India National Cricket Team: கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்த இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு (England vs India) இடையிலான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி (ஜூலை 10) தொடங்குகிறது. ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை தொடர் (Anderson - Tendulkar Trophy) தற்போது 1-1 என சமநிலையில் இருக்கிறது.
IND vs ENG Lords Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன்
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு 3வது டெஸ்ட் போட்டியை வென்று தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் தயார் நிலையில் உள்ளன. அந்த வகையில், இங்கிலாந்து அணி (Team England) அதன் பிளேயிங் லெவனை நேற்றே அறிவித்துவிட்டது. கடந்த போட்டியின் பிளேயிங் லெவனில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. ஜாஷ் டங்கிற்கு பதில் ஜோப்ரா ஆர்ச்சர் (Jofra Archer) சேர்க்கப்பட்டுள்ளார்.
IND vs ENG Lords Test: உள்ளே வரும் பும்ரா
அதே நேரத்தில் இந்திய அணியிலும் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) பிளேயிங் லெவனுக்குள் வருவது உறுதி. இவர் வருவதால் பிரசித் கிருஷ்ணா அமரவைக்கப்படுவாரா அல்லது முகமது சிராஜிற்கு ஓய்வு வழங்கப்படுமா என்பது இன்று தெரிந்துவிடும். அதே வேளையில் குல்தீப் யாதவிற்கு (Kuldeep Yadav) வாய்ப்பளிக்க வேண்டும் என குரல் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்றதும் கடுமையாக எழுந்தது. ஆனால், 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா (Team India) வென்ற பின்னர் அந்த குரல்களும் அடங்கிவிட்டன எனலாம்.
IND vs ENG Lords Test: சுப்மான் கில் சொன்னது என்ன?
"குல்தீப் யாதவை விளையாட வைக்க ஆர்வமாக உள்ளோம். ஆனால், கீழ் வரிசையில் நீண்ட பேட்டிங் இருக்க வேண்டும் என நினைக்கிறோம்" என கடந்த எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் சுப்மான் கில் சொல்லியிருந்தார். அதற்காகவே நம்பர் 8இல் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றார். தற்போது லார்ட்ஸ் டெஸ்டில் ஒரு சுழற்பந்துவீச்சாளரே போதும் என்றாலும் ஜடேஜா மற்றும் சுந்தர் விளையாடுவது உறுதி. எனவே குல்தீப் யாதவிற்கு லார்ட்ஸில் வாய்பபு கிடைக்காது எனலாம். மான்செஸ்டர், ஓவல் இரண்டு டெஸ்டில் வாய்ப்பு கிடைப்பதும் அரிதுதான்.
IND vs ENG Lords Test: குல்தீப் யாதவ் விளையாட வேண்டும்!
இந்நிலையில், குல்தீப் யாதவின் சிறுவயது பயிற்சியாளர் கபில் தேவ் பாண்டே (Kapil Dev Pandey) ஊடகம் ஒன்றில அளித்த பேட்டியில், ""குல்தீப் ஏன் (எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில்) விளையாடவில்லை என எனக்குப் புரியவே இல்லை. டாஸின் போது ஹெடிங்லியில் கீழ் பேட்டர் வரிசை வீரர்கள் பெரிதாக ரன்களை அடிக்காததால், பெரிய ரன்களை அடிக்க முடியாமல் போனது, அதனால் இரண்டாவது டெஸ்டில் வாஷிங்டன் சுந்தரை பேட்டிங்கில் சேர்த்ததாகவும் சுப்மான் கில் கூறியிருந்தார்.
குல்தீப் யாதவ் மணிக்கடடு சுழற்பந்துவீச்சாளர். அவர் இங்கிலாந்தையும், ஆஸ்திரேலியாவையும் வெளிநாட்டில் திக்குமுக்காட வைத்தவர். அவர் அணியில் இருக்க வேண்டும் அல்லவா? இல்லை அவரை மீண்டும் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு அனுப்பி, ஓபனிங் பேட்டிங்கில் இறங்கவைக்க வேண்டும்? அது சரியல்ல..." என கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
IND vs ENG Lords Test: விக்கெட் டேக்கர் இல்லாவிட்டால் பிரச்னேயே
ஆனால், அணி நிர்வாகத்திற்கு இவர் (குல்தீப்) மீது முழு நம்பிக்கை இல்லை, அதனாலேயே அவரை விளையாட வைக்க மறுக்கின்றனர். ஆறு பேட்டர், ஏன் 11 பேட்டரையும் வைத்துக்கொண்டு விளையாடலாம். ஆனால், ஒரு விக்கெட் எடுக்கும் பந்துவீச்சாளர் கூட இல்லையென்றால் அனைத்தும் வீண் தான். ஒரு பயிற்சியாளராக, தேசிய அணியில் குல்தீப் விளையாடுவது அவசியம் என்பேன். பேட்டர்கள் சதங்களை விளாசியும் நாம் தோற்றுப்போனால் அனைத்தும் வீண்தான். லார்ட்ஸ் போட்டியில் குல்தீப் யாதவ் நிச்சயம் விளையாட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இன்று மதியம் 3.30 மணிக்கு போட்டி தொடங்கும். 3 மணிக்கு டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவன் காம்பினேஷன் அறிவிக்கப்படும். நிச்சயம் குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் சேர்க்கலாமா வேண்டாமா என்ற குழப்பம் சுப்மான் கில்லும் இன்னும் நீடிக்கும் எனலாம்.
மேலும் படிக்க | சச்சின், கோலி இல்லை... லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த இந்தியர்களின் லிஸ்ட்!
மேலும் படிக்க | இந்திய அணியை தோற்கடிக்க... 2 புதிய ஆயுதங்களுடன் இங்கிலாந்து அணி... என்ன தெரியுமா?
மேலும் படிக்க | இந்திய அணியில் 2 முக்கிய மாற்றம்.. கம்பீரின் பிளான் இதுதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ