Double centuries in both odi and test: ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என இரண்டு ஃபார்மெட்டிலும் இரட்டை சதம் அடித்த வீரர்களின் பட்டியல் இங்கே.
2010ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்தார். அவர் 200 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீரர் ஆனார். சச்சின் டெண்டுல்கர் டெஸ்டில் 6 இரட்டை சதங்களை விளாசி உள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்கவை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் (2004) 241* மற்றும் டாக்காவில் (2004) வங்கதேசத்திற்கு எதிராக 248* ஆகும்.
2011ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சேவாக் இரட்டை சதம் அடித்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் ஆனார். அதேபோல் டெஸ்ட்டில் அவர் 6 இரட்டை சதங்களை விளாசி உள்ளார். மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக (2004) 309 மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக (2008) 319 என இரண்டு மூன்று சதங்களை அடித்தார்.
2014ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்தார். அவர் ஒருநாள் போட்டியில் மொத்தம் மூன்று இரட்டை சதங்களை விளாசி உள்ளார். டெஸ்ட்டில் 2019ஆம் ஆண்டு தென்னாப்பிருக்காவுக்கு எதிராக 212 ரன்களை அடித்தார். இதன் மூலம் ஒருநாள் மாற்றும் டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் இணைந்தார்.
2015 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக 147 பந்துகளில் 215 ரன்கள் எடுத்ததன் மூலம், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இந்தியர் அல்லாத வீரர் என்ற பெருமையை கிறிஸ் கெயில் பெற்றார். டெஸ்ட் போட்டிகளில், கெயிலின் மறக்கமுடியாத இன்னிங்ஸ்களில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 317 ரன்களும், இலங்கைக்கு எதிராக 333 ரன்களும் அடங்கும்.
ஜனவரி 2023 இல், ஹைதராபாத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 208 ரன்கள் எடுத்து ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த இளைய இந்தியர் என்ற பெருமையை சுப்மான் கில் பெற்றார். டெஸ்டில் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 269 ரன்களை விளாசி. இரண்டு பார்மெட்டிலும் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.