Watch Videos Tamil AI News Anchors : நாளுக்கு நாள், AI தொழில்நுட்பத்தின் பரிமானங்கள் அதிகரித்து வருகிறது. சினிமா நட்சத்திரங்கள், குழந்தைகளை பெரியவர்களாக காட்டுவது, மனிதர்களை ghibli ஆர்ட் ஆக மாற்றி காட்டுவது என்று, Artificial Intelligence-ஐ பல்வேறு வகையில் உபயோகித்து வருகிறோம். இப்போது இணையத்தில் வெளியாகும் வீடியோக்கள் அல்லது போட்டோக்களில் எது AI எது ஒரிஜினல் என்பதை கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
Deep Fake-ஐ பயன்படுத்தி, நடிகைகளை ஆபாசமாக காட்டுவது, நடக்காக ஒரு விஷயத்தை நடப்பது போல காட்டுவது என்று அனைத்தும் தற்போது மாறிவிட்டது. அந்த லிஸ்டில், ஒரு பொய் செய்தியை ஒரிஜினல் செய்தி வாசிப்பாளர் படிப்பது போன்ற வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
AI செய்தி வாசிப்பாளர்கள்:
AI-ஐ பொருத்தவரை, பிற மொழிகளை விட ஆங்கிலத்தில் இருக்கும் கண்டெண்டுகளை நன்றாக உருவாக்கவும், பேசவும் செய்யும். அவற்றிற்கு, பிற மொழிகளை படிப்பதும் உள்வாங்கிக்கொள்வதும் கடினம். ஆனால், சமீப காலங்களாக அந்த நிலை மாறி வருகிறது. ஆங்கில செய்தி வாசிப்பாளர்கள் போலவே AI-ஐ உருவாக்கி அவற்றை செய்தி வாசிக்க வைத்து வந்தனர். இப்போது தமிழ் மற்றும் மலையாளத்திலும் இப்படி செய்தி வாசிப்பாளர்கள் இருப்பதை பார்க்க முடிகிறது.
செய்தி என்பது, துல்லியமாகவும் தெளிவானதாகவும் உண்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பது பலரது கூற்று. ஆனால், அவை அனைத்தையும் மாற்றி போடும் வகையிலான வீடியாேக்கள் சில தற்போது உலா வர தொடங்கி இருக்கின்றன.
தமிழில் செய்தி வாசிப்பாளர்களின் வீடியாே..
தமிழ் தொலைக்காட்சிகளில் இருக்கும் செய்தி வாசிப்பாளர்கள் எப்படிப்பட்ட முக அமைப்புடன் இருப்பார்களோ, அப்படியே இருக்கிறது இந்த AI வீடியோக்கள். இதில் செய்தி வாசிக்கும் அனைத்து AI AI உருவாக்கிய செய்தி வாசிப்பாளர்களும் தமிழ் மற்றும் கேரள மக்களை பரைசாற்றும் நிறத்தில் இருக்கின்றன.
நல்ல வேளையாக, இதில் பொய்யான எந்த செய்தியையும் பரப்பாமல், ஜோக் சொல்வது போலவும், அது நடக்காத ஒரு சம்பவம் என்பது மக்களுக்கு தெரியும் வகையிலும் கிரியேட் செய்யப்பட்டுள்ளன.
முதல் வீடியோவில் இருக்கும் AI செய்தி வாசிப்பாளர் பாராசூட்டையும், பாராசூட் எண்ணெயையும் வைத்து ஜோக் செய்வது போன்ற வீடியோ இடம் பெற்றிருக்கிறது.
அடுத்த வீடியோவில், “தாத்தா மூச்சுத்திணறுவதை பார்த்து சைக்கில் காற்றடிக்கும் பம்பை எடுத்து அவர் மூக்கில் வைத்து அடித்த சஞ்சை கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டர்” என்று கூறுகிறார் AI செய்தி வாசிப்பாளர்.
மூன்றாவது வீடியோவில், சொந்த காதலி கடத்தப்படுவதை பார்க்க முடியாமல் நின்ற காதலன் கண்ணடைத்து நின்றான் என்கிறார் அந்த AI செய்தி வாசிப்பாளர். இதில் ஒரு சில வீடியோக்களில் செய்தி வாசிப்பாளர்கள் கொச்சையாக பேசுவது போன்ற காட்சிகளும் இருக்கின்றன.
இப்படிப்பட்ட வீடியோக்களை, டெக்னாலஜியுடன் தினம் தோறும் தொடர்புடையவர்களாலேயே AI என்று கண்டுபிடிக்க முடியாது. இதில், இது குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லாதவர்கள் எப்படி இதனை பொய் என்று அறிந்து கொள்வார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ