மிதுன ராசியில் சுக்கிரன் குருவுடன் இணைந்து கஜலட்சுமி ராஜயோகத்தை உருவாக்குவதால், சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை பெறுவார்கள் என்று ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். அன்னை மகாலட்சுமியின் அருளால், வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் பெற்று, வளமாக வாழ்வார்கள். வரும் ஜூலை மாதம் 26 ஆம் தேதி, சுக்கிரன் மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நிலையில், ஏற்கனவே இருக்கும் குருவிடம் இணைவதால், அதிர்ஷ்ட யோகமாக கருதப்படும் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது.
கஜலட்சுமி ராஜயோகத்தினால் வாழ்க்கையில் அனைத்து பலன்களையும் பெற்று முன்னேறும் அதிர்ஷ்ட ராசிகளை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
மேஷ ராசிக்கான பலன்கள்
புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களால் வருங்காலத்தில் ஆதாயமும் உண்டு. வாழ்க்கையில் நம்பிக்கையுடன் முன்னேறி செல்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் முக்கிய முடிவுகளுக்கு முழு ஆதரவை கொடுப்பார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பண வரவிற்கு குறைவிருக்காது.
ரிஷப ராசிக்கான பலன்கள்
கஜலட்சுமி ராகயோகத்தால், தங்கம் அல்லது புதிய நகைகள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் திறமைக்கான பாராட்டுகள் கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வுக்கான வாய்ப்பு உண்டு. சுப நிகழ்வுக்காக செலவுகள் செய்ய நேரிடும். பணவரவு சிறப்பாக இருக்கும் என்பதால், மிக எளிதாக அனைத்தையும் சமாளிப்பீர்கள்.
துலாம் ராசிக்கான பலன்கள்
வெளிநாடு செல்ல திட்டமிட்டு உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் கைகூடிவரும். எதிரிகள் கொடுக்கும் குடைச்சல்களை எளிதாக சமாளிப்பீர்கள். பணியிடத்தில் அனைத்து தடைகளையும் மீறி உங்களுக்கான அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.
விருச்சிக ராசிக்கான பலன்கள்
வாழ்க்கையில் இதனால் வரை குடைச்சல் வந்த பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதியான வாழ்வு பிறக்கும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். உறவுகள் மத்தியில் நல்லிணக்கம் நிலவும். காரிய தடைகள் அனைத்தும் நீங்கி முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். துர்க்கையின் அருளால் காரிய சித்தி ஏற்படும்.
கும்ப ராசிக்கான பலன்கள்
கும்ப ராசியினருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால், நல்ல நிலைமையை எட்டலாம். உங்கள் அறிவாற்றலால் பிரச்சனையை தீர்த்து நல்ல பெயர் எடுப்பீர்கள். உங்களது தன்னம்பிக்கையும் மன உறுதியும் அதிகரிக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை பாதிக்கும் கண் திருஷ்டி... நீங்க உதவும் சில எளிய பரிகாரங்கள்
மேலும் படிக்க | ஜூலை 9 குருவின் மகா நிகழ்வு.. 3 ராசிகளுக்கு ஓஹோ வாழ்க்கை, ராஜ பொற்காலம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ