Home> Technology
Advertisement

பி.எம். கிசான் 20வது தவணை : மொபைல் எண்ணை ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி

PM Kisan mobile number update : பிஎம் கிசான் 20வது தவணைத் தொகை விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், விவசாயிகள் ஆன்லைனில் தங்களின் மொபைல் எண்ணை அப்டேட் செய்வது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

பி.எம். கிசான் 20வது தவணை : மொபைல் எண்ணை ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி

PM Kisan mobile number update : பிஎம் கிசான் 20வது தவணைத் தொகை விரைவில் வெளியாக இருக்கிறது. நாடு முழுவதும் இதற்கான பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் இம்முறை வேளாண் அடுக்க எண் பெறும் விவசாயிகளுக்கு மட்டுமே இந்த தொகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 ஆம் தேதிக்கும் விவசாயிகள் வேளாண் அடுக்க எண்ணுக்கு விண்ணப்பித்து பெற வேண்டும். இதற்கு அருகில் உள்ள தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத் துறை அலுவலகத்துக்கு விவசாயிகள் ஆவணங்களுடன் நேரில் சென்றாலே அங்கிருக்கும் அரசு ஊழியர்கள் வழிகாட்டுவார்கள். அதேநேரத்தில் பிஎம் கிசான் தொகை தொடர்பான அப்டேட்டுகளை உங்களின் மொபைலுக்கு எஸ்எம்ஸ் வழியாக வரவேண்டும் என்றால், நீங்கள் பயன்படுத்தும் மொபைல் எண்ணை கொடுத்திருக்க வேண்டும்.

ஒருவேளை விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்துக்கு ஏற்கனவே கொடுத்த மொபைல் எண்ணை மாற்ற வேண்டும் என்றால் ஆன்லைன், ஆப்லைன் என இரண்டிலும் மாற்றிக் கொள்ளலாம். இப்போது ஆன்லைனில் மாற்றுவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

பிஎம் கிசான் திட்டத்துக்கு மொபைல் எண் ஏன் முக்கியம்?

SMS அலர்ட்: பி.எம். கிசான் தொகை கணக்கில் வந்ததை உறுதிப்படுத்தும் SMS, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும்.

OTP சரிபார்ப்பு: ஆதார் சரிபார்ப்புக்கு மொபைல் எண் தேவை.

புகார் மற்றும் தற்போதைய நிலை: உங்கள் கிசான் விண்ணப்ப நிலையை பார்க்க மொபைல் எண் அவசியம்.

பி.எம். கிசான் போர்ட்டில் மொபைல் எண் புதுப்பிப்பது எப்படி?

ஆன்லைன் முறை:

* அதிகாரப்பூர்வ வலைத்தளம் – https://pmkisan.gov.in -ல் செல்லவும்.
* "Update Mobile Number" (மொபைல் எண் புதுப்பிக்க) விருப்பத்தை கிளிக் செய்யவும்.
* உங்கள் பதிவு எண் (Registration No) அல்லது ஆதார் எண்ணை உள்ளிடவும்.
* கேப்சா கோட் (Captcha) அடித்து, "Search" செய்யவும்.
* உங்கள் விவரங்கள் தெரிந்தவுடன், புதிய மொபைல் எண்ணை உள்ளிட்டு "Submit" செய்யவும்.
* OTP உறுதிப்படுத்தல்: புதிய எண்ணுக்கு வரும் OTP-ஐ உள்ளிடவும்.

ஆஃப்லைன் முறை:

உங்கள் பகுதியிலுள்ள காமன் சர்வீஸ் சென்டர் (CSC) அல்லது விவசாயத் துறை அலுவலகத்தில் ஆதார் அட்டை, பி.எம். கிசான் பதிவு எண், மொபைல் எண் சான்று கொண்டு சென்று புதுப்பிக்கலாம்.

20வது தவணை எப்போது வரும்?

கடைசி தவணை பிப்வரி 19 ஆம் தேதி வந்தது. 20வது மற்றும் அடுத்த தவணை ஜூலை மாதம் வர வாய்ப்புள்ளது. பொதுவாக பிப்ரவரி, ஜூன், அக்டோபர் என ஆண்டுக்கு 3 முறை பிஎம் கிசான் தொகை வழங்கப்படும். இந்த முறை தவணைத் தொகைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

மேலும் படிக்க | Amazon Prime Day 2025: ஷாப்பிங் லிஸ்ட் தயாரா? 3 நாட்களுக்கு நம்ப முடியாத சலுகைகள்

மேலும் படிக்க | BSNL ஃபிளாஷ் சேல்.. தள்ளுபடி.. சலுகை.. இலவச டேட்டா.. அள்ளுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More