Home> Spiritual
Advertisement

மாளவிய ராஜயோகம்... மேஷம் முதல் மீனம் வரை.... 12 ராசிகளுக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

சுகபோக வாழ்க்கையை அருளும் சுக்கிரன் இன்று அதாவது ஜூன் 29ஆம் தேதி ரிஷப ராசியில் சஞ்சரித்துள்ளார். ரிஷப ராசியில் ஏற்பட்டுள்ள சுக்கிரன் பெயர்ச்சியினால் மாளவ்ய ராஜயோகம் உருவாகி உள்ளது.

மாளவிய ராஜயோகம்... மேஷம் முதல் மீனம் வரை.... 12 ராசிகளுக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

சுக்கிரன் பெயர்ச்சி 2025: சுகபோக வாழ்க்கையை அருளும் சுக்கிரன் இன்று அதாவது ஜூன் 29ஆம் தேதி ரிஷப ராசியில் சஞ்சரித்துள்ளார். ரிஷப ராசியில் ஏற்பட்டுள்ள சுக்கிரன் பெயர்ச்சியினால் மாளவ்ய ராஜயோகம் உருவாகி உள்ளது. ஜூலை 26 வரை ரிஷப ராசியில் சுக்கிரன் சச்சரிக்கும் நிலையில், அடுத்த 28 நாட்களுக்கு, மேஷம் ரிஷபம் உள்ளிட்ட சில ராசிகள், பணவரவை குறைவில்லாமல் பெற்று, பணக்காரர்கள் ஆகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதேசமயம் சுக்கிரன், சில ராசிகளுக்கு கஷ்டங்களையும் தொல்லைகளையும் கொடுப்பார்.

மேஷ ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

பணவரவிற்கு குறைவிருக்காது. வாய்ப்புகள் தேடி வரும். திறமைக்கான அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவழிப்பீர்கள்.

ரிஷப ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

மாளவிய ராஜயோகத்தினால் ஆளுமை மேம்படும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டு. வருமானத்திற்கு குறைவிருக்காது. நிதிநிலைமை மேம்படும்.

மிதுன ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எனினும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது.. கடின உழைப்பின் பலனை முழுமையாக பெற முடியாமல் போகலாம். ஆடம்பரம் மற்றும் வசதிக்காக அதிக பணத்தை செலவழிக்க நேரிடலாம்.

கடக ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உண்டு. எனினும், முதலீட்டு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

சிம்ம ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

உங்கள் கடின உழைப்பு பாராட்டப்படும். எதிர்பாராத பண வரவு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

பயணங்கள் ஆதாயத்தை தரும். புதிய வருமான ஆதாரங்கள் நிதி நிலையை மேம்படுத்தும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.

துலாம் ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

பேச்சாற்றல் மூலம் நினைத்த காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். எதிர்பாராத விதமாக வரும் பண வரவு, கடன்களை தீர்க்க உதவும். எனினும் பணிச்சுமை சிறிது அதிகரிக்கலாம். இதனால் உடல் நலம் சிறிது பாதிக்கப்படலாம்.

விருச்சிக ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

நிதி இழப்பு ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருப்பது அவசியம். சக ஊழியர்கள் உடனான, கருத்து வேறுபாடுகள் சில பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். உடல் நலன் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

தனுசு ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

உடல் நலன் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வேலையில் பணி அழுத்தம் காரணமாக மன உளைச்சல் ஏற்படலாம். உறவில் நல்லிணக்கம் இருக்கும். மூதாதையர் சொத்துக்கள் மூலம் நல்ல லாபம் பெறலாம்.

மகர ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். அதனைப் பயன்படுத்திக் கொண்டால் உங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். திருமணம் ஆனவர்களுக்கு புத்திர பாக்கியம் கைகூடும் வாய்ப்பு உண்டு.

கும்ப ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

சுக்கிரனின் அருளால் புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சுப காரியங்களுக்காக பணத்தை செலவிடுவீர்கள். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு புதிய உயரங்களை தொடுவீர்கள். நிதிநிலை சிறப்பாக இருக்கும்.

மீன ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

ஆடம்பர செலவுகளால் நிதி நிலைமை பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு. வேலையை மாற்ற நினைக்கலாம். பரஸ்பர புரிதல் இல்லாமை மற்றும் மோதல் காரணமாக, குடும்பத்தில் பதற்றம் இருக்கலாம். உடல் நல பாதிப்பும் ஏற்படும் வாய்ப்பு உண்டு.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

 

மேலும் படிக்க | ஒரே ராசியில் சஞ்சரிக்கும் 3 கிரகங்கள்! ‘இந்த’ 6 ராசிகள் தொட்டது துலங்கும்-நினைத்தது நடக்கும்..

மேலும் படிக்க | ஜூலை 9 குருவின் மகா நிகழ்வு.. 3 ராசிகளுக்கு ஓஹோ வாழ்க்கை, ராஜ பொற்காலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More