Home> Spiritual
Advertisement

மகா சிவராத்ரி 2025 தொடங்கும் நேரம் எது? விரதம் இருப்பது எப்படி? சிவன் அருளை பெற வழிகள்..

Maha Shivaratri 2025 Date And Puja Time : சிவனுக்கு உகந்த ராத்திரியான சிவராத்திரி, பிப்., 26ஆம் தேதியான நாளை கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு தொடங்கும் நேரம், முடியும் நேரம், சிவனை வழிபடும் முறை ஆகியவை குறித்து இங்கு பார்ப்போம்.  

மகா சிவராத்ரி 2025 தொடங்கும் நேரம் எது? விரதம் இருப்பது எப்படி? சிவன் அருளை பெற வழிகள்..

Maha Shivaratri 2025 Date And Puja Time : சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பல வகைப் பொருளை தருகிறது. சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்துச் செல்ல உதவும்.

சனிபிரதோஷ தினத்தன்று வரும் சிவராத்திரிக்கு 'கவுரிசங்கரமண மஹாசிவராத்திரி' என்று பெயர். அந்த சிவராத்திரியில் கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.

தொடங்கும் நேரம்-முடியும் நேரம் எப்போது?

பலருக்கும், மகாசிவராத்திரி தொடங்கும் நேரம் எது, முடியும் நேரம் எது என்ற குழப்பங்கள் இருக்கும். பிப்ரவர், 26ஆம் தேதி புதன்கிழமையான நாளை மகாசிவராத்திரி தொடங்குகிறது. இதில் நான்கு காலை பூஜை நடைபெறும். சதுர்திசி திதியில் நாளை காலை 11:08 மணிக்கு தொடங்கும் மகாசிவராத்திரி விரதம், அடுத்த நாளான பிப்ரவரி 27ஆம் தேதி காலை 8:54 மணி அளவில் முடிவடைவதாக கூறப்படுகிறது. பக்தர்கள் அனைவரும், பிப்., 26ஆம் தேதியான நாளை காலைதான் மகாசிவராத்திரியை கொண்டாடுவர்.

விரதம் இருப்பவர்கள், இரவு சிவனுக்கான பூஜைகள் முடிந்த பிறகு மறுநாள் காலையில் அதனை முடித்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

  • அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து, சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும்.
  • ஒரு நாள் முழுக்க விரதம் இருக்க வேண்டும்.
  • சிவன் கோயிலுக்கு சென்று, ருத்ராபிஷேகத்திற்கான பொருட்களை வாங்கி கொடுக்கலாம். (பால், தேன், காசு போன்றவை)
  • ‘ஓம் சிவாய நம’ எனும் மந்திரத்தை உச்சரிக்கலாம்
  • இரவில் 4 கால பூஜையின் போது விழித்திருந்து அதை மனமுவந்து செய்யலாம்.
  • சிவராத்திரியன்று கூற வேண்டிய 8 மந்திரங்கள்:
  • சிவபெருமானுக்கு சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் 3 கண்களாக உள்ளனர். சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினமே சிவராத்திரி என்று ஒரு கருத்து உண்டு.
  • சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். எனவே எந்த அளவுக்கு ஒருவர் சிவ, சிவ…. என்று உச்சரிக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் நன்மை பெறுவார்.
  • சிவராத்திரி அன்று ஒவ்வொரு ஜாம பூஜையின்போது சிவபுராணத்தை வாசிப்பது மிகுந்த நன்மை தரும். சிவராத்திரி இரவில் திருமுறை ஓதுவது மிக சிறப்பானது.
  • ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் தரவல்லது. கருட புராணம், கந்தபுராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் சிவராத்திரி மகிமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 8 பெயர்களை சிவராத்திரியன்று ஜெபிப்பது நல்லது.

1. ஸ்ரீ பவாய நம, 
2. ஸ்ரீ சர்வாய நம, 
3. ஸ்ரீ பசுபதயே நம, 
4. ஸ்ரீ ருத்ராய நம, 
5. ஸ்ரீ உக்ராய நம, 
6. ஸ்ரீ மஹாதேவாய நம, 
7. ஸ்ரீ பீமாய நம, 
8. ஸ்ரீ ஈசாராய நம

பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்ட அனைத்தும் பொதுவான கருத்துக்கள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை. 

மேலும் படிக்க | தைப்பூசம்: தொடங்கும் நேரம் எப்போது? விரதம் இருக்கும் போது செய்ய வேண்டியவை..

மேலும் படிக்க | மகா சிவராத்திரி நான்கு கால பூஜை! எந்த நேரத்தில் சிவனை வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Read More