Maha Shivaratri 2025: அண்டம் முழுதும் ஆளும் ஈசனுக்கு உகந்த நாளான மகா சிவராத்திரி பண்டிகை இந்த ஆண்டு நாளை, அதாவது பிப்ரவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இமயத்தில் அமர்ந்து மனிதர்களின் இதயத்தை ஆளும் ஈசன் மிக வித்தியசமான கடவுள். அவருக்கு ஆடம்பர பூஜைகள் தேவை இல்லை, விலை உயர்ந்த காணிக்கைகள் தேவையில்லை. இருக்கும் இடத்திலிருந்து மனம் லயித்து வேண்டினாலே கேட்டவை அனைத்தையும் கொட்டிக்கொடுபார் சிவ பெருமான்.
இந்த மகா சிவராத்திரி ஜோதிட ரீதியாக மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது அனைத்து ராசிகளின் வாழ்விலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வரும். எனினும், சிவபெருமானின் ஆசிர்வாதத்தால், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் நிகழப் போகின்றன. 2025 ஆம் ஆண்டு மகாசிவராத்திரியில், 26 ஆம் தேதி சிவயோகம் தொடங்கும். இந்த சிவ யோகத்தின் தாக்கத்தால், 5 ராசிக்காரர்கள் சிவபெருமானின் சிறப்பு அருளால் பல வித நன்மைகளைப் பெறப் போகிறார்கள். மகாசிவராத்திரி முதல் சிவனருளால் அற்புத பலன்களைப் பெறப் போகும் 5 அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்? இந்த 5 ராசிகளுக்கும் பிரத்யேகமாக என்னென்ன பலன்கள் கிடைக்கும்? இந்த விவரங்களை இங்கே இங்கே தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம் (Taurus): பண வரவு அதிகமாகும்
சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த ராசிகளில் ஒன்று ரிஷபம். இது சிவனின் வாகனமான நந்தி பகனாவுடன் நேரடியாக தொடர்புடையது. இந்த மகாசிவராத்திரியில் ரிஷப ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக ஒரு தொழிலைத் தொடங்க திட்டமிட்டு வருபவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். சிவ பெருமானை வேண்டி தொழில் தொடங்கினால் வெற்றிகரமாக வியாபாரம் நடக்கும். சிவ யோகத்தின் செல்வாக்கால், உங்கள் நிதி நிலைமை மேம்படும். செல்வச்செழிப்பு அதிகரிக்கும்.
மிதுனம் (Gemini): மகத்தான லாபம் மற்றும் தொழில் வளர்ச்சி
சிவபெருமானின் அர்த்தநாரீஸ்வர் வடிவத்துடன் தொடர்புடைய மிதுன ராசிக்காரர்கள், இந்த மகாசிவராத்திரி அன்று சிறப்புப் பலன்களைப் பெறுவார்கள். சிவ யோகத்தில், மிதுன ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயம் மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். சிவபெருமானின் ஆசீர்வாதத்தால் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.
கடகம் (Cancer): தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி
சிவபெருமான் தலையில் அணிந்திருக்கும் சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்கள், இந்த மகாசிவராத்திரி அன்று சிறப்புப் பலன்களைப் பெறப் போகிறார்கள். இந்த சிவ யோகத்தில், கடக ராசிக்காரர்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். மேலும் வணிகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள். கல்வித் துறையில், குறிப்பாக வெளிநாட்டில் படிப்பதற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
தனுசு (Sagittarius): புதிய வாய்ப்புகள் மற்றும் வேலையில் முன்னேற்றம்
சிவபெருமானின் வில்லுடன் தொடர்புடைய தனுசு ராசிக்காரர்கள், இந்த மகாசிவராத்திரி அன்று சிவயோகத்தின் தாக்கத்தால் புதிய மற்றும் நன்மை பயக்கும் வாய்ப்புகளைப் பெறுவார்கள். நிதி சிக்கல்கள் தீர்ந்து பொருளாதார நிலை முன்னேறும். அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைக்கும். புதிய வேலையைத் தொடங்க இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும்.
கும்பம் (Capricorn): மூன்று மடங்கு பலன்
சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான மற்றொரு ராசி கும்பம். மகா சிவராத்திரியில் உருவாகும் சிவ யோகத்தால், கும்ப ராசிக்காரர்களுக்கு நிதி விஷயங்களில் மூன்று மடங்கு பலன் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வ்வாய்ப்புள்ளது. வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியிம் இருக்கும். வியாபாரம் விருத்தி அடையும்.
மகாசிவராத்திரி 2025 அன்று உருவாகும் சிவ யோகம்
2025 ஆம் ஆண்டு மகாசிவராத்திரி அன்று சிவயோகத்தின் போது, ரிஷபம், மிதுனம், கடகம், தனுசு மற்றும் கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் சிவபெருமானின் அருளால் சிறப்புப் பலன்களைப் பெறப் போகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் நிதி, தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள். சிவபெருமானின் ஆசீர்வாதத்தால், அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ