Weekly Horoscope: மே மாதம் 26ம் தேதியுடன் துவங்கும் இந்த வாரத்தில், சில ராசிகளுக்கு நல்ல அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும் என்றும், அதே சமயம் சில ராசிகளுக்கு சுமாராக இருக்கும் இருக்கும் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
மேஷ ராசியினருக்கு கொஞ்சம் அலைச்சல் இடையூறுகள் உள்ள வாரமாக இது இருக்கும். பணவரவில் ஏற்ற இறங்கங்கள் காணப்படும் என்பதால், செலவுகளில் நிதானம் தேவை. உறவுகளை அனுசரித்துப் போவதால், தேவையற்ற மனஸ்தாபங்களை தவிர்க்கலாம்.
ரிஷப ராசியினர் இந்த வாரத்தில், கொடுத்த வாக்குகளை நிறைவேற்றி மரியாதையும் மதிப்பையும் பெறுவார்கள். கடன் பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக தீர வேண்டிய நேரம் வந்துவிட்டது. கடந்த கால முயற்சிகளுக்கு, தற்போ கிடைக்க ஆரம்பிக்கும்.
மிதுன ராசியினர் கொஞ்சம் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. கோபத்தை குறைத்துக் கொள்வது அவசியம். இல்லை என்றால் பிறர் உங்களைத் தவறாக எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். வாய்ப்புகளை உதாசீனப்படுத்தாமல் கவனமாக செயல்படுவது அவசியம். வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கலாம்.
கடக ராசியினர் நினைத்தது கைகூடும் வாய்ப்பு கிடைக்கும். கடந்த கால பிரச்சனைகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பணவரவால் கடன் பிரச்சனை தீரும். காரிய தடைகள் நீங்கி, விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற வாய்ப்பு உள்ளது.
சிம்ம ராசியினருக்கு இந்த வாரம் பொருளாதார ரீதியாக வளமான காலமாக இருக்கும். கடன்களை பைசல் செய்து நிம்மதியான வாழ்க்கையை வாங்குவீர்கள். மனக்கவலைகள் அனைத்தும் படிப்படியாக குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்படுவார்கள்.
கன்னி ராசியினருக்கு இந்த வாரம் நல்ல வாய்ப்புகளை அள்ளி வழங்கும் காலமாக இருக்கும். குடும்ப பிரச்சனைகள் நீங்கி, உறவுகள் மத்தியில் எனக்கும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதனால் அனைத்து வகையிலும் சுறுசுறுப்பாக இயங்குவீர்கள். பண வரவு மன மகிழ்ச்சி கொடுக்கும்.
துலாம் ராசியினருக்கு இந்த வாரத்தில் வாழ்க்கையில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு.. எதிர்பாராத பணவரவு உங்களை சந்தோஷத்தில் வாழ்த்தும். திருமணம் ஆகாதவர்களுக்கு உறவுகள் கைகூடும் வாய்ப்பு உண்டு. அலுவலகப் பணியில் இருப்பவர்கள் இலக்கை அடைந்து, அதிகாரிகளின் பாராட்டை பெறுவார்கள்.
விருச்சிக ராசியினருக்கு கடினமாக உழைக்க வேண்டிய வாரமாக இருக்கும். தேவையற்ற இடையூறுகளால் மனம் சிறிது சஞ்சல படலாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருப்பதால், உடல் ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்படலாம். எனினும் பொறுமையாக இருப்பதால் நல்ல தீர்வு கிடைக்கும்.
தனுசு ராசியினருக்கு நினைத்ததெல்லாம் நடக்கும் பாரமாக இது இருக்கும். கடந்த காலங்களில் சந்தித்து வந்த பொருளாதார நெருக்கடிகள் விலகி, வளமான வாழ்வை தருவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையில் இருந்து வந்த தேக்க நிலை நீங்கி, சுமூகமான முடிவுகள் ஏற்படும்.
மகர ராசியினருக்கு பொருளாதார ரீதியாக மிகவும் அனுகூலமான வாரமாக இருக்கும். எடுத்த காரியத்தை நிறைவேற்றுவதில் வெற்றி உண்டாகும். குடும்ப உறவினர்கள் மிகவும் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு, இழக்கை குறித்த நேரத்தில் எட்டி விடுவீர்கள்.
கும்ப ராசியினருக்கு, இந்த வாரம் வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களை கொடுக்கும் வாரமாக இருக்கும். பொருளாதார பிரச்சனைகள் நீங்கி, வாழ்க்கை நிலை உயரும். வேலையில் பதவி உயர்வு சம்பள உயர்வு ஆகியவற்றுக்கான வாய்ப்பு உண்டு. தேக்க நிலை நீங்கி முயற்சி விளக்கு பலன் கிடைக்கும்.
மீன ராசியினருக்கு உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவுடன், இலக்குகளை எளிதாக அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். இதனால் மருத்துவ செலவுகளும் குறையும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.