Pondicherry Premier League Season 2: உலகளவில் டி20 கிரிக்கெட் லீக் தொடர்கள் அதிக கவனத்தை பெற்றிருக்கிறது. அந்த வகையில், பிராந்திய ரீதியிலும் அதிகமாக டி20 லீக் தொடர்கள் தற்போது பெருகிவிட்டன. இந்தியாவில் ஐபிஎல் தொடரின் வளர்ச்சிக்கு பின் கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு முன்னணி மாநிலத்திலும் டி20 லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டை பொருத்தவரை கடந்த ஆண்டுகளாக தமிழ்நாடு பிரீமியர் லீக் எனும் டிஎன்பிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. அதேபோல், பாண்டிச்சேரி பிரிமியர் லீக் (PPL) தொடரும் கடந்தாண்டு தொடங்கப்பட்டது. கடந்தாண்டு மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.
PPL Season 2: பிபிஎல் தொடரை எங்கு, எப்போது பார்ப்பது?
இந்நிலையில், பாண்டிச்சேரி பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் நேற்று (ஜூலை 6) பாண்டிச்சேரி சீகம் மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. மொத்தம் 6 அணிகள் இந்த தொடரில் மோதுகின்றன. தொடக்க நாளான நேற்று மட்டும் ஒரு லீக் போட்டி நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு ஒரு போட்டி, மாலை 6 மணிக்கு ஒரு போட்டி என வரும் ஜூலை 22ஆம் தேதி வரை தினமும் 2 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. ஜூலை 18ஆம் தேதி மட்டும் ஒரு லீக் போட்டி திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அணியும் மற்ற 5 அணிகளுடன் தலா 2 போட்டிகளில் ரவுண்ட் ராபின் முறையில் விளையாடும். இதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும். ஜூலை 24ஆம் தேதி குவாலிஃபயர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் நடைபெறுகின்றன. ஜூலை 25ஆம் தேதி குவாலிஃபயர் 2 போட்டி நடைபெறுகிறது. ஜூலை 27ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் பாண்டிச்சேரி சீகம் மைதானத்தில் நடைபெறுகிறது. புதுச்சேரி துத்திப்பேட்டையில் உள்ள இந்த மைதானத்தில் போட்டியை இலவசமாக நேரில் கண்டுகளிக்கலாம். Star Sports Khel சேனலில் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். Fancode ஓடிடி தளத்திலும் நேரலையில் போட்டியை காணலாம்.
PPL Season 2: 3வது லீக் போட்டி
இந்நிலையில், PPL 2வது சீசினின் 3வது லீக் போட்டியில், வில்லியனூர் மொஹித் கிங்ஸ் அணியும், ஜெனித் யானம் ராயல்ஸ் அணியும் மோதிய போட்டி இன்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற யானம் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவெடுத்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வில்லியனூர் மொஹித் கிங்ஸ் அணி முதல் விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்தது. சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்த பானு ஆனந்த் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
தொடர்ந்து மொஹித் காலே 27 ரன்களில் பங்கஜ் யாதவ் பந்துவீச்சில் போல்டானார். கேப்டன் தாமோதரன் ரோஹித் மற்றும் அமன் கான் இருவரும் டக் அவுட்டானாலும், அடுத்து களமிறங்கிய ஆகாஷ் மற்றும் பிரித்விராஜன் இருவரும் அட்டகாசமாக விளையாடினர்.
PPL Season 2: 95 ரன்கள் பார்ட்னர்ஷிப்
இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டுக்கு 95 ரன்கள் எடுத்தனர். பின்னர் ஆகாஷ் 31 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 46 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதேபோல், பிரித்விராஜன் 32 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 48 ரன்கள் எடுத்து அவுட்டானார். இருவரும் ரன் அவுட் முறையில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
இறுதிக்கட்டத்தில் புனித் தத்தே 2 சிக்ஸர்கள் பறக்கவிட, வில்லியனூர் மொஹித் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. யானம் ராயல்ஸ் தரப்பில் விக்னேஷ் மற்றும் பங்கஜ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டை கைப்பற்றினர்.
PPL Season 2: 188 ரன்கள் இலக்கு
பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய யானம் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் சிறப்பான ஆட்டத்தால் 5 ஓவர்களில் 50 ரன்கள் குவித்தனர். 6ஆவது ஓவரின் முதல் பந்தில் பிரவின் 21 ரன்களில் வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து ஆதித்யா கர்வால் மற்றும் சனபோயினா தருண் ஆகியோர் தலா 4 ரன்களில் வெளியேறினர். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த வேதாந்த் பரத்வாஜ் 21 பந்துகளில் 4 பவுண்ட்ரி, 2 சிக்ஸர் உள்பட 35 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர், பிரகாஷ் சிங் 6 ரன்களில் வெளியேறினார்.
PPL Season 2: ஆட்ட நாயகன் அமான் கான்
அதன் பின்னர் அணியின் ரன் வேகம் வெகுவாக குறைந்தது. கடைசி 10 ஓவர்களில் 111 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கார்த்திக் உதயநாராயணன் 8, பிரகாஷ் குமார் 11, பிரேம்ராஜ் ராஜவேலு 6, விக்னேஷ் 5 என அடுத்தடுத்து வெளியேறினர். கடைசிக் கட்டத்தில் பிரனாயி சிங் 21 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார்.
இறுதியில், ஜெனித் யானம் ராயல்ஸ் அணி 19.1 ஓவர்களில் 136 ரன்கள் மட்டும் எடுத்து ஆல்-அவுட்டானது. இதன் மூலம் வில்லியனூர் மொஹித் கிங்ஸ் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக பந்துவீசிய வில்லியனூர் மொஹித் கிங்ஸ் பந்துவீச்சாளர் அமன் கான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன் விருதும் அவருக்கே வழங்கப்பட்டது.
#ShriramCapitalPPL #PPL2025 #PondicherryPremierLeague #PondicherryCricket pic.twitter.com/0Z9tqxGK9C
— Pondicherry Premier League (@PPLT20_Cricket) July 7, 2025
PPL Season 2: நாளைய போட்டிகள் விவரம்
முன்னதாக இன்று மதியம் நடந்த 2வது லீக போட்டியில், நடப்புச் சாம்பியன் மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, காரைக்கால் நைட்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
நாளையும் (ஜூலை 8) இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. மதியம் 2 மணிக்கு நடைபெறும் போட்டியில் ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணியும், வில்லியனூர் மொஹித் கிங்ஸ் அணியும் மோத உள்ளன. மாலை 6 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஜெனித் யானம் ராயல்ஸ் அணியும், மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் மோத உள்ளன.
மேலும் படிக்க | இனி இந்த இந்திய வீரர் விளையாட வாய்ப்பே இல்லை... இங்கிலாந்து போனதே வேஸ்ட்!
மேலும் படிக்க | இந்த வீரர்கள் மட்டும் தான் தக்கவைப்பு! ஐபிஎல் 2026ல் மொத்தமாக மாறும் சிஎஸ்கே!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ