Tamil Nadu Today Live News Updates: சிங்கப்பெருமாள் கோயிலில் பராமரிப்பு பணி இன்று (ஜூலை 11) நடைபெறுவதால் சென்னையில் மொத்தம் 12 ரயில் சேவைகள் பகுதி அளவிலும், முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, தற்போதைய தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான வழக்கு இன்று ஸ்ரீவில்லிபுதூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்குகிறது.