ஆன்மீக சிறப்பு நிறைந்த ஆடி மாதம், எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்கும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம். சூரியனார் அருளால், அதிர்ஷ்ட ராசிகளுக்கு பணம், புகழ் பெற்று என எல்லாவற்றையும் பெற்று, வளமாக வாழ்வார்கள்.
ஆடி மாதம் வழிபாட்டிற்கு மிகச்சிறந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி வெள்ளி ஆடிச் செவ்வாய், ஆடி 18 ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் ஆடி பௌர்ணமி, நாகபஞ்சமி, வரலட்சுமி விரதம் என ஆடி மாதத்தில் திருவிழாக்களுக்கும் பூஜைகளுக்கும் பஞ்சமில்லை.
சூரிய பெயர்ச்சி 2025: சூரியன் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு சஞ்சரிக்க இருக்கிறார். ஆடி மாத பிறப்பின் சூரிய பெயர்ச்சி, சில ராசிகளுக்கு பணம் வெற்றி புகழ் என அனைத்தையும் கொடுக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
கடக ராசி: பண வரவு பல நன்மைகளைக் கொடுக்கும். வாய்ப்புகளை அடையாளம் கண்டால், வெற்றி நிச்சயம். எடுத்த காரியம் நிறைவேறும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு.
சிம்ம ராசி: ஆடி மாதம் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் மாதமாக இருக்கும். குடும்பத்தினர் வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். வேலையில் திறமைக்கான அங்கீகாரம் தேடி வரும்.
கன்னி ராசி: தனிப்பட்ட வாழ்க்கை தொழில் வாழ்க்கை இரண்டிலும் நல்ல முன்னேற்றத்தை காணலாம். கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும். வீடு வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு.
துலாம் ராசி: சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். குடும்பத்தில் நிலப்பி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் இருக்கும்.
விருச்சிக ராசி: முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். ஆடி மாதம் உங்களுக்கு பொற்காலமாக இருக்கும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு எதிர்பார்க்கலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.