PHOTOS

சனி பெயர்ச்சி 2025: ஏழரை நாட்டு சனியால் அவதிப்படும் 3 ராசிகள்... தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்

Sani Peyarchi 2025 & Ezharai Nattu Sani: சனி பகவான் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுப்பதால் நீதி கடவுள் என அழைக்கப்படுகிறார். சனிப்பெயர்ச்சியை பொறுத்துதான் ஏழரை நாட்டு சனி காலம் தீர்மானிக்கப்படுகிறது.

Advertisement
1/9
சனி பெயர்ச்சி 2025
சனி பெயர்ச்சி 2025

சனி பெயர்ச்சி 2025: சனீஸ்வரர் கர்ம வினைகளை போக்கும் நீதிபதி. சனிப்பெயர்ச்சி ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சனிபகவான் எந்த ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் என்பதை பொறுத்து ஏழரை நாட்டு சனி காலம் தீர்மானிக்கப்படுகிறது.

 

2/9
சனி பகவான்
சனி பகவான்

சனி பகவான்: தற்போது மீன ராசியில் சஞ்சரித்து வரும் நிலையில், கும்ப ராசியினருக்கு பாத சனிக்காலமும், மீன ராசியினருக்கு ஜென்ம சனிக்காலமும், மேஷ ராசியினருக்கு விரய சனி காலமும் தொடங்கி உள்ளது.

3/9
மேஷ ராசி
மேஷ ராசி

மேஷ ராசியினருக்கு சனிப்பெயர்ச்சியினால் விரைய சனி காலம் தொடங்கியுள்ள நிலையில், இதன் பாதிப்புகள் அதிகம் இருக்காது என்றாலும், வரும் ஜென்ம சனி காலத்தை சமாளிக்க இப்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சோம்பலை விட்டு ஒழிப்பதும், நிதி ரீதியான திட்டமிடனும் பிரச்சனையை சமாளிக்க உதவும்.

4/9
கும்ப ராசி
கும்ப ராசி

கும்ப ராசியினருக்கு பாத சனி காலம் தொடங்கியுள்ள நிலையில், இவர்களுக்கும் ஏழரை நாட்டு சனி பாதிப்பு சிறிது குறைவாகவே இருக்கும். சனியைப் போல் கெடுப்பார் இல்லை, சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை என்பார்கள். இன்னல்கள் நீங்கி இன்பம் பெற தான தர்மங்கள் செய்வது பலன் அளிக்கும்.

5/9
மீன ராசி
மீன ராசி

மீன ராசியினருக்கு ஜென்ம சனி காலம் தொடங்கியுள்ள நிலையில், இவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொதுவாக ஜென்ம சனி காலம், பணக்கஷ்டத்தையும் மனக்கஷ்டத்தையும் கொடுக்கக் கூடியது. சனி பகவான் உங்களிய மிகவும் சோதிப்பார். எனினும் நல்ல உள்ளம் கொண்டவர்களை கைவிட மாட்டார்.

6/9
ஏழரை நாட்டு சனி
ஏழரை நாட்டு சனி

ஏழரை நாட்டு சனி காலத்தில், கெடு பலன்களை குறைக்க, தான தர்மங்களை தாராளமாக செய்ய வேண்டும். ஏழை எளியவர்களுக்கு உதவுவது சனி பகவானுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கருணை மனம் கொண்டவர்களை அவர் சோதிக்க மாட்டார்.

7/9
சனி பரிகாரங்கள்
சனி பரிகாரங்கள்

சனி பரிகாரங்கள்: சனிக்கிழமைகளில் நவக்கிரகங்களை வணங்குவதோடு சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும், தினமும் கோளறு பதிகத்தை பாராயணம் செய்வதும் பலன் தரும்.

8/9
சனிபகவான்
சனிபகவான்

சனிபகவானின் மனதை குளிர்விக்க, எள், கருப்பு உளுத்தம் பருப்பு, கருநிற ஆடைகள், கருப்பு நிற காலணிகள் ஆகியவற்றை தானம் செய்வதும், காக்கை, கரு நிற நாய் போன்ற கருப்பு நிற விலங்குகளுக்கு உணவளிப்பதும், சனி பகவான் மனதை குளிர்விக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

9/9
பொறுப்புத் துறப்பு
பொறுப்புத் துறப்பு

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.





Read More