Home> World
Advertisement

ஈரான் விஷயத்தில் முஸ்லிம் உம்மா ஏன் ஒன்றுபடவில்லை? ஈரானின் வரலாறு.. அஞ்சும் நாடுகள்

What Is This Muslim Ummah: இஸ்ரேலும் ஈரானும் ஒரு முழு அளவிலான போரின் விளிம்பில் நிற்கின்றன. ஈரானுக்கு ஆதரவாக இஸ்லாமிய நாடுகள் ஏன் ஒன்று சேரவில்லை? இஸ்லாமிய நாடுகள் பேசும் இஸ்லாமிய உம்மா எங்கே சென்றது? 

ஈரான் விஷயத்தில் முஸ்லிம் உம்மா ஏன் ஒன்றுபடவில்லை? ஈரானின் வரலாறு.. அஞ்சும் நாடுகள்

History of Iran In Tamil: இஸ்ரேலும் ஈரானும் ஒரு முழு அளவிலான போரின் விளிம்பில் நிற்கின்றன. இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் வெளிப்படையான ஆதரவு உள்ளது. அமெரிக்கா தான் இஸ்ரேலின் ராஜதந்திர கேடயம் என்பது உலகம் அறிந்தது. இஸ்ரேலிடம் இருக்கும் அனைத்து ஆயுதங்களுக்கு பின்னனியில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரான் மீது குண்டுவீச்சு நடத்தத் தொடங்கக்கூடும் என்ற அச்சமும் உள்ளது. 

ஆனால் மறுபுறம், ஈரான் தனியாக இருக்கிறது. இஸ்லாமிய ஒற்றுமை பற்றி பேசும் துருக்கி மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அறிக்கைகள் மட்டுமே வெளியிட்டு வருகிறார்கள் தவிர ஈரானுக்கு பக்கபலமாக எதுவும் செய்யவில்லை. வளைகுடா நாடுகளும் இஸ்ரேலிய தாக்குதல்களைக் கண்டிக்கின்றன. ஆனால் ஈரான் பக்கம் முழுமையாக வரவும் இல்லை.. ஆதரவும் அளிக்கவில்லை. 

இஸ்லாமிய நாடுகள் ஏன் ஒன்று சேரவில்லை? மத்திய ஆசியாவில் இருக்கும் இஸ்லாமிய நாடுகள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள்? இந்த மௌனத்திற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக ஏன் ஒன்றுபட முடியவில்லை? இஸ்லாமிய நாடுகள் பேசும் இஸ்லாமிய உம்மா பற்றிய பேச்சு வெறும் யோசனையா? இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் பதில்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்போம்.

நேற்று முதல் இன்று வரை இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலில் என்ன நடந்தது, எதிர்காலத்தில் என்ன நடக்கக்கூடும் என்பதையும் ஓரளவுக்கு அனைவருக்கும் புரியும். 1979 இல், ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வந்தது. முகம்மத் ரிசா ஷா பஹ்லவியின் ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டது. அதன்பிறகு அயதோல்லா ரூகொல்லா கொமெய்னி உச்ச தலைவரானார். இந்தப் புரட்சி வெறும் ஈரானுக்கு மட்டுமல்ல. இஸ்லாமிய உலகத்தை மாற்றுவதற்காக என்று கூறப்பட்டது. அன்றிலிருந்து, ஈரான் மெதுவாக தனிமைப்படுத்தப்பட்டது. குறிப்பாக சன்னி ஆதிக்க அரபு உலகத்திலிருந்து.

ஆனால் இதற்கு முன்பு, படம் வேறொரு கோணத்தில் இருந்தது. ஆண்டு 1938. சவுதி அரேபியாவின் மணலில் எண்ணெய் பெருங்கடல் எரிமலையாய் நிரம்பியது. இதற்குப் பிறகு, அமெரிக்கா சவுதியுடன் கைகோர்த்தது. அமெரிக்கா எண்ணெய்யை விரும்பியது. சவுதிக்கோ பாதுகாப்பு தேவை. எண்ணெய் கொடுங்கள், நாங்கள் உங்களைப் பாதுகாப்போம் என அமெரிக்கா வந்தது. அன்று முதல் இன்று இடையில் சில சிறிய பகைமைகளைத் தவிர, இந்த ஒப்பந்தம் இப்போது வரை இருந்து வருகிறது.

ஈரான் நாட்டை பொறுத்தவரை முகம்மத் ரேசா ஷாவின் ஆட்சியின் போது, அந்த அரசாங்கம் அமெரிக்காவுடன் நெருக்கமாக இருந்தது. இதன் காரணமாக சவுதி அரேபியாவும் ஈரானும் மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் இரண்டு பெரிய நட்பு நாடுகளாக மாறின. பின்னர் 1979 ஆம் ஆண்டு வந்தது. ஈரானில் இஸ்லாமியப் புரட்சி நடந்தது. ஈரான் இஸ்லாமியக் குடியரசாக மாறியது. அனைத்து அதிகாரமும் உச்சத் தலைவரின் கைகளில் வந்தது. இந்தக் காலகட்டத்தில், முகம்மத் ரேசா ஷாவும் ஈரானிலிருந்து தப்பி ஓடினார். 

அதன்பிறகு ஈரானில் அமெரிக்காவின் கைக்கூலி யாரும் இல்லை. அயதோல்லா ரூகொல்லா கொமெய்னி அமெரிக்காவை பெரிய சனி என்றும் இஸ்ரேலை சிறிய சாத்தான் என்றும் அழைத்தார். இங்கும் கூட படம் வேறுபட்டது. ஆனால் கொமெய்னியின் சிந்தனை விலாயத் அல்-ஃபகிஹை அடிப்படையாகக் கொண்டது. இதில், மத உலமாக்கள் தான் மிகப்பெரிய ஆட்சியாளர்கள்.

ஆனால் அதேசமயம் சன்னி இஸ்லாம்கள் இடையே அப்படி இல்லை. அவர்களில் உலமாக்கள் மதப் பணிகளை மட்டுமே செய்வார்கள். ஆட்டசியை நடந்தும் ஆட்சியாளர் வேறு யாரோ இருப்பார்கள். 

ரூகொல்லா கொமெய்னிக்கு ஒரு யோசனை இருந்தது. அவர் இஸ்லாமியப் புரட்சியைப் பரப்ப விரும்பினார். அதாவது, ஈரானில் இருந்து இஸ்லாமியப் புரட்சி மற்ற இஸ்லாமிய நாடுகளுக்கு பரப்ப வேண்டும் என விரும்பினார். முடியாட்சியை இஸ்லாமியத்திற்குப் புறம்பானது என்று அவர் கருதினார். இந்த யோசனை வளைகுடாவின் முடியாட்சிக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டது. 

ஈராக் அதிபர் சதாம் உசேன் 1980 இல் ஈரானை தாக்க தொடங்கினார். அப்போது ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஈரான் தனக்கான பாதையை உருவாக்கிக்கொண்டு வளர்ந்து வரும் ஒரு புதிய நாடாக இருந்தது. அதனைச்சுற்றி சன்னி இஸ்லாமியர்கள் ஆதரவு மற்றும் சன்னி சன்னி இஸ்லாமிய தலைவர்கள் இருந்த மற்ற இஸ்லாமிய நாடுகள் இருந்ததால், ஈரான் தனியாக விடப்பட்டது. 

சதாம் இதுதான் சரியான நேரம் என்று நினைத்தார். அவர் அரபு உலகத்தை ஒன்றிணைத்தார். சவுதி அரேபியா சதாமுக்கு உதவியது. அவருக்கு பணம் கொடுத்தது. இந்தப் போர் 8 ஆண்டுகள் நீடித்தது. சதாம் ஒரு சன்னி முஸ்லிம் நாடாக இருந்தது. ஆனால் ஈராக் ஒரு ஷியா முஸ்லிம் நாடாக இருந்தது. அது ஷியா முஸ்லிம் பெரும்பான்மையினராக இருந்தது. பெரும்பாலான ஷியாக்கள் வசிக்கும் ஈரானுடன் சண்டையிட்டனர். இந்தப் போரில் ஈரான் பெரும் இழப்புகளைச் சந்தித்தது. இறுதியாக அயதோல்லா ரூகொல்லா கொமெய்னி சதாமுடன் ஒரு சமரசத்தை எட்டினார். 

இந்தப் போருக்குப் பிறகு, ஈரான் நாட்டின் உச்ச தலைவராகா அலி கமேனி வந்தார். அவர் இஸ்லாமியப் புரட்சி பரப்பும் முக்கியத்துவத்தைக் குறைத்தார். ஆனால் ஈரானின் வெளியுறவுக் கொள்கை என்பது ரூகொல்லா கொமெய்னியின் காலத்திலேயே நிர்ணயிக்கப்பட்டது. கோமெய்னியின் முழக்கம் கிழக்கும் இல்லை, மேற்கும் இல்லை என்பதே. அதாவது அமெரிக்காவும் இல்லை ரஷ்யாவும் இல்லை. ஈரான் தனியாக நடந்து தனது சொந்த பாதையைத் தேர்ந்தெடுக்கும். இது தான் கோமெய்னியின் கருத்து. 

இது பார்ப்பதற்கு மிகவும் புரட்சிகரமானதாகத் தெரிகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், இதன் காரணமாக ஈரான் தனிமைப்படுத்தப்பட்டது. இஸ்லாமியப் புரட்சியை பரப்புதல், தனியாக இருப்பது என இந்த இரண்டு காரணமும் ஈரான் தனித்து விடப்பட்டது. மறுபுறம், அரபு நாடுகள் அமெரிக்காவுடன் கைகோர்த்துக் கொண்டு ஆயுதங்களை குவித்து, தங்கள்பாதுகாப்பை வலுப்படுத்திக் கொண்டனர்.

ஈரானும் தனக்கான பாதையை திட்டமிட்டு அமைத்துக்கொண்டு இருந்தது. இதற்கிடையில், ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த பிரச்சினை எழத் தொடங்கியது. ஈரான் ஒரு அணுசக்தி நாடாக மாறி வருவதாக இஸ்ரேலிடமிருந்து வெளிப்படையான குற்றசாற்றுக்கள் வைக்கப்பட்டன. மறுபுறம் அரபு நாடுகள் எச்சரிக்கையாகின. 

2002 ஆம் ஆண்டில், ஈரானின் நடான்ஸ் அணுசக்தி தளம் வெளிப்பட்டது. இதன் பிறகு, சந்தேகம் மேலும் பெரிதாகியது. மேற்கத்திய நாடுகள் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. மீதமுள்ள வளைகுடா நாடுகள் அமெரிக்காவை நோக்கி நகரந்தன. 

2018 ஆம் ஆண்டில் டிரம்ப் அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்தபோது, ​​சவுதி அரேபியா இந்த முடிவை வரவேற்றது. ஈரான் ஒரு குண்டு வெடித்தால், நாமும் அதைச் செய்வோம் என்று ​​சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் கூறினார். சவுதிக்கும் ஈரானுக்கும் இடையிலான சண்டை பல முறை ஒரு பினாமி போராக மாறியது.

முதலில் லெபனான்... ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா லெபனானை காப்பாற்றியது. அதற்கு ஈரான் நிதி வழங்கியது. அரபு நாடுகள் இதை லெபனானின் இறையாண்மையில் தலையிடுவதாகக் கருதின. சவுதி அரேபியா அதைத் தடுக்க முயன்றது. 2017 ஆம் ஆண்டில், சவுதி அதன் ஆதரவாளரான லெபனானின் பிரதமர் சாத் ஹரிரியை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தியது. ஹரிரியும் திரும்பினார், ஆனால் பதற்றம் அதிகரித்தது. 

இரண்டாவதாக ஈராக்... 2003 ஆம் ஆண்டு அமெரிக்கா ஈராக்கைத் தாக்கியது. சதாம் ஒரு சன்னி அரபுத் தலைவர். ஈரானுக்கும் ஒரு பெரிய எதிரி. ஈரான் இந்தத் தாக்குதலை எதிர்க்கவில்லை. அமெரிக்கா சதாம் ஹுசைனை தூக்கிலிட்டபோதும், ஈரான் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. சதாமின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஈரான் ஈராக்கிய அரசியலில் தலையிடத் தொடங்கியது. ஒரு காலத்தில் சன்னி அரசியல் இருந்த இடத்தில், இப்போது ஈரானின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. பல ஈராக்கிய அரசியல் குழுக்கள் ஈரானிடமிருந்து உதவி பெறத் தொடங்கின. ஈரானின் முக்கிய நோக்கம் சன்னி ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்பது தான். 

மூன்றாவதாக சிரியா... 2011 புரட்சி வந்தது. மேற்கு ஆசியா முழுவதும் கிளர்ச்சிகள் எழத் தொடங்கின. சிரியா, பஹ்ரைன், ஏமன், கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும், நீண்ட காலமாக அரியணையில் இருந்த சக்திகள் தள்ளாடத் தொடங்கின. சவுதி மற்றும் ஈரான் இரண்டும் இந்த சக்திகளை பகடைக்காயாக ஆக்கின. அரபு புரட்சி சிரியாவையும் அடைந்தபோது, ஈரான் பஷர் அல் அசாத்தை ஆதரித்தது. சிரியாவில் சன்னி பெரும்பான்மையினர், அந்த குழுக்களுக்கு சவுதி ஆயுதங்களை வழங்கியது. அதேநேரம் சவுதி பஹ்ரைனில் ஷியா இயக்கத்தை நசுக்கியது. ஷியாக்களின் ஆதரவாளராக ஈரான் தொடர்ந்து உதவி வந்தது. 

நான்காவது ஏமன்... 2015 ஆம் ஆண்டில், ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சி வெடித்தது. சவுதி ஏமனைத் தாக்கியது. ஈரான் ஹவுத்திகளுக்கு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொடுத்தது. ஈரான் மற்றும் சவுதி இடையேயான பினாமி போரின் போர்க்களமாக ஏமன் மாறியது. 

இப்படி அரபு நாடுகளுக்கு இடையே பிரச்சனை ஏற்படுத்தி, அதன்மூலம் அவர்களை கட்டுப்படுத்தி தங்களுக்கு சாதகமாக மாற்றும் வேலையை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து செய்து வந்தன. 

இதன் காரணமாக ஈரானை தனிமைப்படுத்தி மற்ற அரபு நாடுகளுடன் அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேல் நெருக்கம் காட்டியது. அந்த நாடுகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டன. அரபு நாடுகளுக்குத் தேவையான தொழில்நுட்பம், முதலீடு மற்றும் நுட்பங்களை இஸ்ரேல் கொண்டுள்ளது. இந்த நாடுகள் இஸ்ரேலுடன் கட்டியெழுப்பிய வணிக உறவை முறித்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. மீறினால் ஒப்பந்தங்களில் இருக்கும் பில்லியன் கணக்கான டாலர்கள் ஆபத்தை நோக்கி செல்லும். எனவே ஈரானை ஆதரிப்பதில் இந்த நாடுகளுக்கு சிக்கல் ஏற்படலாம்.

ஆனால் ஒரு காலத்தில் துருக்கி, ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் அரபு அல்லாத நாடுகளாக இருந்தன. அதன்பிறகு நடந்த அரசியல் காரணங்களுக்காக துருக்கி மற்றும் பாகிஸ்தான் இரண்டும் அமெரிக்காவின் வாடிக்கையாளர் நாடுகளாக மாறிவிட்டன. துருக்கி நேட்டோவில் உறுப்பினராக உள்ளது. பாகிஸ்தான் ஆரம்பத்தில் இருந்தே மேற்கு நாடுகளின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. எனவே 1979 க்குப் பிறகு ஈரான் மேற்கு நாடுகளுக்கு எதிரானதாக மாறியது. எனவே இந்த மூன்றின் கூட்டாண்மை அங்கு முறிந்துவிட்டது. 

ஈரானின் வளர்ந்து வரும் சக்தியைக் கண்டு அனைவரும் பயப்படுகிறார்கள். இந்த பயம் இஸ்ரேலை அரேபியர்களின் பாதுகாப்பு கூட்டாளியாக மாற்றியுள்ளது. எனவே தான் ஈரான் நாட்டுக்கு, வளைகுடாவில் இருக்கும் இஸ்லாமிய நாடுகள் ஆதரிப்பதில்லை.

மேலும் படிக்க - ஈரான் இஸ்ரேல் மோதல்: ரஷ்யா, சீனாவை பார்த்து டிரம்ப் பயப்படுகிறாரா? 2 வாரம் அவகாசம் எதற்கு?

மேலும் படிக்க - ஈரான் மீது தாக்குதல்.. உள்ளே வரும் ரஷ்யா! டிரம்ப் சொன்னது.. இஸ்ரேல் மருத்துவமனை மீது தாக்குதல்

மேலும் படிக்க - ஈரானின் சக்திவாய்ந்த ஆயுதம்... மிரட்டும் Sejjil-2 ஏவுகணை - இஸ்ரேலுக்கு ரொம்ப ஆபத்து ஏன்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More