இன்று (ஜூன் 12) தைலாயபுரத்தில் செய்தியாளர் சந்தித்து பாமக நிறுவனம் ராமதாஸ் பேசினார். அப்போது, தண்ணீவிட்டே வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருக திருவுடமோ எண்ணமெல்லாம் நெய்யாக எம் உயிரினுள் வளர்ந்த வண்ண விளக்கினுள் வடிய திருவுடமோ என பாரதியார் பாடலை மேற்கோள் காட்டி பேசிய ராமதாஸ் தனக்கும் செயல் தலைவருக்கும் உள்ள பிரச்சனை எல்லோருக்கும் தெரியும், இரண்டு பேரின் சமரச பேச்சுவார்த்தைக்கு தைலாபுரம் வந்தார்கள் நான் அங்கே சென்றேன். சமரச பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை. சமரச பேச்சுவார்த்தை டிராவில் முடிந்தது.
நான் தொடங்கிய அமைப்பில் இருந்து 14 பஞ்சாயத்துகாரர்கள் பஞ்சாயத்து பேச வந்தனர். வந்தவர்கள் ஒரே விதமான தீர்ப்பினை கூறியதாகவும், பஞ்சாயத்து பேச வந்தவர்கள் தைலாபுரத்தில் இருந்து கட்சியை ராமதாஸ் வளர்க்க வேண்டும், சென்னையிலிருந்து அண்புமணி ராமதாஸ் கட்சியை வளர்க்க வேண்டும் என பஞ்சாயத்து பேசியதாகவும் பஞ்சாயத்து பேசியது ஆடிட்டர்குரு, சைதை துரைசாமி என பெயரினை குறிப்பிடாமல் இருவர் என குறிபிட்டார்.
வன்னியர் சங்க மாநாட்டின் போது தலைவர் பதவி வழங்க நான் தயார் என கூறியபோது, அண்புமணி நம்பமுடியவில்லை என தெரிவித்ததாகவும், குலதெய்வம் என பாட்டாளி மக்கள் சொந்தங்கள் தன்னை தெரிவிப்பவர்களை வழிகாட்டியாக நேசிப்பதாகவும் 44 ஆண்டுகள் உழைப்பால் உருவாக்கி கட்டிகாத்த கட்சியை ஓரிரு ஆண்டுகளில் கட்சியை தனக்கே தலைமை ஏற்க உரிமையில்லையா என கேட்பதே தனக்கு அவமானமாக உள்ளதாக கூறினார்.
ஒவ்வொரு செங்கல்லாக கட்டிய பாட்டாளி மக்கள் கட்சியின் மாளிகையில் தான் குடியமர்த்தியவரே தன்னை கழுத்தினை பிடித்து வெளியே தள்ளும் அளவிற்கு செயல்பாடுகள் இருந்ததாகவும் அன்று அமைதி காத்திருந்தால் அன்புமணிக்கு அதிகாரம் தானாக வந்திருக்கும், ஒவ்வொரு மாவட்ட செயலாளருக்கும் தொலைபேசியில் அழைத்து தடுத்தவர் தான் அன்புமணி தீர்வு காண்பதற்கு தந்தை சொல்மிக்க மந்திரமில்லை, தந்தைக்கு பிறகே தனயன் ராமதாசுக்கு இதுவரை அன்புமணி ராமதாஸ் என்றும் குருவிற்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம் தந்தைக்கு மிஞ்சிய தனயன் இருக்க கூடாது இதுவே நியதி குலசாமி என கூறி கொண்டு தன் நெஞ்சி கொலைகளில் குத்துவதாக தெரிவித்தார்.
தங்களுக்கு எல்லாமே அய்யா தான் என கூறி கொண்டு அதால பாதாளத்துல தள்ள பார்ப்பதாகவும், அய்யாவின் லட்சியம் தான் லட்சியம் என கூறிவிட்டு தன்னையே தாக்குகிறார்கள் இதனை தான் உருவாக்கிய சமூக ஊடக பிரிவு வலைதளம் மூலம் செய்வதாக குற்றஞ்சாட்டினார். தன் கைவிரல் கொண்டே தன் கண்னை குத்தி கொண்டதாகவும், உயிருள்ள தன்னை உதாசினம் செய்து உருவ படத்தினை வைத்து கொண்டு உற்சவம் செய்வதாகவும், நடைபிணமாக தன்னை ஆக்கி நடைபயணம் மேற்கொள்வேன் என்பது நாடகம் என கூறினார்.
மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்றுவிட்டு விமானத்தில் சென்னை திரும்பும் போது அன்புமணி பாமக கட்சியை பார்த்து கொள்கிறேன் என தன்னிடம் கூறினார். அப்போது இரண்டு சொட்டு கண்ணீர் விட்டேன், செளமியா தன்னிடம் வந்து மாமா என்றார். நான் ஏமா என்றேன், தலைவரை மாற்றிவிடலாம், செளமியா தன்னிடம் கூறியதாகவும் அரசியலில் தன் குடும்பத்தை சார்ந்த பெண்கள் யாரும் அரசியலில் ஈடுபட மாட்டார்கள் என கூறினேன். ஆனால் அதன் பின்பு என்ன நடந்தது என எல்லோருக்கும் தெரியும். இருவர் வந்தார்கள் பெரிய ஜாம்பவான்கள் அன்புமணியிடம் பேசியிருக்கிறார்கள். அரசியலில் வாரிசு என்பது கிடையாது. பாமக பின்புலத்தில் யாரும் இல்லை என்றும் யார் சொன்னாலும் அன்புமணி கேட்ட மாட்டார்.
முயலுக்கு நான்கு கால் என்றால் அன்புமணி மூன்று கால் என்று தான் கூறுவார். பாமகவை சரியாக வழிநடத்தவில்லை என்பதாலும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பதாலும் உழைப்பதற்கு தயாராக அன்புமணி இல்லை என்பதால் தலைவர் பதவி பறிக்கபட்டது. நீயா நானா என பார்த்துவிடலாம். மக்கள் என் பக்கம் இருப்பதாகவும், தர்மபுரியில் அன்புமணி போட்டியிடுவதாக கூறிவிட்டு செளமியாவை அன்புமணி நிறுத்தியதாக கூறினார். சமூக நீதி பேரவையின் தலைவராக இருந்த பாலு சரியில்லை என்பதால் வழக்கறிஞர் பாலு மாற்றம் செய்யபட்டதாகவும் சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு அன்புமணிக்கு தலைவர் பதவி கொடுக்கிறேன் அதுவரை நான் தான் தலைவர் என்றும் அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லை என நிர்வாக குழுவில் பகிரங்கமாக தெரிவித்ததாக ராமதாஸ் தெரிவித்தார்.
செயல் தலைவராக இரு என தந்தை கூறினார். அது மந்திர சொல் செயல்தலைவராக இருந்து செயல்படுவேன். இல்லையெனில் சாதார தொண்டனாக செயல்படுவேன் என அன்புமணி செயல்பட வேண்டும். அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்க மாட்டேன் நல்ல தீர்வு வரும் என காத்திருக்கிறேன். அதனால் தேர்தல் ஆனையத்தில் தலைவர் மாற்றம் குறித்து தெரிவிக்கவில்லை. பிரச்சனை முடிந்த பிறகு செய்வோம் என கூறினார். பாமக உடன் கூட்டணி வைத்து கொள்ள விரும்புகிறவர்கள் அவர்களுக்கு தெரியும் யாருடன் கூட்டணி குறித்து பேச வேண்டும் என்று. நான் தான் கூட்டணி குறித்து முடிவு செய்வேன். கட்சி தொண்டர்கள் தன் பக்கம் என அவர் தெரிவித்தார். மேலும், தமிழக வெற்றி கழகத்துடன் இதுவரை கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் பாஜக இதுவரை கூட்டணி குறித்து பாமகவிடம் பேசவில்லை என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் படிங்க: நான் முதல்வன் திட்டம் : சென்னை மக்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட்நியூஸ்...!
மேலும் படிங்க: புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் : தமிழ்நாடு அரசின் முக்கிய அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ