PHOTOS

கலைஞர் மகளிர் உரிமை தொகை: நாளை விண்ணப்பிக்க கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

கலைஞர் உரிமை தொகைக்கு நாளை (ஜூன் 04) விண்ணப்பிக்கலாம்.

Advertisement
1/5

கலைஞர் மகளிர் உரிமை தொகையில் இணைவதற்காக நாளை (ஜூன் 04) தமிழகம் முழுவதும் முகாம்கள் நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 9000 இடங்களில் நடைபெற உள்ளது. 

2/5
பொருளாதார தகுதி
பொருளாதார தகுதி

குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும். ஆண்டுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கு குறைவான மின்சாரம் பயன்படுத்தி இருக்க வேண்டும். 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ளவர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். 

3/5
தளர்வுகள்
தளர்வுகள்

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களுக்கு இந்த உரிமை தொகை வழங்கப்படாது. தொடர் சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் பெறுபவர்களும் விண்ணப்பிக்க முடியாது. இதில் அரசு எந்த தளர்வும் அளிக்கவில்லை. அதே சமயம் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை பெறுபவர்களுக்கு உரிமைத் தொகையும் சேர்த்து வழங்கப்படும்.

4/5
எங்கு நடைபெறும்?
எங்கு நடைபெறும்?

நாளை (ஜூன் 4) இத்திட்டத்தின் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாம்கள் அருகில் உள்ள ரேஷன் கடைகளிலேயே நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 34,811 ரேஷன் கடைகள் உள்ளன. ஆனால், தற்போது 9000 ரேஷன் கடைகளில் மட்டும் தான் இந்த முகாம்கள் நடைபெற உள்ளது. 

5/5
என்னென்ன கொண்டு செல்ல வேண்டும்
என்னென்ன கொண்டு செல்ல வேண்டும்

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் இணைய விண்ணப்பங்களுடன் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, மின் கட்டண அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றை விண்ணப்பதாரர்கள் கொண்டு செல்ல வேண்டும். மேலும், வங்கி கணக்குடன் ஆதார் அட்டை இணைக்கப்பட்டுள்ளதா? எனது உறுதி செய்து கொள்ள வேண்டும். அதேபோல், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் போனை உடல் எடுத்து செல்ல வேண்டும். 





Read More