தமிழக அரசியலில் புதிய மாற்றாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தனது உறுப்பினர் சேர்க்கை பணியை மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்தில், புதிய செயலியை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இதற்கான முக்கியமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கட்சித் தலைவர் விஜய் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதி இந்த ஆப்பை வெளியிடுகிறார்.
தவெக கட்சி தனது ஆரம்ப உறுப்பினர் சேர்க்கை முயற்சியை டிஜிட்டல் மயமாக்கி, வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் மூலம் ஆன்லைனில் பொதுமக்களை உறுப்பினர்களாக இணைத்தது. இந்த இயக்கம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, அடுத்த கட்டமாக இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை துல்லியமான மற்றும் நேரடி அணுகுமுறை கொண்டு தேர்தலுக்கு உதவும் வகையில் செயல்படுத்த புதிய செயலி (mobile app) உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய செயலியின் முக்கியத்துவம் என்னவெனில், இதில் முழுமையான வாக்காளர் பட்டியல் தரவுகள் இணைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் தவெக நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் நேரடியாக வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட முடியும். அதுவும், ஒவ்வொரு வாக்காளர் பிரிவிற்கேற்ப பயனாளிகளை கண்டறிந்து உடனடியாக செயலியில் பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் பயன்பாடு குறித்து விரிவாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சமூக ஊடகப் பொறுப்பாளர்களுக்கு பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடந்தது. இதில் புதிய செயலியின் இயங்கும் முறை, எப்படி வாக்காளர்களை கொண்டு வருவது, பூத் கமிட்டி வேலைகள், வாக்காளரை எப்படி அடையாளம் காணுவது போன்ற விவரங்களை இணைக்கும் வசதி போன்றவை குறித்து விளக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில், இந்த புதிய செயலிக்கு MY TVK என்று பெயர் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பெயரும், செயலியின் வடிவமைப்பும் அனைத்தும் காமராஜரின் பிறந்த நாளன்று வெளியிடப்படும் எனத் கூறப்படுகிறது. தவெக கட்சி, தொடக்கம் முதலே இணையதள மற்றும் மொபைல் தொழில்நுட்பத்தை பின்பற்றி, இளம் தலைமுறையை நேரடியாக கட்சிக்குள் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது ஒருவகையில் தமிழக அரசியல் வரலாற்றில் டிஜிட்டல் அரசியல் உறுப்பினர் சேர்க்கையின் முன்னோடி முயற்சி என்ற வகையிலும் கருதப்படுகிறது.
மேலும் படிக்க | ஜூலை 15ல் மகளிர் உரிமைத் தொகை தவிர வேறு எந்த திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ