மனிதர்களிடமிருந்து தானமாக பெறும் இரத்த வகைகளை போல அல்லாமல், அனைத்து வகை இரத்தத்திற்கும் பொருந்தக்கூடிய, மிகவும் அவசரமான காலங்களில் உயிர்காக்கும் வகையில், செயற்கை இரத்தம் ஒன்றை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது மருத்துவ உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.