July 9th Earth's fastest day: ஜூலை 9, 2025 - நாம் வாழும் நாளில் சில விநாடிகள் குறைந்துபோகும் என்றால் நம்ப முடியுமா? ஆனால், உண்மையில் இன்றைய தினம் அதன்படி சுமார் 1.6 மில்லி விநாடிகள் வரை குறைவாகவே நடைபெற உள்ளது.
அனைத்து நாடுகளும் வியப்பில் ஆழ்த்தும் வகையில், பூமியின் சுழற்சி வேகம் கடந்த சில வாரங்களாகவே அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இதன் நேரடி விளைவாக, இன்று ஜூலை 9 ஆம் தேதி, மனிதர்கள் பதிவுசெய்துள்ள மிகக் குறைந்த நாள் எனப் பெயர் பெறுகிறது.
சந்திரனின் தாக்கம் காரணமா?
சரியான முறையில் ஆராய்ந்த விஞ்ஞான தரவுகளின்படி, பூமியின் சுழற்சி வேகத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கு சந்திரனின் நிலை மற்றும் ஈர்ப்பு சக்தி முக்கிய காரணமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பருவங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்றவை பூமியின் சுழற்சி வேகத்தை மாற்றக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இதனால், இன்று ஒரு நாள் சராசரியாக 1.3 முதல் 1.6 மில்லி விநாடிகள் குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது. இது, கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து தற்போது 6-ஆவது முறை என்று பூமி சுழற்சி மற்றும் குறிப்பு முறைமை சேவை குறிபிடுகிறது.
விஞ்ஞானிகளுக்கு புதிய சவால்!
இந்த மாற்றம் பொதுமக்களுக்கு உடனடி பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், உலக நேர கணக்கீடுகள், ஜி.பி.எஸ். அமைப்புகள், மற்றும் செயற்கைக்கோள் தகவல்களுக்கு இது பெரும் சவாலாக இருக்கிறது. ஏனென்றால், இன்னும் சில நாட்கள் குறைந்த நேரத்தை கொண்டு இருக்க கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அது, ஜூலை 22 மற்றும் ஆகஸ்ட் 5 ஆகிய தேதிகள் கூட, சாதாரண நாள்களைவிட சிறிது நேரம் குறைவாக இருக்கும் என விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். இதுபோன்ற மாற்றங்களைச் ஈடு செய்ய, எதிர்காலத்தில் உலக நேரக் கணிப்பில் திருத்தங்கள் செய்ய வேண்டிய நிலை உருவாகும். அதனால், இவ்வாறான சுழற்சி வேகத்தில் ஏற்படும் மாற்றங்களை சமப்டுத்தும் விதமாக, 2029ஆம் ஆண்டில் "Negative Leap Second" எனப்படும் ஒரு எதிர்மறை நிமிடம் சேர்க்கப்படும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
ஏன் இது முக்கியம்?
நாம் தினமும் பயன்படுத்தும் நேரக் கணக்குகள், இணையம், தகவல் தொடர்பு சாதனங்கள், ஜிபிஎஸ் அமைப்புகள் மற்றும் வானிலை முன்னறிவிப்புகள் அனைத்தும் பூமியின் சுழற்சி நேரத்தை அடிப்படையாக கொண்டுள்ளன. பூமியின் சுழற்சி வேகத்தில் சிறிது கூட மாற்றம் ஏற்பட்டால், இவை அனைத்திலும் பாதிப்பு ஏற்படும். அதனால், ஒரு நாள் சில மில்லி விநாடிகள் கூட, குறைவாக இருந்தாலும், அது விஞ்ஞானிகளுக்கு மிகவும் முக்கியமான விஷயமாகிறது. இதுபோன்ற மாற்றங்கள் உலகளாவிய அளவில் நேரத்தையும், தொழில்நுட்பத்தையும் சரியாக இயக்க விஞ்ஞான புலத்தில் ஆழமாக ஆராயப்படுகின்றன.
சுருக்கமாக:
பூமி தற்போது சாதாரணத்தை விட வேகமாக சுழல்கிறது.
ஜூலை 9 - வரலாற்றிலேயே குறைந்த நாள் (1.6 மில்லி விநாடிகள் குறைவு)!
சந்திரனின் ஈர்ப்பு சக்தி முக்கிய காரணம்.
2029ல் நேரத்தை சரிசெய்ய “Negative Leap Second” தேவைப்படலாம்.
மேலும் படிக்க | பூமி சூரியனை மட்டுமா சுற்றி வருகிறது? சூரியக் குடும்பத்தைப் பற்றிய விஞ்ஞான உண்மை!
மேலும் படிக்க | மூச்சுவிடும் பூமி... இணையத்தில் வைரலாகும் அதிசய வீடியோ: மிஸ் பண்ணாம பாருங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ