Zodiac Signs Benefited From Ketu Peyarchi 2025 : கிரக நிலைகளை பொறுத்து ஒவ்வொரு ராசிக்கும், அவரவர் வாழ்க்கையின் திசை மாறும். அந்த வகையில் வரும் ஜூலை 6ஆம் தேதி கேதுவின் பெயர்ச்சி நடக்க இருக்கிறது. இதையடுத்து 3 ராசிகளின் தலையெழுத்தே மாற இருக்கிறது.
கேது பெயர்ச்சி:
ஜூலை 6ஆம் தேதி, கேது கிரகம் பூர்வ பால்குனி நட்சத்திரத்திரத்திற்குள் நுழைகிறது. இதையடுத்து கேது, வரும் ஜூலை 20 வரை அதே நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளது. இந்த கேது கிரக பெயர்ச்சி, 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, சில ராசிக்காரர்கள் மட்டும் இதன் மூலம் நல்ல பயன்களை பெறுவதாக கூறப்படுகிறது. இதனால் எந்தெந்த ராசிக்காரர்கள் பயனடைகின்றனர் என்பதையும், அவர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதையும் இங்கு பார்ப்போம்.
கும்பம்:
கேதுவின் கிரகப்பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும் வகையில் இருக்கிறது. இந்த ராசியானது, சனியால் ஆளப்படுகிறது. இதனால் கேதுவின் சஞ்சாரம் இவர்கள் வாழ்க்கையிலும் வீட்டிலும் மகிழ்ச்சியை பெறுக்குவதோடு, படைப்பாற்றலையும் அதிகரிக்கிறது. அதே நேரத்தில், படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் பல்வேறு கலை தொடர்பான படிப்புகளை பயில இருக்கின்றனர்.
கேதுவின் ஆசிர்வாதத்தால், பல்வேறு மகத்தான நன்மைகளை பெறும் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி நிலை உயர்வையும் பெறுகின்றனர். வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் அதிகரிப்பதோடு, அந்த வருமானத்தை பெறுவதும் எளிதான முயற்சியாக மாறும். ஒரு சிலர், தங்களின் வேலைக்கான அங்கீகாரத்தை பெற இருக்கின்றனர். சிலர் புகழ் மற்றும் கௌரவத்தை பெறுவதோடு சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருக்க போகின்றனர். உறவுகளுக்குள் இருந்த மனக்கசப்புகள் விலகி, மகிழ்ச்சியும் பெருமளவில் அதிகரிக்குமாம்.
ரிஷபம்:
கேது பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் பல சிறப்புமிக்க நன்மைகளை பெற இருக்கின்றனர். அதில் குறிப்பிடும் வகையில் இவர்களுக்கு திடீர் பணவரவு கிடைப்பதோடு, சில பிடித்த பொருட்களை வாங்கி குவிக்கவும் வாய்ப்பிருக்கிறதாம். கடும் உழைப்பை போட்டு வேலை பார்ப்பவர்களுக்கு அவர்களின் அதிகாரிகள் நல்ல பாராட்டை தெரிவிப்பவர்கள். இதனால் அவர்களுக்கு சம்பள உயர்வுக்கான வாய்ப்புகளும் உள்ளதாம்.
கேது பெயர்ச்சியால் ரிஷப ராசியை சேர்ந்தவர்கள், தங்கள் நிதி நிலையை முன்பை விட உயர்த்திக்கொள்ளும் திறனை பெறுகின்றனர். அதே போல, சுய தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான மாதமாக இது அமையலாம். அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், முதலீடு செய்ய விருபுபவர்களுக்கும் கேதுவின் ஆசிர்வாதம் இருக்குமாம். தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறந்து விளங்கும் இவர்கள், தங்கள் முதலீடுகள் மூலம் பணத்தையும் திரும்ப பெற்றுக்கொள்வார்களாம்.
துலாம்:
துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு இனி வரும் நாட்களில் பாசிடிவான விஷயங்கள் நடைபெற இருக்கிறது. இவர்கள் அதிக அளவு நிதி ஆதாயங்களை பெறுவதோடு தங்கள் சுய தொழில் மூலமாகவும் அதிகமாக சம்பாதிக்க இருக்கின்றனர். புது தொழிலை சம்பாதிக்க விரும்புபவர்களுக்கு இது சாதகமான நேரமாக அமையும்.
கேதுவால் ஆசிர்வதிக்கப்படுவதால், துலாம் ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை குறித்த புதிய யோசனைகள் வரலாம். அதே நேரத்தில், தொழில் முனைவோர்கள் பணத்தை முதலீடு செய்யும் முன்னர் சில யோசனைகளை கேட்பது நல்லது. புதிய வருமானம் கிடைக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும்.
இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | ஜூலையில் சனி, குரு அருளால் 3 ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றிகள் குவியும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ