Home> Spiritual
Advertisement

சனி பகவானால் ஏற்படும் மகிமை - ‘இந்த’ தேதியில் பிறந்தவர்களுக்கு கோடீஸ்வர யோகம்!

Lucky Birthdates Lord Shani Blessing : எண் கணித முறைப்படி, சில எண்கள் சனீஸ்வரருக்கு பிடித்தவையாக இருக்கிறது. அந்த தேதிகளில் பிறந்தவர்கள், 40 வயதை தாண்டிய பின்பு கோடீஸ்வரர் ஆக யோகம் இருகிறதாம். அவை எந்தெந்த தேதிகள் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.   

சனி பகவானால் ஏற்படும் மகிமை - ‘இந்த’ தேதியில் பிறந்தவர்களுக்கு கோடீஸ்வர யோகம்!

Lucky Birthdates Lord Shani Blessing : ஜோதிடத்தை எந்த அளவிற்கு சக்தி உள்ளது என்று நம்புகிறோமோ, அதே அளவிற்கு எண் கணிதத்திலும் சக்தி இருக்கிறது என்று கூறப்படுகிரது. எண் கணிதத்தின்படி, ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு ஆளும் கிரகமிருக்கிறதாம். 1 முதல் 9 வரையிலான எண்களுக்கும் இது பொருந்தும். இந்த எண்களில் பிறந்தவர்கள், 40 வயதுக்கு பின்பு, கோடீஸ்வரர் ஆக வாய்புள்ளதாம். 

சனி பகவான் ஆளும் எண்:

சனி பகவான், எண் 8ன் அதிபதியாக விளங்குவதாக எண் கணிதம் சொல்கிறது. எனவே, 8 அல்லது அதன் கூட்டுத்தொகையில் வரும் எண்களில் பிறந்தவர்கள் சனியால் ஆளப்படும் எண்ணில் பிறந்தவர்களாக இருப்பார்கல். இவர்க் மீது சனி பகவான் செல்வாக்கை கொண்டிருக்கிறார்.

பலன்கள்:

எந்த மாதத்திலும் 8, 17, 26 உள்ளிட்ட தேதிகளில் பிறந்தவர்களின் பிறப்பு எண் 8 ஆகும். இந்த தேதிகளில் பிறந்தவர்கள், சனி பகவானின் அருளால் கோடீஸ்வரர்களாக மாறுவார்களாம். அது மட்டுமன்றி, இவரள் சமூகத்தில் மதிப்பு மற்றும் மரியாதையுடனும் விளங்குவார்களாம். 

சனி பகவான், பொதுவாக கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நேர்மை ஆகிய குணாதிசயங்களுக்கு அம்சமாக திகழ்கிறார். எனவே இந்த எண்.8-ஐ பிறப்பு தேதியாக கொண்டவர்கள், தங்களின் ஆரம்ப கால வாழ்க்கையில் நிறைய போராட்டங்களை அனுபவிப்பர் என்று கூறப்படுகிறது. ஆனால், சனி பகவான் அதற்கு ஏற்றார் போல அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை காத்து, அவர்களை உயர்ந்த நிலையில் வைப்பாராம். 

40 வயதுக்கு பின்..

பொதுவாகவே, இந்த எண்.8- அல்லது அதன் மூலத்தொகையை பிறப்பு தேதி கொண்டவர்கள், தங்களின் 40 வயதுக்கு பின்பு வெற்றி பெறுகிறார்களாம். ஏழை குடும்பத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும், அவர்களும் காலப்போக்கில் நிதி ரீதியாக வலிமை அடைகின்றனராம். அதே போல, இவர்கள் 40 வயதை தாண்டும் போது ஏராளமான சொத்துகளை சேர்ப்பதோடு, பெரும் புகழையும் அடைகின்றனர்.

மேற்கூறிய எண்களில் பிறந்தவர்கள், தங்கள் வேலை அல்லது தொழிலில் குறிப்பிட்ட வயதுக்கு பின்பு வெற்றி பெறுவார்களாம். இந்த 8ஆம் எண்ணை பிறந்த தேதியாக கொண்டவர்களுக்கு வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகள் மங்களகரமான நாளாக அமையும் என்று கூறப்படுகிறது. 

இவர்கள், வியாபாரத்தில் பெரும் வெற்றி கொள்வதோடு, தங்கள் குடும்பத்தின் முதல் பணக்காரர்களாகவும் இருக்க வாய்ப்புள்ளது. பிறந்ததில் இருந்து பல்வேறு இன்னல்களை சந்திக்கும் இவர்கள், தங்களுக்கு துணையாக யாருமே இல்லாதது போல உணரும் காலமும் வரலாம். ஆனால், அப்போதும் அவர்களை சனிபகவான் உற்று நோக்குவதாக கூறப்படுகிறது. அது மட்டும் கிடையாது, 40 வயதை கடந்த பின்பு, அவர்களின் வாழ்க்கை இனிமையாக மாறுவதோடு, அத்தனை உழைப்புக்கும் ஏற்ற இரட்டிப்பு பலன்களையும் அவர்கள் அடைவர். எத்தனை சோதனைகள் கொடுத்தாலும் சனி பகவான் இவர்களை இறுதிவரை கைவிடுவதில்லை என்பதும் எண் கணித ஜோதிடத்தின் நம்பிக்கையாக இருக்கிறது.

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | கஜகேசரி ராஜயோகம்: ‘இந்த’ 3 ராசிகளுக்கு அடித்தது ஜாக்பாட்! இனி பணமழை கொட்டப்போகுது..

மேலும் படிக்க | குரு டபுள் பெயர்ச்சி: மகா அதிர்ஷ்ட பொற்கால வாழ்க்கை, தனலட்சுமி யோகம் இந்த ராசிகளுக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More