Lord Shiva Favourite Zodiac Signs: இந்து மதத்தில் சாவன் மாதம் மிகவும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த மாதமாகும். இந்த மாதத்தில் சிவபெருமான் வழிபடப்படுகிறார். சிவனுக்கு மிகவும் உகந்த மாதம் இந்த மாதமாகும். இந்து கடவுகளில் மிகவும் முக்கிம் வாய்ந்த கடவுள் சிவபெருமான் ஆவார். ஏனெனில் சிவபெருமான் ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருள் ஆவார். மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான் பிறப்புன் இறப்பும் இல்லாதவர். இதனால் தான் இவர் மிக மிக முக்கிய கடவுளாக இந்து தர்மத்தில் கூறப்படுகிறார். கயிலாயத்தில் வாசம் புரியும் சிவ பெருமான், அண்ட சராசரங்களையும் காத்து ரஷிக்கிறார். தன்னுடைய ஒரு பாதியை தன் மனைவியான சக்திக்கு கொடுத்து ஆண் பெண் சமத்துவத்தை உலகுக்கு உணர்த்திய உன்னதர் சிவபெருமான் ஆவார்.
உலகம் முழுதும் சிவ பெருமான் பல வடிவங்களில், பல பெயர்களை கொண்டு அறியப்பாடுகிறார். எனினும், தமிழகத்துக்கும் சிவனுக்கும் ஒரு தனி பிணைப்பு உண்டு. சிவனை பாடி, அவருக்காக பல பாசுரங்களை எழுதிய நாயன்மார்கள் அனைவரும் தமிழகத்தில் அவதரித்தவர்களே. ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ நம் முன்னோர்கள் சிவனுக்கே அர்ப்பணித்தார்கள். ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜனாக சிதம்பரத்தில் காட்சியளிக்கும் சிவன், அனைத்தையும் ஆட்கொள்ளும் ஜோதி தானே என்பதற்கு திருவண்ணாமலையில் சாட்சியாய் இருக்கிறார்.
சிவபெருமானை வழிபட நாள், கிழமை எதுவும் அவசியமில்லை. எனினும் திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த கிழமையாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு திங்கட்கிழமை தினத்தில் அனைத்து சிவாலயங்களிலும் சிவ பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
சிவபெருமானுக்கு பிடித்தமான ராசிகள் இவையே:
சிவனை பொறுத்த வரை அனைவரும் சமமே. எனினும், ஜோதிடத்தில் சில ராசிக்காரர்கள் சிவன் அருள் பெறுவதில் அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் இந்த ராசிகள் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான ராசிகள் ஆகும். எனவே அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை (Zodiac Signs) பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
மேஷம் (Aries Zodiac Sign): மேஷ ராசிக்காரர்கள் உழைப்பாளிகளாக கருதப்படுகிறார்கள். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் கிரகம் ஆகும். இந்த ராசி சிவபெருமானுக்கு பிடித்தமான ராசிகளில் ஒன்றாகும். இவர்கள் வாழ்வில் வரும் அனைத்து பிரச்சனைகளையும் சிவன் தீர்த்து வைப்பார் என்பது ஜோதிட ஐதீகம்.
விருச்சிகம் (Scorpio Zodiac Sign): விருச்சிக ராசிக்காரர்களுக்கும் செவ்வாய் கிரகம் தான் அதிபதி ஆகும். இயற்கையாகவே விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலியான ராசியாகும். இந்த ராசிக்காரர்களுக்கு சிவபெருமானின் அருள் எப்போதுமே இருக்கும். குறிப்பாக பணியிடம் மற்றும் வியாபாரத்தில் வெற்றி அள்ளித் தருவார் சிவபெருமான்.
மகரம் (Capricorn Zodiac Sign): மகர ராசியின் அதிபதி கிரகம் சனி ஆகும். சனிபகவான் சிவனின் மிகப்பெரிய பக்தர். இந்நிலையில் மகர ராசிக்காரர்களுக்கு சனியின் அருளுடன் சிவபெருமானின் அருளும் எப்போதும் இருக்கும். மகர ராசிக்காரர்கள் சிவ பெருமானை வழிபட்டால், அனைத்து பிரச்சனைகளில் இருந்து தீர்வு பெறலாம்.
கும்பம் (Aquarius Zodiac Sign): கும்ப ராசிக்கு அதிபதி சனி பகவான் ஆவார். கும்ப ராசிக்காரர்கள் மீது சிவபெருமானுக்கு அதிகப்படியான பற்று உள்ளது. சனி பெயர்ச்சி, ஏழரை சனி என சனியால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்து வைப்பார் சிவன். சிவபெருமான் கும்ப ராசிக்காரர்களுக்கு வாழ்வில் அனைத்து செல்வங்களையும் அளிப்பார்.
சிவபெருமானுக்கு பிடித்த பூக்கள் என்ன?
சிவபெருமானுக்கு பிடித்த முதல் பூ 'கரு ஊமத்தை பூ' சிவபெருமானுக்கு ஊமத்தை பூ என்றாலே ரொம்ப பிடிக்கும்.
சிவபெருமானுக்கு பிடித்த இரண்டாவது பூ "செம்பருத்தி பூ" சிவபுராணத்தின்படி சிவபெருமானுக்கு சிவப்பு நிற பூக்களை அர்ப்பணித்து வழிபடுவது ரொம்ப நல்லது.
சிவபெருமானுக்கு பிடித்த மூன்றாவது பூ "மல்லிகைப்பூ". நீண்ட நாட்களாக தனக்கு தேவையான பொருளை வாங்க வேண்டும் என நினைக்கிறேன்.
சிவபெருமானுக்கு பிடித்த நான்காவது பூ "ரோஜா பூ". சிவபெருமானுக்கு ரோஜா பூக்களை அர்ப்பணித்து வழிபடுவது மிகவும் நல்லது.
சிவபெருமானுக்கு பிடித்த ஐந்தாவது பூ "ஆளிமலர்". இந்த ஆளிமலரை சிவபெருமானுக்கு அர்ப்பணித்து வழிபட்டால், சிவனோட கவனத்தை நம் பால் ஈர்க்கலாம் என நம்பப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை பாதிக்கும் கண் திருஷ்டி... நீங்க உதவும் சில எளிய பரிகாரங்கள்
மேலும் படிக்க | ஜூலை 9 குருவின் மகா நிகழ்வு.. 3 ராசிகளுக்கு ஓஹோ வாழ்க்கை, ராஜ பொற்காலம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ