PHOTOS

மூணாருக்கு போக திட்டமா... தமிழ்நாடு அரசின் இந்த 3 நாள் சுற்றுலா பிளானை பாருங்க!

Tamil Nadu Government: தமிழ்நாடு அரசு பொதுமக்கள் மற்றும்  பயணிகளுக்காக மூணார் நகருக்கு மூன்று நாட்கள் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்துள்ளது. இந்த சுற்றுலா திட்டம் குறித்து இங்கு விரிவாக காணலாம்.

Advertisement
1/8

மூணார் நகரம், இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்திருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அவர்கள் ஓய்வெடுக்கும் மலைப் பிரதேசமாக இருந்துள்ளது. (Image Source: Meta AI)

 

2/8

தேயிலைத் தோட்டங்களால் சூழப்பட்ட மூணாரில் லக்கம் நீர்வீழ்ச்சிகள், மலையேற்றப் பாதைகள் மற்றும் 2,695 மீட்டர் உயரமுள்ள ஆனைமுடி சிகரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் அழிந்து வரும் நீலகிரி வரையாட்டின் வாழ்விடமான இரவிகுளம் தேசிய பூங்காவும் இங்குதான் உள்ளது. (Image Source: Meta AI)

 

3/8

இந்நிலையில், சென்னையில் இருந்து நீங்கள் குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ அல்லது அலுவக குழு உடனோ மூணாருக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருக்கும் இந்த 3 நாள்கள் மூணார் சுற்றுலா திட்டம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள். 

 

4/8

பேருந்து வசதி, சுற்றுலா வழிகாட்டி வசதி, தங்குமிட வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்படும். அதாவது முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை சுற்றுலா வழிகாட்டுபவர் உடன் இருப்பார். Hotel Tamil Nadu-ல் சுற்றுலா பயணிகள் தங்கவைக்கப்படுவார்கள்.

 

5/8

முதல் நாளில் சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா துறை வளாகத்தில் இருந்து மாலை 4.30 மணியளவில் பேருந்து மூணார் நோக்கிப் புறப்படும். அடுத்த இரண்டாம் நாள் காலை 10 மணியளவில் காலை உணவுக்கு பின் மாட்டுப்பட்டி அணைக்கும், Echo பாயிண்டுக்கும் அழைத்துச் செல்லப்படுவார்கள். மதியம் 2 மணிக்கு மதிய உணவுக்கு பின்னர் இரவிக்குளம் வனவிலங்கு சரணாலயத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் . மாலை 6 மணிக்கு ஷாப்பிங் மற்றும் இரவு 7.30 மணிக்கு இரவு உணவை முடித்து, இரவில் மூணாரிலேயே தங்கலாம். (Screenshot Credits: TTDC Website)

 

6/8

அடுத்த மூன்றாவது நாளில் காலை 8.30 மணிக்கு காலை உணவுக்கு பின் மேட்டுப்பாளையம் Blossom பூங்காவில் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம். மதியம் 1.30 மணிக்கு மூணாரில் இருந்து இருந்து புறப்படுதல். இரவில் சென்னையை நோக்கி செல்லும் வழியில் இரவு உணவை சாப்பிடலாம். அடுத்த நான்காம் நாள் காலை 7 மணிக்கு மீண்டும் சென்னை சுற்றுலா வளாகத்திற்கு வருகை தருதல். (Screenshot Credits: TTDC Website)

 

7/8

இந்த சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்க ஆதார் கார்ட்/ஓட்டுநர் உரிமம்/வாக்காளர் அடையாள அட்டை/பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றில் ஒரு ஆவணத்தை சமர்பிக்கலாம். சிறுவர்கள் ஆதார் கார்டு/பள்ளி அடையாள அட்டையை சமர்பிக்கலாம். கைக்குழந்தைகளை அழைத்து வந்தால் ஆதார் கார்டு/பிறப்புச் சான்றிதழை சமர்பிக்கலாம். வெளிநாட்டவர்கள் பாஸ்போர்ட், செல்லுபடியாகும் விசா, OCI அட்டை, PIO அட்டையை கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும். இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களையும் கையில் வைத்திருக்க வேண்டும். (Image Source: Meta AI)

 

8/8

எண். 2, வாலாஜா சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளாகம், சென்னை -600002 என்ற முகவரிக்கு நேரில் சென்றும் விசாரிக்கலாம். மேலும், இந்த சுற்றுலா குறித்து உங்களின் சந்தேகங்களை 044-25333444, 044-25333333, +91 7550063121, 9176995870 உள்ளிட்ட எண்களில் நீங்கள் தொடர்புகொள்ளலாம். www.ttdconline.com என்ற இணையத்தளத்தின் வாயிலாகவோ அல்லது 1800-4253-1111 எண் மூலமாகவோ பதிவு செய்யலாம். மூன்று நாள்களுக்கு ஒருவருக்கு ரூ.7100 வசூலிக்கப்படுகிறது. (Image Source: Meta AI)





Read More