PHOTOS

மகா சிவராத்திரி 2025: சிவனுக்கு பிடித்த ராசிகள்... இவர்களுக்கு தோல்வியே கிடையாது, உடனிருந்து காப்பார் ஈசன்

Maha Shivratri 2025: இன்று மகா சிவராத்திரி பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. இந்த திருநாளில், சிவ பெருமானுக்கு பிடித்த ராசிகள் பற்றி தெரிந்துகொள்ளலாம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா?

Advertisement
1/10
சிவ பெருமான்
சிவ பெருமான்

சிவ பெருமான் அனைவர் மீதும் சமமான அருளை பொழிகிறார். எனினும், ஜோதிட ரீதியாக சில ராசிகள் இவருக்கு மிகவும் பிடித்த ராசிகளாக இருக்கிறார்கள். வாழ்நாள் முழுவதும் இவர்கள் அருகில் இருந்து சிவ பெருமான் இவர்களை காத்து ரட்சிக்கிறார். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

2/10
மேஷம்
மேஷம்

மேஷம்: மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இவர்களுக்கு அனுமன் சிறப்பு ஆசிகளை வழங்குகிறார். ஹனுமான் சிவபெருமானின் அவதாரமாகக் கருதப்படுகிறார். எனவே, சிவபெருமானுக்குப் பிடித்த ராசிகளில் முதல் ராசி மேஷ ராசி. சிவபெருமானின் ஆசிர்வாதத்தால், அவர்களுக்கு வாழ்வில் வரும் தடைகள் விலகி, குடும்ப வாழ்க்கை, கல்வி, வேலை, தொழில் என அனைத்திலும் பெரிய முன்னேற்றத்தை அடைகிறார்கள்.

3/10
கடகம்
கடகம்

கடகம்: கடக ராசியின் அதிபதி சந்திரன். சந்திரனை சிவபெருமான் தலையில் அணிந்துள்ளார். தலையில் சூடியுள்ள சந்திரனை போல, கடக ராசிக்காரர்களையும் சிவ பெருமான் தன் உள்ளத்தில் ஏந்தி அருள் புரிகிறார். கடக ராசிக்காரர்களும் சிவபெருமானுக்கு மிகவும் பிரியமானவர்கள். இவர்கள் மகிழ்ச்சியானவர்கள், சகிப்புத்தன்மை கொண்டவர்கள், பொறுமையானவர்கள். வாழ்வில் எந்த சிரமம் வந்தாலும், எளிதாக சமாளிக்கும் திறன் கொண்டவர்கள். சனி பெயர்ச்சி காலங்களில் சிவன் அருளால் இவர்கள் அதிக துன்பத்திற்கு ஆளாகாமல் இருக்கிறார்கள். இவர்களது இந்த குணங்களுக்காகவே சிவன் இவர்களுக்கு கூடுதல் அருளை பொழிகிறார்.

4/10
துலாம்
துலாம்

துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். சிவபெருமானுக்குப் பிடித்த ராசிகளில் துலாம் ராசியும் அடங்கும். சிவபெருமானின் அருளால், இந்த ராசிக்காரர்கள் அற்புதமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்வில் செல்வத்திற்குப் பஞ்சம் இருப்பதில்லை. மேலும், துலாம் சாரிக்காரர்கள் கவர்ச்சிகரமான ஆளுமையைக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் நல்ல பேச்சாற்றலும் பக்தியும் கொண்டவர்கள். கடினமான காலங்களில் சிவ பெருமான் இவர்களை உடனிருந்து காக்கிறார்.

5/10
மகரம்
மகரம்

மகரம்: மகர ராசியின் அதிபதி சனி பகவான். சனி பகவான் சிவனை தனது தெய்வமாகக் கருதும் கிரகம். சனி பகவானும் சிவனை வழிபடுபவர்களுக்கு தீங்கு விளைவிப்பதிலை. இந்த ராசிக்காரர்களை கடினமான காலங்களில் சிவபெருமான் தானே பாதுகாக்கிறார். குறிப்பாக சிவனருளால், ஏழரை சனி தாக்கம் கூட இவர்கள் மீது குறைவாகவே இருக்கின்றது.

6/10
கும்பம்
கும்பம்

கும்பம்: கும்ப ராசியின் அதிபதியும் சனி பகவான்தான். இந்த ராசிக்காரர்களையும் சிவ பெருமானுக்கு மிகவும் பிடிகும். கும்ப ராசிக்காரர்கள் உண்மையுள்ளவர்கள், நேர்மையானவர்கள், மற்றவர்களுக்கு நல்லது செய்பவர்கள். ஆகையால், சிவபெருமான் அவர்களிடம் திருப்தி அடைந்து, அவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் மிகுந்த மரியாதை, மகிழ்ச்சி மற்றும் செழிப்பை அளிக்கிறார்.

7/10
சனி பகவான்
சனி பகவான்

சிவ பெருமான் எளிமையான தெய்வம். அவருக்கு ஆடம்பர அலங்காரமோ, விலை உயர்ந்த காணிக்கைகளோ தேவையில்லை. ஆனால் அவர் அபிஷேக பிரியர். தண்ணீர் கொண்டு அபிஷேகம் செய்து, திருநீர் பூசி, திலகம் இட்டு, வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை செய்தால் அவர் மனம் மகிழ்ந்து அருள் புரிகிறார்.

8/10
ஏழரை சனி
ஏழரை சனி

பொதுவாக சிவ பக்தர்களை சனி பகவான் சோதிப்பதில்லை. சனி பெயர்ச்சி (Sani Peyarchi), ஏழரை சனி காலங்களில் சிவ பெருமானை வேண்டினால், சிவனருளால் சனி பகவானின் தாக்கங்கள் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

9/10
மகா சிவராத்திரி 2025
மகா சிவராத்திரி 2025

மகா சிவராத்திரி அன்றும், பிற மாத சிவராத்திரி நாட்களிலும், திங்கட்கிழமைகளிலும் சிவ பெருமானை மனமாற வேண்டி, சிவ புராணம், பில்வாஷ்டகம், வைத்தியநாதாஷ்டகம், லிங்காஷ்டகம் போன்ற சிவ ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்வதால் சிவன் அருள் கிட்டும். இவற்றை கூற முடியாதவர்கள் 'ஓம்நமசிவாய' என்று மனதார பிரார்த்தனை செய்தாலே ஈசன் அருள் புரிவார்.

10/10
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.





Read More