TN DGP Shankar Jiwal Press Meet: சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். தமிழ்நாட்டில் பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய பயங்கரவாதிகள் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
Shankar Jiwal: 3 குற்றவாளிகள் கைது
ஆப்ரேஷன் அறம், அகழி ஆகியவற்றின் மூலம் கோவை காவல்துறையினர் தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் ஆந்திரா கர்நாடகா காவல் துறையினர் இணைந்து 3 நீண்ட ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மூன்று தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி குற்றவாளிகள் 30 ஆண்டுகள், 26 ஆண்டுகள், 29 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கைதாகி உள்ள அபூபக்கர் சித்திக்கை பொறுத்தவரை 5 வழக்குகளில் தொடர்புடையவராக உள்ளார். முகமது அலி பொறுத்தவரை ஏழு வழக்குகளில் தொடர்புடையவராக உள்ளார். இந்த இருவரையும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கைது செய்து உள்ளோம்.
Shankar Jiwal: வெடிகுண்டு தயாரிப்பு நிபுணர்
டைலர் ராஜாவை பொறுத்தவரை நான்கு வழக்குகளில் தொடர்புடையவர் ஆக உள்ளார். இவரை கர்நாடக காவல்துறையினுடன் இணைந்து கைது செய்துள்ளோம். சட்டப்படிதான் இவர்கள் மீது தீவிரவாத வழக்குகள் பதியப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் மீண்டும் காவல்துறையை அவர்களை விசாரணைக்கு எடுத்து விசாரிக்கும்.
குறுகிய இடைவெளியில் ஆந்திர காவல்துறையின் உதவியுடன் அபூபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி என்கிற அலி, யூனுஸ் சேக் மன்சூரை தமிழக காவல்துறையினர் கைது செய்திருக்கிறது. மற்ற மாநிலங்கள் பொருத்தவரை தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது கைது செய்திருக்கும் குற்றவாளிகள் வெடிகுண்டு தயாரிப்பில் நிபுணர்களாக இருந்துள்ளனர்.
Shankar Jiwal: 2 நபர்கள் தலைமறைவு
கைது செய்யப்பட்டுள்ள மூன்று நபர்களில் டெய்லர் ராஜா மட்டும் தடை செய்யப்பட்ட அல் உமா அமைப்பில் உறுப்பினராக இருந்துள்ளார். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இன்னும் சிலர் தலைமறைவாக உள்ளனர் அவர்களை தேடும் பணி உள்ளது. இந்த வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்த பின்னர் தலைமறைவாக இரண்டு நபருக்கும் குறைவாகவே உள்ளனர். அதேபோல கைது ஆணை பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்படாமல் தலைமறைவாக இரண்டு நபருக்கு குறைவான ஆட்களே உள்ளனர்.
Shankar Jiwal: அஜித்குமார் வழக்கு குறித்து...
மேலும், திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் தொடர்பாக விமர்சிக்கப்பட்ட நிகிதா வழக்குகள் குறித்த கேள்விக்கு, "தமிழகத்தில் உள்ள ஒரு சில வழக்குகளை வைத்து மொத்த காவல் துறையையும் குற்றம் சொல்ல முடியாது. தமிழ்நாடு காவல்துறை எந்த அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது என்பதை நீங்கள் தேசிய ஆவண பதிப்பகத்தின் தரவுகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். கண்டிப்பாக இந்த வழக்கில் பணியாற்றிய காவல் துறையினருக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்படும்" என கூறினார்.
மேலும் படிக்க | ரிதன்யா வழக்கு: ஜாமின் மனு கொடுத்த மாமியார்..தீர்ப்பு என்ன? முழு விவரம்
மேலும் படிக்க | சென்னை மக்களே நோட் பண்ணுங்க... மின்சார ரயில் சேவையில் பெரிய மாற்றம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ