PHOTOS

ஆனி 23 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?

Today Rasipalan: இன்று ஜூலை 07ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

Advertisement
1/12
மேஷம்
மேஷம்

மனதில் இனம் புரியாத குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத வகையில் செலவுகள் மூலம் நெருக்கடியான சூழ்நிலை காணப்படும். உடன்பிறந்தவர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் காலதாமதமாக கிடைக்கும். புதிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்படவும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு  அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

அஸ்வினி : குழப்பங்கள் நீங்கும். பரணி : விட்டுக்கொடுத்து செல்லவும். கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.

2/12
ரிஷபம்
ரிஷபம்

தனவரவுகள் தேவைக்கு இருக்கும். உறவுகள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். கொடுத்த வாக்கை நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் இருந்த கவலைகள் குறையும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

கிருத்திகை : ஒத்துழைப்பு உண்டாகும். ரோகிணி : மேன்மை உண்டாகும்.  மிருகசீரிஷம் : தீர்ப்புகள் கிடைக்கும்.

3/12
மிதுனம்
மிதுனம்

பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். நினைத்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். உற்பத்தி விஷயங்களில் பொறுமை வேண்டும். பழைய நினைவுகளால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். கால்நடைகள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. மறதி பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு  அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : மாற்றங்கள் ஏற்படும். திருவாதிரை : சோர்வுகள் உண்டாகும். புனர்பூசம் : பிரச்சனைகள் நீங்கும். 

4/12
கடகம்
கடகம்

மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வாகனம் தொடர்பான பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள். பூசம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும். ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.

5/12
சிம்மம்
சிம்மம்

பழைய நினைவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். தடைப்பட்ட சில வரவுகள் சாதகமாகும். முக்கியமான பொறுப்புகள் சாதகமாகும். குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழில் நிமித்தமான பயணம் மேம்படும். அருகில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். தாய் வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு  அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்

மகம் : வரவுகள் சாதகமாகும்.  பூரம் : ஆரோக்கியத்தில் கவனம் உத்திரம் : அனுசரித்து செல்லவும். 

6/12
கன்னி
கன்னி

உடன் இருப்பவர்கள் மூலம் ஒத்துழைப்புகள் மேம்படும். உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திறமைக்கேற்ப பாராட்டுக்களும், அங்கீகாரங்களும் கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கடன் சார்ந்த செயல்களில் பொறுமை வேண்டும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் 

உத்திரம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.  அஸ்தம் : லாபம் அதிகரிக்கும்.  சித்திரை : பொறுமை வேண்டும். 

7/12
துலாம்
துலாம்

வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் மனதில் அதிகரிக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சிக்கலான பணிகளையும் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். பேச்சுக்களில் பொறுமையை கையாள்வது நல்லது. தன வரவுகளால் சேமிப்புகள் மேம்படும். உத்தியோகத்தில் உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும். இரக்கம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

சித்திரை : கற்பனைகள் அதிகரிக்கும்.  சுவாதி : சாமர்த்தியம் வெளிப்படும். விசாகம் : வாய்ப்புகள் அமையும். 

8/12
விருச்சிகம்
விருச்சிகம்

எதிர்பார்த்திருந்த சில உதவிகள் காலதாமதமாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் புது விதமான சிந்தனைகள் ஏற்படும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. குடும்ப உறுப்பினர்கள் பற்றிய எண்ணங்கள் மற்றும் புரிதல்கள் உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்

விசாகம் : உதவிகள் காலதாமதமாகும். அனுஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும். கேட்டை : புரிதல்கள் உண்டாகும்.

9/12
தனுசு
தனுசு

பத்திரிகை துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக்கொள்ளவும். மனதில் இருக்கக்கூடிய பல விஷயங்களுக்கு தெளிவும், புரிதலும் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படலாம். பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மூலம் : முன்னேற்றம் ஏற்படும். பூராடம் : அனுசரித்து செல்லவும்.  உத்திராடம் : நெருக்கடியான நாள்.

10/12
மகரம்
மகரம்

வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பழைய பிரச்சனைகளை மாறுபட்ட விதத்தில் தீர்வு காண்பீர்கள். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மனதளவில் தெளிவுகள் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் 

உத்திராடம் : லாபம் உண்டாகும்.  திருவோணம் : சுபமான நாள். அவிட்டம் : தெளிவுகள் ஏற்படும். 

11/12
கும்பம்
கும்பம்

நினைத்த காரியத்தை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் ஆலோசனைகள் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். நிலுவையில் இருந்து வந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் பயணங்கள் மூலம் புதுவிதமான அனுபவங்கள் உருவாகும். அனுபவம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

அவிட்டம் : ஆலோசனைகள் கிடைக்கும். சதயம் : வரவுகள் கிடைக்கும்.  பூரட்டாதி : அனுபவங்கள் கிடைக்கும்.

12/12
மீனம்
மீனம்

புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். சுபகாரியம் சார்ந்த  பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத செலவுகள் மூலம் சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம்.

பூரட்டாதி : சாதகமான நாள். உத்திரட்டாதி : தேடல்கள் உண்டாகும். ரேவதி : நெருக்கடிகள் நீங்கும்.





Read More