Ind vs End Test Series: ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட இருக்கிறது. இத்தொடர் வரும் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இல்லாத முதல் டெஸ்ட் தொடர் என்பதால், மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. புதிய கேப்டனாக சுப்மன் கில்லும், துணை கேப்டனாக ரிஷப் பண்ட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டெஸ்ட் தொடரை முன்னிட்டு இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் பயிற்சி முறை குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், கவுதம் கம்பீர் தனித்துவமானவர். வீரர்களுடன் தனித்தனியாகப் பேசுகிறார். அணியினரை ஒன்று திரட்டி பேசுவதற்குப் பதிலாக, வீரர்களுடன் கம்பீர் நேரடியாகப் பேசுகிறார், தேவைப்படும்போது மட்டும் ஆலோசனை வழங்குவதோடு, தாங்களாகவே விஷயங்களைச் செய்ய அவர்களுக்கு சுதந்திரம் அளிக்கிறார். அனைவரும் ஒரு திசையில் செல்லும்போது, அவருக்கு வேறு எண்ணங்கள் இருந்தால் தலையிடுவார்.
இந்திய கிரிக்கெட்டில் ஒரு சுவாரஸ்யமான கட்டத்தை அவர் கையாள்கிறார் என்று நான் நினைக்கிறேன். இரண்டு சுற்றுப்பயணங்களுக்கு முன்பு, எங்கள் அணி முற்றிலும் வித்தியாசமாக இருந்தது, இப்போது அது ஒரு மாற்றத்தை நோக்கிச் செல்கிறது. அவர்களுக்கு இப்போது இளம் வீரர்களுடன் அதிக பொறுமையும், அதிக அமைதியும் தேவைப்படும். அவர் தனது அணுகுமுறையில் மிகவும் அமைதியாக இருக்கிறார். மேலும் வீரர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என கூறினார்.
கேப்டன் பதவி குறித்து ஜஸ்பிரித் பும்ரா
எனது அனுபவத்தில், நீங்கள் சுதந்திரம் கொடுக்க வேண்டும், மேலும் வீரருக்காக நீங்கள் இருக்க வேண்டும். அவருக்கு நான் தேவைப்படும் போதெல்லாம், எந்தத் திறனிலும் நான் அவருக்கு ஆதரவாக இருக்கிறேன். நான் தலையிட விரும்பவில்லை, ஏதாவது ஒன்றைக் கண்டால், நான் அமைதியாக ஒரு வார்த்தையைக் கூறுவேன்.
நான் கிரிக்கெட் விளையாடியது அப்படித்தான். ஒரு நபர் எப்படி செயல்பட விரும்புகிறார் என்பதில் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார், அவருக்கு அவருடைய சிந்தனை செயல்முறை உள்ளது, அது அப்படித்தான் இருக்க வேண்டும். அவருக்கு என்னிடமிருந்து ஏதாவது தேவைப்பட்டால், நான் எப்போதும் அவருக்கு ஆதரவாக இருப்பேன் என்றார். குறிப்பாக, தனது பணிச்சுமையை நிர்வகிக்க விரும்பியதால் இந்தியாவின் டெஸ்ட் கேப்டன் பதவியை ஏற்க விரும்பவில்லை என்று ஜஸ்பிரித் கூறினார்.
மேலும் படிங்க: 2026 டி20 மகளிர் உலக கோப்பை அட்டவணை வெளியீடு.. எப்போது, எங்கே நடக்கிறது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ