தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மதுரை – கன்னியாகுமரி, கன்னியாகுமரி – எட்டூர்வட்டம், சாலைப்புதூர் – மதுரை, நாங்குநேரி – கன்னியாகுமரி ஆகிய வழித்தடங்களில் உள்ள கப்பலூர், எட்டூர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய நான்கு சுங்கச்சாவடிகள் வழியாக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை இயக்கியதற்காக செலுத்த வேண்டிய சுங்கக் கட்டண பாக்கி ரூ. 276 கோடி இன்னும் செலுத்தப்படாமல் உள்ளதாகக் கூறி, சுங்கச்சாவடிகளை பராமரிக்கும் நான்கு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சுங்கக் கட்டண பாக்கி ரூ. 276 கோடியை செலுத்தி, பிரச்னைக்கு தீர்வு காண மாநில போக்குவரத்துத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நான்கு சுங்கச் சாவடிகள் வழியாக ஜூலை 10ம் தேதி முதல் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை இயக்க அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை மாற்றியமைக்க கோரி அரசுத்தரப்பில் முன் வைக்க கோரிய முறையீட்டை ஏற்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்குகளை இன்று (ஜூலை 10) மீண்டும் விசாரணைக்கு எடுத்தார்.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், பிரச்சனைக்கு தீர்வு காண சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் நிறுவனங்களுடன் போக்குவரத்து துறை செயலாளர் பேச்சு நடத்தி வருவதாகவும், விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும் எனவும் தெரிவித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, கப்பலூர், எட்டூர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய நான்கு சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை இயக்க அனுமதிக்க கூடாது என்ற உத்தரவை ஜூலை 31 ஆம் தேதி வரைக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
மேலும் படிங்க: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: புதியவர்களுக்கு எந்த மாதம் பணம் வரும் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ