Crude Oil Price: இஸ்ரேல் - ஈரான் போரில் அமெரிக்காவும் தற்போது இணைந்துவிட்ட சூழலில், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்திருக்கிறது. இதனால் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வை கண்டிருக்கிறது.
Israel Iran Conflict, Crude Oil Price: ஈரான் நாட்டில் உள்ள மூன்று அணுஉலைகள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். மேலும், இதன்மூலம் ஈரான் உடனடியாக போரை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவித்தார்.
Israel Iran Conflict: பதிலடியை தொடங்கிய ஈரான்
அமெரிக்காவின் தாக்குதலை ஐ.நா. கண்டித்திருக்கிறது. ஏமன் தற்போது இஸ்ரேல் - ஈரான் போரில், ஈரானுக்கு ஆதரவாக களமிறங்குவதாக அறிவித்துள்ளது. மேலும், தங்களின் கடற்பகுதியில் இருந்து கப்பல்களை வெளியேற்றுமாறு அமெரிக்காவுக்கும் அந்நாடு உத்தவிட்டிருக்கிறது. இந்த சூழலில், ஈரானும் தனது பதிலடியை தற்போது தொடங்கியிருக்கிறது.
இஸ்ரேல் நாட்டில் பல்வேறு பகுதிகளை குறிவைத்து ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல்களை தொடங்கியிருக்கிறது. இதனால் மீண்டும் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்திருக்கிறது. மத்திய கிழக்கில் பதற்றம் அதிகமானாலே பலரும் பார்வையும் கச்சா எண்ணெய்யின் பக்கம்தான் திரும்பும். இஸ்ரேல் - ஈரான் பதற்றம் கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் இருந்து வருகிறது.
Crude Oil Price: கச்சா எண்ணெய் விலை உயர்வு
அப்போது முதலே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வந்தது. இந்நிலையில், அமெரிக்கா ஈரானின் போர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை இன்று சர்வதேச சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ளது. உலக எண்ணெய் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை ஈரான் கொண்டிருக்கிறது. பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பின் (OPEC+) மூன்றாவது பெரிய பங்களிப்பாளரும் ஈரான்தான்.
Crude Oil Price: விலை தொடர்ந்து உயர வாய்ப்பில்லை?
கடந்த வாரத்தில் Brent கச்சா எண்ணெய் விலை 11% உயர்ந்தது. அதாவது கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 80 அமெரிக்க டாலர் வரை உயர்ந்தது. இஸ்ரேல் - ஈரான் மோதலில் அமெரிக்கா பங்கேற்குமா, இல்லையா என்ற சந்தேகம் இருந்துகொண்ட நிலையில், கச்சா எண்ணெயின் ஓரளவு குறைந்து மீண்டும் உயர்ந்தது. கச்சா எண்ணெய்யின் தேவையும், சப்ளையும் போதுமான அளவுக்கு இருக்கும் நிலையில், இந்த விலை ஏற்றம் அதிக நாள்கள் நீடிக்க எந்தவித முகாந்திரமும் இல்லை என நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஒரு நாளைக்கு 4.11 மில்லியன் பீப்பாய்கள் விநியோகப்பட்டுள்ளது, அதாவது விநியோகம் அதிமாகி உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மற்றொரு திட்டமிடப்பட்ட உற்பத்தி உயர்வை பரிசீலிக்க OPEC+ அமைப்பு வரும் ஜூலை 5ஆம் தேதி மீண்டும் கூட உள்ளது.
Crude Oil Price: ஈரான் பதிலடியால் வரும் சிக்கல்!
அடுத்து வரும் நாள்களில் ஈரான் போர் நிறுத்தத்தை நோக்கி செல்கிறதா அல்லது எவ்வாறு பதில் அளிக்கிறது அதற்கேற்பவே கச்சா எண்ணெய் விலை மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை, ஈரான் அதன் அச்சுறுத்தலை தொடர்ந்தால் கச்சா எண்ணெய் விலை 100 அமெரிக்க டாலர் நோக்கி பாயும் என்றும் கூறப்படுகிறது.
Crude Oil Price: இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
இஸ்ரேல் - ஈரான் மோதல் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவின் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களான HPCL - ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், BPCL - பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் அதன் யூனிட்களுக்கு சிக்கல் ஏற்படும். அதே நேரத்தில் கச்சா எண்ணெயை முக்கிய உள்ளீட்டுப் பொருளாகப் பயன்படுத்தும் பெயிண்ட்ஸ், டயர்கள், விமானப் போக்குவரத்து போன்ற பிற துறைகளுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும்.
Crude Oil Price: இந்தியாவுக்கு நிதிச் சுமை
CNBC-TV18 ஊடகத்தில் கடந்த ஜூன் 17 அன்று Goldman Sachs நிறுவனத்தின் சாந்தனு சென்குப்தா தெரிவித்ததாவது, "கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்யாக்கு 75 அமெரிக்க டாலராக உயர்ந்தால், இது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும். கச்சா எண்ணெய் விலையில் ஒரு பீப்பாய்க்கு 10 அமெரிக்க டாலர் அதிகரித்தால் கூட நாட்டின் செலவுச் சுமையில் 30-40 அடிப்படை புள்ளிகளைச் சேர்க்கும்" என்றார். கச்சா எண்ணெய் விலையேற்றம் இந்தியாவின் நிதிச் சுமையையும் அதிகரிக்கும். இருப்பினும் அது சமாளிக்கக் கூடியதாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுரிறது. கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் பெட்ரோல், டீசல் முதல் காய்கறி, பலசரக்கு பொருள்கள் வரை பல்வேறு பொருள்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்படலாம்.
Crude Oil Price: ரஷ்யாவில் இருந்து அதிக இறக்குமதி
கச்சா எண்ணெய்யின் விநியோகச் சங்கிலி சீர்குலைந்தால் அது நாட்டின் பணவீக்கத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும், உலகளவில் ரஷ்யாவுடன் ஒப்பிடும்போது, ஈரானின் ஏற்றுமதி மிகவும் குறைவாக உள்ளது. அதேநேரத்தில், தற்போது இஸ்ரேல் - ஈரான் மோதல் காரணமாக ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க | அமெரிக்கா போட்ட குண்டுகள்... ஈரானின் 3 அணுஉலைகள் துவம்சம் - போரில் இணைந்த டிரம்ப்!
மேலும் படிக்க | ஈரான் விஷயத்தில் முஸ்லிம் உம்மா ஏன் ஒன்றுபடவில்லை? ஈரானின் வரலாறு.. அஞ்சும் நாடுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ