Home> World
Advertisement

UAE கோல்டன் விசா: இனி இந்தியர்கள் ஈஸியா வாங்கலாம்... மேஜர் மாற்றங்கள் என்னென்ன?

Golden Visa New Changes: ஐக்கிய அரபு அமீரகம் அதன் கோல்டன் விசா விதிகளில் மாற்றம் செய்துள்ள நிலையில், இனி இந்தியர்கள் இதனை ஈஸியாக பெறலாம். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.

UAE கோல்டன் விசா: இனி இந்தியர்கள் ஈஸியா வாங்கலாம்... மேஜர் மாற்றங்கள் என்னென்ன?

UAE Golden Visa Rules New Changes: ஐக்கிய அரபு அமீரகம் (UAE) சமீபத்தில் அதன் கோல்டன் விசாவிற்கான விதிமுறையில் சில தளர்வுகளை கொண்டு வந்துள்ளது. இதற்கு முன் கோல்டன் விசாவில் இருந்த விதிமுறைகள் தற்போது மாற்றப்பட்டுள்ளன.

UAE Golden Visa: இந்தியர்கள் இனி எளிமையாக வாங்கலாம்

ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) புதிய வகை கோல்டன் விசாவை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம், தனிநபர்கள் நீண்ட காலம் அங்கு குடிபெயர வாய்ப்பளிக்கப்படும். இருப்பினும் அதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றனர். முன்னர் உள்ள கோல்டன் விசா அமைப்பில், விசாவைப் பெறுவதற்கு சொத்து அல்லது வணிகத்தில் குறிப்பிடத்தக்க நிதி முதலீடுகளைக் கொண்ட தனிநபர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கும். தற்போது இது மாற்றப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் அனைத்தும் இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை தருவதை ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஐக்கிய அமீரகத்தில் வாழும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கையே அதிகம் என்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

நிபுணர்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், சிறந்த மாணவர்கள் உள்ளிட்டோருக்கு மட்டுமே முதலில் கோல்டன் விசா வழங்கப்பட்டது. தற்போது இந்த மாற்றப்பட்ட கோல்டன் விசா மூலம் Content Creator, செவிலியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரையும் உள்ளடக்கி உள்ளது. 

UAE Golden Visa: புதிய விதியில் யார் யாருக்கு விசா கிடைக்கும்?

கோல்டன் விசாவின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் விஞ்ஞானிகள், டாப் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள், பல்கலைக்கழக ஆசிரிய உறுப்பினர்கள், முன்னணி சுகாதாரப் பணியாளர்கள்,15 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத் துறையில் அனுபவம் வாய்ந்த செவிலியர்கள் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

யூடியூபர்கள் மற்றும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியை தயாரிப்பவர்கள் போன்ற டிஜிட்டல் படைப்பாளிகள், 25 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சான்றளிக்கப்பட்ட ஆன்லைன் விளையாட்டு வீரர்கள், சொகுசு கப்பல் உரிமையாளர்கள் மற்றும் கடல்சார் துறையில் உள்ள தலைவர்கள் ஆகியோருக்கும் புதிய கோல்டன் விசா சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

UAE Golden Visa: புதிய விதியில் பெரிய மாற்றம்

மேலும், புதிய பரிந்துரை அடிப்படையிலான கோல்டன் விசா திட்டத்தின் கீழ், இந்தியர்கள் இப்போது AED 100,000 கட்டணம் செலுத்தி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நிரந்தர குடியுரிமையை பெறலாம். அதாவது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.23 லட்சம். மூன்று மாத காலத்திற்குள் 5,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்த பரிந்துரை அடிப்படையிலான விசாவிற்கு விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

UAE Golden Visa: பழைய விதிகள் என்ன?

2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கோல்டன் விசா சேவை தொடங்கப்பட்டது. முதலில் அதிக நிகர சொத்து மதிப்புள்ள நபர்களுக்காக வடிவமைக்கப்பட்டது. சொத்து மதிப்பு என்பது பெரும்பாலும் ஒவரின் கணிசமான ரியல் எஸ்டேட் முதலீடுகள் மூலம் கணக்கிடப்படும். ஆரம்பத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சொத்து அல்லது வணிகங்களில் குறிப்பிடத்தக்க அளவு முதலீடு செய்தவர்களுக்கு மட்டுமே கோல்டன் விசா வழங்கப்பட்டது. இருப்பினும், 2022ஆம் ஆண்டில் 10 வருட விசாவிற்கு தேவையான குறைந்தபட்ச சொத்து முதலீடு AED 2 மில்லியன் என குறைக்கப்பட்டது. இதனால் கோல்டன் விசாவை பரந்த அளவிலான முதலீட்டாளர்கள் மிகவும் அணுகக்கூடியதாக அமைந்தது என்றார்.

மேலும் படிக்க | புதிய கட்சி தொடங்கிய எலான் மஸ்க்..! வெற்றி பெற்றாலும் அதிபராக முடியாது..!

மேலும் படிக்க | வானத்தில் டாக்ஸி ஓட்டும் காலம் வந்தாச்சு! 2026 முதல் அமல்..எந்த ரூட்டில் பயணிக்கலாம்?

மேலும் படிக்க | விண்வெளியில் அசத்தும் இந்தியர்..! இப்படி ஒரு சாதனையா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More