Russia Paying Pregnant Teenage Girls : ரஷ்யாவில் குழந்தை பிறப்பின் விகிதமும், ஜனத்தொகையும் குறைந்து வருகிறது. இதைத் தடுப்பதற்காக அரசு தரப்பில் இருந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதில் ஒன்று, பள்ளி மாணவிகளை குழந்தை பெற்றுக் கொள்ள ஊக்குவிப்பது.
டீன் - ஏஜ்ஜில் குழந்தை பெற்று கொள்ளுதல்:
ரஷ்யா நாட்டில், மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனை அதிகமாக்க, அரசு பிற நாடுகளை சேர்ந்தவர்களை ரஷ்யாவின் தங்குமாறு அழைப்பது, இங்கே வந்து குழந்தை பெற்றுக்கொள்ள ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. தற்போது ரஷ்யாவின் 10 பிராந்தியங்களில், இந்த டீன் - ஏஜ் பெண்களை குழந்தை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் திட்டமானது விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில், இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் ஒரே கொள்கை, ரஷ்யாவின் கருவுறுதல் விகிதத்தை அதிகரிப்பதுதான். இந்த திட்டத்தின் ஆரம்பத்தில் வயது வந்த பெண்களுக்கு மட்டும் அடிப்படையாக கொண்டதாக இருந்தது. 2023ஆம் ஆண்டில் இருந்த பிறப்பு விகிதம், இப்போது இன்னும் குறைந்ததை தொடர்ந்து இந்த திட்டமானது அமல் படுத்தப்பட்டுள்ளது.
பொது மக்களின் கருத்து:
இந்த டீன்-ஏஜ் கருவுறுத்தலின் திட்டத்திற்கு பொது மக்களின் கருத்தானது கலவையாக இருக்கிறது. இது குறித்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், 43% ரஷ்ய மக்கள், இந்த கொள்கையை ஆதரிப்பதாக தெரிவித்து வருகின்றனர். இதில், 40% பேர் இதனை எதிர்ப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்னும் சிலர், டீன்-ஏஜ் கருவுறுதலை ஊக்குவிப்பது நெறிமுறை சார்ந்த கவலைகளை எழுப்புவதாக சிலர் வாதிடுகின்றனர். இந்த கருவுறுதலை ஆதரிப்பவர்கள், மக்கள்தொகை வீழ்ச்சியை எதிர்ப்பதற்கு ஒரு தேவையான நடவடிக்கை இது என்றும் கூறி வருகின்றனர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், மக்கள் தொகையை நாட்டின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய விரிவாக்கத்தை போல ஒட்டுமொத்த நாட்டின் முன்னுரிமையாக மாற்றியிருக்கிறார்.
ரஷ்யா-உக்ரைன் போர்:
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போரும், இந்த குறைந்து வரும் மக்கள் தொகைக்கு காரணமாக இருக்கிறது. இந்த போரில், சுமார் 2,50,000 ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கின்றனர். அதே போல, பல இளைஞர்கள் நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு சென்றிருக்கின்றனர். ரஷ்யாவில் தந்தை ஆகியிருக்க வேண்டியவர்கள், இப்படி வேறு ஒரு நாட்டிற்கு சென்றிருப்பது அந்நாட்டு மக்களின் ஜனத்தொகை குறித்த கவலையை அதிகரித்திருக்கிறது. அதே போல குழந்தை பெற்றுக்கொள்ள தயங்கும் பெண்களை ரஷ்யர்கள் பார்க்கும் விதமும் மாறியிருக்கிறது.
மேலும் படிக்க | 22 ஆண்டுகளாக மேக்-அப் கலைக்காமல் இருக்கும் பெண்! இதனால் என்ன ஆச்சு பாருங்க..
மேலும் படிக்க | 4 வயது இரட்டை சகோதர-சகோதரிக்கு திருமணம்! பெற்றோர் செய்த செயல்..என்னங்க நடக்குது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ