Home> Spiritual
Advertisement

இன்னும் 10 நாட்களில் குரு உதயம்.. தொட்டதெல்லாம் வெற்றி, அதிர்ஷ்டம் கொட்டும்

Jupiter Rise 2025: ஜூலை 9 ஆம் தேதி குரு பகவான் உதயமாகவுள்ளார். குரு உதயத்தால் அதிக நன்மைகள் யாருக்கு? எந்த ராசிகளுக்கு எப்படி பட்ட பலனைத் தரப் போகிறது என்பதை பார்ப்போம்

இன்னும் 10 நாட்களில் குரு உதயம்.. தொட்டதெல்லாம் வெற்றி, அதிர்ஷ்டம் கொட்டும்

Jupiter Rise 2025 Astrology Predictions: குரு பகவான் மே மாதம் 14 ஆம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சி ஆனார். இந்த குரு பெயர்ச்சி இந்த அண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. சுப கிரகமான குரு பகவானின் அனைத்து விதமான மாற்றங்களும் பல வித நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். குரு பகவான் கடந்த ஜூன் 09, 2025 அன்று மிதுன ராசியில் அஸ்தமனமானார். இப்போது சரியாக சரியாக இன்னும் 10 நாட்களில் அதாவது ஜூலை 09 அன்று இரவு 10:50 மணிக்கு, அவர் மிதுன ராசியில் உதயமாகவுள்ளார். குருவின் இந்த மாற்றம் அனைத்து ராசிகளிலும் பரந்த தாக்கத்தை ஏற்படுத்தும். 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் குரு உதயத்தின் தாக்கம் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்கள் குரு உதயத்தால் அதிக நன்மைகள் கிடைக்கும். எனவே குரு உதயமான பிறகு எந்த ராசிக்காரர்களுக்கு பயன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.

மேஷம்: குருவின் உதயத்தால், மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். மேஷ ராசிக்காரர்களுக்கு வசதிகளும் ஆடம்பரங்களும் கிடைக்கும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். இந்த நேரத்தில், வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு, குரு எட்டாவது மற்றும் பதினொன்றாவது வீட்டின் அதிபதி. இப்போது அவர் செல்வ வீட்டில் அதாவது இரண்டாவது வீட்டில் உதயமாகவுள்ளார். இது வருமானத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். மாத வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும், முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். குடும்ப முரண்பாடு குறையும், இது மன அமைதியைத் தரும்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் தடைபட்ட வேலைகள் வேகம் பெறும். உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். காதல் உறவுகள் வலுவடையும். திருமணத்திற்காக காத்திருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். தொழில் வலுவடையும், புதிய வாய்ப்புகள் கிடைக்கும், இது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும்.

கன்னி: குருவின் உதயத்தால், கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கக்கூடும். வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலைமை வலுவாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு குருவின் உதயம் நல்ல காலம் தொடங்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் ஒரு மதப் பயணம் செல்லலாம். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இது உங்கள் மன மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு நன்மை பயக்கும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு குருவின் உதயம் பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். நோய் இருந்து நிவாரணம் கிடைக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். இது வாழ்க்கையில் புதிய மகிழ்ச்சியைத் தரும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு குருவின் உதயம் சிறப்பாக இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பழைய பணத்தையும் திரும்பப் பெறலாம். குடும்ப உறவுகளும் வலுப்பெறும். முதலீட்டிலிருந்து நல்ல லாபத்தையும் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. நம்பிக்கையுடன் முக்கியமான மற்றும் சரியான முடிவுகளை எடுக்க முடியும். இது உங்கள் வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும்.

 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | ஒரே ராசியில் சஞ்சரிக்கும் 3 கிரகங்கள்! ‘இந்த’ 6 ராசிகள் தொட்டது துலங்கும்-நினைத்தது நடக்கும்..

மேலும் படிக்க | ஜூலை 9 குருவின் மகா நிகழ்வு.. 3 ராசிகளுக்கு ஓஹோ வாழ்க்கை, ராஜ பொற்காலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More