Home> World
Advertisement

வானத்தில் டாக்ஸி ஓட்டும் காலம் வந்தாச்சு! 2026 முதல் அமல்..எந்த ரூட்டில் பயணிக்கலாம்?

Dubai Air Taxi Test : துபாயில் முதன்முறையாக வான்வழி டாக்சி அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான டெஸ்ட், வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

வானத்தில் டாக்ஸி ஓட்டும் காலம் வந்தாச்சு! 2026 முதல் அமல்..எந்த ரூட்டில் பயணிக்கலாம்?

Dubai Air Taxi Test : நகரப் போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், துபாய் நகரம் இன்னொரு முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் டாக்சி, அதாவது ஏர் டாக்சி வெற்றிகரமாக சோதனை பறப்பை முடித்துள்ளது. இந்த ஏர் டாக்சி, அமெரிக்காவின் "ஜாபி ஏவியேஷன்" நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டதாகும். இதில் அதிசயம் என்னவென்றால் ஹெலிகாப்டரைப்போல் உயரத்தில் பறக்க முடியும், ஆனால் அதன் ஒலி, செலவு, மற்றும் அதன் பாகங்களும் குறைவாகவே இருக்கின்றன. இதன் மூலம், ஒரு நகரத்திலிருந்து இன்னொரு பகுதிக்கு traffic signal-களும் இல்லாமல், நெரிசல்களும் இல்லாமல் நேரத்தை மிச்சப்படுத்தி பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

துபாய் நகரில் தற்போது நான்கு சிறிய விமான நிலையங்கள்(வேர்டிபோர்ட் மையங்கள்) உருவாக்கப்பட்டு வருகின்றன. 2026ஆம் ஆண்டில் இந்த சேவை பொதுமக்களுக்கு தொடங்கும் என துபாயின் மக்கள் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

Dubai International Airport(DXB) முதல் பாம் ஜுமெய்ரா வரை, துபாய் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள ஏர் டாக்சி மூலம் பயணம் செய்யும் போது, செலவாகும் நேரம் வெறும் 12 நிமிடங்கள் மட்டுமே என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே பயணத்திற்கு காரில் செல்லும் போது சுமார் 45 நிமிடங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து, நேரத்தை மிச்சப்படுத்தும் புதிய தீர்வாக இந்த ஏர் டாக்சி சேவை உருவாகியுள்ளது.

முக்கியமாக, எரிபொருள் பயன்படுத்தாமல் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் இந்த விமானம், கார்பன் வாயு வெளியீட்டை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு பசுமை தீர்வாக அமைகிறது. 2026-இல் பொதுமக்களுக்கு சேவை தொடங்கப்படவுள்ள இந்த ஏர் டாக்சி, நகர போக்குவரத்தில் நேரம் சேமித்து, மாசற்ற இயக்கத்துக்கு வழிவகுக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய சிறப்பம்சங்கள்:
*முழுமையாக மின்சாரத்தில் இயங்கும்
*160 கி.மீ தூரம் பறக்கும் திறன்
*சத்தமின்றி மென்மையான பறக்கும் தன்மை
*நேரம் மிச்சப்படுத்தும் நவீன போக்குவரத்து வழி
*சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பசுமை தீர்வு

இச்சேவை தொடங்கப்பட்டால், நகரங்களில் மின் டாக்சிகளின் ஓட்டமும், வானத்தில் பறக்கும் டாக்ஸசிகளின் பறப்பும் சாதாரணமாகிவிடும் என்பது உறுதி. இந்தியா உள்ளிட்ட நாடுகளும் இதுபோன்ற முயற்சிகளை தொடங்கும் காலம் தவிர்க்க முடியாத ஒன்று என நிபுணர்கள் கருதுகின்றனர்.

சுருக்கமாக:
*துபாயில் மின்சாரத்தில் இயங்கும் ஏர் டாக்சி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
*2026-இல் நான்கு வேர்டிபோர்ட்கள் மூலம் பொதுமக்களுக்கு சேவை தொடங்கவுள்ளது.
*இது, சுற்றுச்சூழலுக்கு சேதமின்றி நகர்புற போக்குவரத்தில் புதிய புரட்சிக்கு வழிவகுக்கும்

மேலும் படிக்க | சிந்து நதி நீர் ஒப்பந்தம்: படுத்தே விட்ட பாகிஸ்தான்... கெஞ்சினாலும் உறுதியாக இருக்கும் மோடி அரசு!

மேலும் படிக்க | டிரம்ப் கொண்டு வந்த வரிக்குறைப்பு மசோதா! சர்ச்சைகளுக்கு மத்தியில் நிறைவற்றம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More