MMS vs KK: பாண்டிச்சேரி பிரிமியர் லீக்கின் 2வது சீசன் நேற்று(ஜூலை 06) பாண்டிச்சேரி சீகம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணி, 2 விக்கெட் வித்தியாசத்தில் ஊசுடு அக்கார்ட் அணியை வீழ்த்தியது. இந்நிலையில், இரண்டாவது போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் நடப்புச் சாம்பியன் மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும், காரைக்கால் நைட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய காரைக்கால் நைட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முஹமது அயிப் ஜாவத் மற்றும் நிதேஷ் செதாய் இருவரும் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். முதல் ஓவரில் 18 ரன்களும் அடித்த காரைக்கால் நைட்ஸ் அணி 4 ஓவர்களில் 44 ரன்கள் குவித்தது. திடீர் திருப்பமாக 6வது ஓவரை வீசிய புவியரசன் மனோகரன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நிதிஷ் செதாய் 15 பந்துகளில் (2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து அமன் கான் (0), முஹமது அயிப் ஜாவத் 26 ரன்கள் (18 பந்துகள், 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்) எடுத்து ரன் அவுட்டானார். ஒரே ஓவரில் 3 வீரர்கள் வெளியேறியது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து வந்த வீரர்களில் மாரிமுத்து விக்னேஷ்வரன் 17, பூபேந்தர் சௌகான் 24, கலையமுதன் 14 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தை தொட்டனர். இதனால், காரைக்கால் நைட்ஸ் அணி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. மாஹே அணி தரப்பில் புவியரசன், கரன் கண்ணன், நித்தியானந்தா ராமன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பின்னர் 118 எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன், மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணி களமிறங்கியது. முதல் ஓவரின் 2 பந்திலேயே அணியின் தொடக்க ஆட்டக்காரர் அஜய் ரொஹேரா எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேறினார். அதன் பின்னர் இணைந்த கமலேஷ்வரன் - ராகவன் ராமமூர்த்தி இணை அதிரடியாக ஆடி ஆடினர்.
இதனால், 5 ஓவர்களில் மாஹே மெகலோ அணி 48 ரன்கள் எடுத்தது. இந்நிலையில், கமலேஷ்வரன் 18 பந்துகளில் (4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) 27 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ராகவன் ராமமூர்த்தி 20 பந்துகளில் (4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) 29 ரன்கள் எடுத்து அவுட்டானார். இருவரும் இணைந்து 52 ரன்கள் எடுத்தனர். இறுதியில் நிலைத்து நின்று ஆடிய கரண் கண்ணன் 35 ரன்கள் எடுக்க, மாஹே மெகலோ அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்து வெற்றிவாகை சூடியது. 2 விக்கெட்டுகள் மற்றும் 35 ரன்கள் எடுத்த, கரண் கண்ணன் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.
இது குறித்து கூறிய கரண் கண்ணன், "இந்த வெற்றி நல்ல முறையில் அமைந்தது. நாங்கள் திட்டமிட்டபடி போட்டியை வெற்றிகரமாக முடித்தோம். தனிப்பட்ட முறையில் எதையும் சிந்திக்கவில்லை. அணியாக இணைந்து செயல்பட்டோம். பாண்டிச்சேரி பிரிமியர் லீக் இளைய தலைமுறையினருக்கு, புதிய தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளில் நிறைய வீரர்களை பாண்டிச்சேரி பிரிமியர் லீக் உருவாக்கும்" என்று தெரிவித்தார்.
மேலும் படிங்க: 'ஜான்டி சிராஜ்' சச்சின் டெண்டுல்கர் வைத்த புதிய பெயர் - ஏன் தெரியுமா?
மேலும் படிங்க: இங்கிலாந்தில் மாஸ் காட்டிய டாப் 8 இந்திய பௌலர்கள்... முதலிடத்தில் யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ