Home> World
Advertisement

இஸ்ரேல் கப்பலை மூழ்கடித்த கிளிர்ச்சியாளர்கள்! பயணித்த 25 பேரின் நிலை என்ன?

Houthi rebels sink israel ship: ஹூத்திகள் கப்பகள் மீது தாக்குதலில் ஈடுபடுகின்றனர். “இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்களையே தாக்குகிறோம்” என்று கூறுகின்றனர்.

இஸ்ரேல் கப்பலை மூழ்கடித்த கிளிர்ச்சியாளர்கள்! பயணித்த 25 பேரின் நிலை என்ன?

Houthi rebels sink israel ship: ஒரே வாரத்தில், இரண்டு கப்பல்களை மூழ்கடித்த ஹூத்தி கிளர்ச்சியாளர்கள். இதன் முடிவு போராக இருக்குமா? என்பது உலக நாடுகளின் அச்சமாக உள்ளது. 

Red sea-ல் Houthi கிளர்ச்சியாளர்களால் நடக்கும் தற்போதைய தாக்குதல்கள் திடீரென்று ஏற்பட்டவை அல்ல. இதற்குப் பின்னால் பல வருடங்களாக தொடரும் ஒரு பெரிய போர் சூழல் இருக்கிறது. ஹூத்திகள் என்பது Yemen-ல் இருந்து வரும் Shia இசுலாமிய கிளர்ச்சிக் குழு. அவர்கள், Saudi Arabia ஆதரவு பெறும் யேமன் அரசாங்கத்துடன் பல வருடங்களாக உள்நாட்டு போரில் ஈடுபட்டு வருகிறார்கள். ஹூத்திகள் Iran-ல் ஆதரிக்கப்படுகிறார்கள் மற்றும் தற்போது யேமனில் பல அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.

2023 அக்டோபரில், Israel - Hamas போர் Gaza பகுதியில் வெடித்தபோது, ஹூத்திகள் தாங்கள் பாஸ்தீனர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று அறிவித்தனர். அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலுடன் தொடர்புடைய எந்த கப்பலாக இருந்தாலும் தாக்குவோம் என அவர்கள் பொதுவாக கூறினர். 2023 முடியுமுன் ஆரம்பித்து, ஹூத்திகள் Missile-கள் மற்றும் Sea drone-கள் மூலம் ரெட் சீயில் பயணிக்கும் பல கப்பல்களை தாக்கத் தொடங்கினர். ஆனால் முக்கிய பிரச்சனை என்னவென்றால், அவர்கள் தாக்கிய பல கப்பல்கள் இஸ்ரேலுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாதவை. பல நாடுகளிலிருந்து வரும் சரக்கு கப்பல்கள், பல தேசியங்களைச் சேர்ந்த பணியாளர்களுடன் பயணித்துள்ளன. இதனால், உலகத் தலைவர்கள் இந்த தாக்குதல்கள் சட்டவிரோதமானவை, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவை என்றும் கூறுகின்றனர்.

இத்தகைய தொடர்ச்சியான தாக்குதல்களில் முக்கியமான ஒன்று 2025 ஜூலை 7-இல் இடம்பெற்றது.  ஹூத்திகள் Eternity C என்ற சரக்கு கப்பலை தாக்கினர். இது ஒரு Greek நிறுவனத்திற்க்கு சொந்தமானது,  Liberia நாட்டின் கொடி ஏந்தியது. இந்த கப்பல் முதலில் கடல் ட்ரோன்கள் மற்றும் ராக்கெட் ஆயுதங்களால் தாக்கப்பட்டது. இரவில் நடந்த இரண்டாவது தாக்குதலில் மிகுந்த சேதம் ஏற்பட்டு கப்பல் முழுமையாக கடலில் மூழ்கியது. இதற்கு முன்பே, ஹூத்திகள் Magic Seas என்ற மற்றொரு கப்பலையும் தாக்கி மூழ்கடித்திருந்தனர். இது ஒரு தொடர்ச்சியான தாக்குதல்களின் பகுதி.

Eternity C கப்பலில் 25 பணியாளர்கள் இருந்தனர். இதில் 3 முதல் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் சிலர் Philippines நாட்டவர்களாகவும், ஒருவர் Russia-வைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர், அதில் 5 Philippines நாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் 1 India நாட்டை சேர்ந்தவர் உள்ளனர். ஆனால், 14 முதல் 19 பேர் வரை இன்னும் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளாது. இவர்களில் சிலர் ஹூத்திகளால் கைதுசெய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் (EU), அமெரிக்கா (USA), மற்றும் இங்கிலாந்து (UK) ஆகியவற்றின் கடற்படைகள் இந்த பகுதியில் தீவிர மீட்பு தேடுதலில் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்கத் தூதரகம் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்து, கைதுசெய்யப்பட்ட பணியாளர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இருப்பினும், ஹூத்திகள் தாங்கள் இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்களை மட்டுமே தாக்குகிறோம் என்றும், இது பாஸ்தீனுக்கு ஆதரவாகும் நடவடிக்கை என்றும் கூறுகிறார்கள். ஆனால், உலக நாடுகள் இது பொறுப்பற்ற தாக்குதல்கள் என்றும், தவறான நியாயங்கள் மூலம் உலக வர்த்தக பாதைகளை பாதிக்கிறதென்றும் தெரிவிக்கின்றன. Red sea என்பது ஆண்டுக்கு $1 டிரில்லியனுக்கு மதிப்பிலான சரக்குகளை கடத்தும் முக்கியமான பாதையாகும். தற்போது பல கப்பல் நிறுவனங்கள் இந்தப் பாதையை தவிர்த்து பாதுகாப்பான சுற்றுப்பாதைகளை தேர்வு செய்கிறார்கள், இதனால் காப்பீட்டு செலவுகளும் உயர்ந்துள்ளன.

இதற்குப் பதிலாக, இஸ்ரேல் ஹூத்திகள் கட்டுப்பாட்டிலுள்ள யேமனின் பகுதிகளில் குண்டுவீசத் தொடங்கியுள்ளது. இது ஒரு பெரிய போர் நிலையை உருவாக்கக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. தற்போது வரை மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால், Red sea தற்போது ஒரு ஆபத்தான அரசியல் மற்றும் போர்த் தலமாக மாறியுள்ளது என்பது மக்களின் பயமாக உள்ளது.

சுருக்கமாக:
ஹூத்திகள் - யேமனில் இருந்து வரும் ஷியா கிளர்ச்சியாளர்கள், ஈரானால் ஆதரிப்பு.

2023: இஸ்ரேல் - ஹமாஸ் போர் பிறகு, ஹூத்திகள் கப்பல் தாக்குதல்களைத் தொடங்கினர்.

2025 ஜூலை 7: Eternity C கப்பல் ஹூத்தி தாக்குதலில் மூழ்கியது.

25 பேர் பயணம்: 3-4 பேர் உயிரிழப்பு, 6-7 பேர் மீட்பு, 14-19 பேர் காணவில்லை.

EU, USA, UK கடற்படைகள் மீட்பில் ஈடுபட்டுள்ளன.

ஹூத்திகள்: “இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்களையே தாக்குகிறோம்” என்றனர்.

உலக நாடுகள்: “இவை சட்டவிரோத தாக்குதல்கள்” என கண்டனம்.

Red sea – வருடத்திற்கு $1 டிரில்லியன் சரக்குகள் கடத்தும் முக்கிய பாதை.

பல கப்பல்கள் பாதையை மாற்றுகின்றன: காப்பீட்டு செலவுகள் உயர்.

இஸ்ரேல், யேமனில் ஹூத்தி பகுதிகளில் குண்டுவீச தொடங்கியது.

மேலும் படிக்க | இதுவரை நடந்த இந்தியா-பாகிஸ்தான் போர்! இந்தியாவிற்கு எத்தனை வெற்றி?

மேலும் படிக்க | இந்தியா பாகிஸ்தான் போர்: மழுப்பும் அமெரிக்கா, நடிக்கும் சீனா, முதுகில் குத்திய துருக்கி.... உடனிருக்கும் உலக நாடுகள் எவை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More