11

இதனால், இந்த திட்டத்தில் நீண்ட நாட்களாக சேர வேண்டும் என ஆவலில் இருந்த மக்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கின்றனர். ஜூலை 15 ஆம் தேதி எப்போது வரும் என காத்திருக்கிறார்கள்.

3/11

ஏனென்றால் ஜூலை 15 ஆம் தேதியன்று தான் பூர்த்தி செய்யப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களை உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கொடுக்க முடியும்.

4/11

இந்த முகாமில் கொடுக்கப்படும் விண்ணப்பங்கள் மீது அதிகபட்சம் 45 நாட்களுக்குள் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

5/11

அதனால், செப்டம்பர் மாதம் 15 தேதிகளுக்குப் பிறகு ஜூலை 15 ஆம் தேதி கொடுக்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களுக்கான ரிசல்ட் தெரிந்துவிடும்.

6/11

அதாவது, உங்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா, இல்லை நிராகரிக்கப்பட்டதா, பரிசீலனையில் இருக்கிறதா என்பதை விண்ணப்பித்த பெண்கள் தெரிந்து கொள்ளலாம்.

7/11

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப நிலையை http://kmut.tn.gov.in/ என்ற வெப்சைட்டில் தெரிந்து கொள்ளலாம். இதற்கு உங்களுடைய ஆதார் கார்டு, ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மட்டும் இருந்தால் போதும். 

8/11

இந்த வெப்சைட்டில் நீங்கள் அதை உள்ளிட்டதும் உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும் அதனை வெப்சைட்டில் போட்டால் உங்களின் விண்ணப்ப நிலையை தெரிந்துகொள்ளலாம். 

9/11

இதில் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ரேஷன் கார்டு இல்லாதவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாது. ஆதார் கார்டு இருந்தும் ரேஷன் கார்டு இல்லை என்றால் விண்ணப்பிக்க முடியாது.

10/11

மேலும், நீங்கள் கொடுக்கும் ஆதார் எண், இந்த திட்டத்துக்காக கொடுக்கப்படும் உங்களின் வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். வங்கி கணக்கு எண்ணில் இருக்கும் மொபைல் எண் தான்ஆதாரில் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆதாரில் வேறு மொபைல் எண், வங்கி கணக்கு எண்ணில் வேறு மொபைல் எண் இருக்கக்கூடாது. 

11/11

அப்படியிருந்தால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டதா, இல்லையா என்பதை அறியமுடியாது. எனவே, புதியதாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும்.





Read More