Home> Tamil Nadu
Advertisement

அதிமுக - பாஜக கூட்டணி.. டம்மி வாய்ஸாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை - நயினார் நாகேந்திரன்!

அதிமுக, பாஜக கூட்டணி உருவானதில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டது என்றும் அவர் தோல்வி பயத்தில் உள்ளார் என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுயுள்ளார். 

அதிமுக - பாஜக கூட்டணி.. டம்மி வாய்ஸாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை - நயினார் நாகேந்திரன்!

விருதுநகர் செல்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசினார். அப்போது, சுங்கச்சாவடிகளில் மட்டுமல்லாமல் டீசல், பெட்ரோல் போடுவதிலேயே கோடிக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ளார்கள். அரசாங்கம் போக்குவரத்து மானியம் கொடுத்து அதை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுதான் முதலமைச்சர் செய்ய வேண்டிய வேலை. அதனால் போக்குவரத்து கழகம் பாதிக்கப்படுகிறது.

தமிழ்நாடு இங்கே தான் இருக்கிறது. அதில் எதற்கு ஓரணியில் பயணம் செய்ய வேண்டும் என தெரியவில்லை. முதலமைச்சரை பொருத்தமட்டில் எப்போது அதிமுக, பாஜக கூட்டணி அமைந்ததோ, அப்போது இருந்தே அவருக்கு ஜுரம் வந்துவிட்டது. தோல்வி பயம் வந்துவிட்டது. கூட்டணி கட்சித் தலைவர்களும் அதே மாதிரி தான் பேசுவார்கள். 

அம்பாசமுத்திரத்தில் ஒரு 17 வயது சிறுமியை போதை பழக்கமுடையவர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். வள்ளியூரில் ஒரு மூதாட்டி 17 பவுன் நகை கடற்கொலை செய்யப்பட்டிருக்கிறார். தினசரி இது போன்ற சட்ட ஒழுங்கு பிரச்சனை, போதைப் பொருள்கள் நடமாட்டம் உள்ளது. இதை மறைப்பதற்காக  முதல்வர் ஓரணியில் தமிழ்நாடு என்கிற பெயரில் ஊர் ஊராக செல்கிறார். இதனால் எந்த நன்மையும் இல்லை. இன்று வெகுஜனம் விரோத ஆட்சியாக உள்ளது நிச்சயமாக 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சருக்கு இப்போது என்ன பேசுவது என்று தெரியவில்லை. முன்னாள் முதல்வர் பழனிச்சாமி அவர்கள் பேச வேண்டிய கருத்தைதான் பேசியிருக்கிறார். கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம், டம்மி வாய்ஸாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அண்ணன் வைகோ எப்போதும் அதிகம் கோபப்படக் கூடியவர். கூட்டத்தில் இருக்கும்போது சத்தம் போடுவது எல்லா இடங்களிலும் செய்கிறார். பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டு இருக்கிறார், உண்மையில் அது கண்டிக்கத்தக்கது, வருந்தத்தக்கது.

மதுரையில் நடந்த முருகன் மாநாட்டின் 6 நாட்கள் இரண்டரை லட்சம் பேர் வந்திருந்தார்கள். ஆறாம் நாள் 5 லட்சம் பேர் வந்தனர். அவர்கள் கட்சிக் கூட்டம் நடத்தினால் டாஸ்மாக்கில் தான் அதிக கூட்டம் இருக்கும். ஆனால் இந்த கூட்டத்திற்கு வந்தவர்கள் கூட்டம் முடிந்தவுடன் அமைதியாக அமர்ந்திருந்த சேரை எடுத்து அடுக்கி வைத்துவிட்டு கீழே கிடந்த பாட்டிலை சுத்தம் செய்து சென்றார்கள். இதுதான் உண்மையான முருக பக்தர்கள் மாநாடு. திருச்செந்தூரில் நடைபெற்ற கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய கும்பாபிஷேகம். தனிமனிதனாக சேகர்பாபு சொல்கிறார் என்றால் பொறுப்பேற்க முடியாது என கூறினார். 

மேலும் படிங்க: தவெக என படகுகளில் எழுதியிருந்தால் மானியம் வழங்க மறுப்பதா? இதென்ன திமுகவின் பணமா? கொந்தளித்த விஜய்!

மேலும் படிங்க: 4 சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகள் செல்ல தடை.. ஜூலை 31 வரை நிறுத்திவைப்பு! ஜகோர்ட் அதிரடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More