PHOTOS

PM Kisan 20வது தவணை இந்த நாளில் வருகிறது: சிக்காமல் கிடைக்க இந்த 4 விஷயங்கள் அவசியம்

PM Kisan Latest News: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்? இது தவறாமல் கிடைக்க 4 விஷயங்களை செய்ய வேண்டியது மிக அவசியம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Advertisement
1/10
பிஎம் கிசான் சம்மான் நிதி யோஜனா
பிஎம் கிசான் சம்மான் நிதி யோஜனா

இந்திய விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்க மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, பல திட்டங்களையும் செயல்படுத்துகிறது. விவசாயிகளுக்கு உதவும் மத்திய அரசின் திட்டங்களில் ஒன்று பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா. இந்திய அரசின் இந்தத் திட்டத்தின் மூலம், நாட்டின் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

2/10
What is PM Kisan Scheme
What is PM Kisan Scheme

பிஎம் கிசான் திட்டம் டிசம்பர் 1, 2018 அன்று செயல்படுத்தப்பட்டது. அதன் பிறகு விவசாயிகளுக்கு 19 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இப்போது விவசாயிகள் இந்தத் திட்டத்தின் 20வது தவணைக்காகக் காத்திருக்கிறார்கள்.

3/10
பிஎம் கிசான்
பிஎம் கிசான்

பிஎம் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் 20வது தவணை ஜூன் மாதத்திலேயே தகுதியுள்ள விவசாயிகளின் கணக்குகளில் வரவிருந்தது. இருப்பினும், அப்படி நடக்கவில்லை. ஜூன் மாதம் இப்போது முடிந்து ஜூலை மாதம் தொடங்கிவிட்டது. இதுவரை விவசாயிகளின் கணக்குகளுக்கு பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் 20வது தவணை வரவில்லை.

4/10
பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?
பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?

பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 18 ஆம் தேதி பீகாரில் உள்ள மோதிஹரிக்கு வருகை தர உள்ளதாகவும், அதே நாளில் 20வது தவணை வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது தொடர்பாக இதுவரை அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் செய்யப்படவில்லை.

5/10
பிஎம் கிசான் 20வது தவணை
பிஎம் கிசான் 20வது தவணை

PM கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும், விவசாயிகளுக்கு ரூ.6,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த பணம் தலா இரண்டாயிரம் ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்த முறை 20வது தவணை வழங்கப்பட உள்ளது.

6/10
பிஎம் கிசான் 20வது தவணை
பிஎம் கிசான் 20வது தவணை

விவசாயிகளின் பிஎம் கிசான் 20வது தவணை சிக்கிக்கொள்ளாமல், எந்த தடையும் இல்லாமல் சரியான நேரத்தில் கணக்கில் வர வேண்டும் என்றால், நான்கு முக்கிய விஷயங்களை செய்துமுடிக்க வேண்டும். அவற்றை பற்றி இங்கே காணலாம்.

7/10
e-KYC செய்வது எப்படி
e-KYC செய்வது எப்படி

PM Kisan Yojana-வின் பலனைப் பெற e-KYC-ஐச் செய்வது அவசியம். அருகிலுள்ள பொது சேவை மையத்திற்கு (CSC) இதைச் செய்யலாம். அல்லது ஆன்லைனில் pmkisan.gov.in வலைத்தளம் அல்லது PM Kisan செயலியிலிருந்து e-KYC-யையும் செய்யலாம். வலைத்தளம் மூலம் e KYC செய்ய, முதலில் pmkisan.gov.in என்ற PM Kisan இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும். e-KYC பிரிவுக்குச் சென்று உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். பின்னர் OTP மூலம் செயல்முறையை முடிக்கவும். Farmer Corner -க்குச் சென்று உங்கள் நிலம் மற்றும் வங்கி விவரங்களைச் சரிபார்க்கவும். அவற்றில் ஏதேனும் தவறு இருந்தால், அதைச் சரிசெய்து மீண்டும் சமர்ப்பிக்கவும்

8/10
ஆதார் அட்டையை வங்கிக்கணக்குடன் இணைத்தல்
ஆதார் அட்டையை வங்கிக்கணக்குடன் இணைத்தல்

பிஎம் கிசான் பயனாளிகள் தங்கள் ஆதார் அட்டையை வங்கிக் கணக்குடன் இணைப்பது மிக அவசியமாகும். வங்கிக் கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படவில்லை என்றால், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் 20வது தவணை சிக்கிக்கொள்ளலாம். முன்னரும் இந்தக் காரணத்தினால், பல விவசாயிகளின் கணக்குகள் செயலிழந்துவிட்டன. எனவே விரைவாக வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பது நல்லது.

9/10
நில சரிபார்ப்பு
நில சரிபார்ப்பு

விவசாயிகளின் நிலம் மற்றும் விவசாயம் தொடர்பான ஆவணங்கள் சரிபார்க்கப்படவில்லை என்றால், பிஎம் கிசான் பயனாளிகள் பட்டியலில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்படலாம். ஆகையால் உங்கள் நில சரிபாரப்பை செய்து முடிக்க வேண்டியது மிக அவசியம்.

10/10
விவசாயி ஐடி
விவசாயி ஐடி

பிஎம் கிசான் தொகையை பெற விவசாயி ஐடி -ஐ வைத்திருப்பது மிக அவசியம் இதை பெற, முதலில் பிஎம் கிசான் சம்மான் நிதி யோஜனாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://pmkisan.gov.in/ க்குச் செல்லவும். அதில்  New Farmer Registration டேபைக் கிளிக் செய்து உங்கள் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிடவும். அதன் பிறகு உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, கேப்ட்சாவை உள்ளிட்டு OTP ஐ உள்ளிடவும். ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும். அதை உள்ளிட்டு விவரங்களைச் சரிபார்க்கவும். இதற்குப் பிறகு திறக்கும் ஒரு படிவத்தில் உங்கள் வகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ரேஷன் கார்டு எண்ணை உள்ளிட்டு, பிஎம் கிசான் மான்தன் யோஜனாவையும் தேர்ந்தெடுக்கவும். பிறகு குடும்ப விவரங்களை நிரப்பி மீதமுள்ள தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களின் பொருத்த மதிப்பெண் 100 ஆக மாறினால், விவசாயி ஐடி விரைவில் உருவாக்கப்படும். அதன் பிறகு விவசாயி ஐடி அட்டை உங்கள் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பப்படும்.





Read More