கடைசி 5 டெஸ்ட் போட்டிகளில் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பெர்ஃபார்மன்ஸ்!
R Balaji
Jul 09, 2025
R Balaji
ஆர்சர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 ஆண்டுகள் ஆகிறது. அவர் கடைசியாக 2021ஆம் ஆண்டுதான் விளையாடினார்.
2021 பிப்ரவரியில் அகமதாபாத்தில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் ஒரே இன்னிங்ஸில் 1/24 எடுத்தார்.
2021 பிப்ரவரியில் சென்னையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் 2/75 மற்றும் 1/23 எடுத்தார்.
2020 ஆகஸ்ட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான சவுத்தாம்ப்டன் டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஜோஃப்ரா ஆர்ச்சர் விக்கெட்கள் ஏதும் எடுக்கவில்லை.
2020 ஜூலையில், பாகிஸ்தானுக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 59 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும் எடுத்தார்.
2020 ஜூலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஆர்ச்சர் 96 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் மட்டுமே கைப்பற்றினார்.