ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை ரஷ்யா தொடுத்துள்ளது. 477 ட்ரோன்கள் மற்றும் 60 ஏவுகணைகள் என மொத்தம் 537 வான்வழி ஆயுதங்களை ஒரே நாளில் ரஷ்யா ஏவி, உக்ரைன் படையினரை விழிபிதுங்க வைத்துள்ளது.