Home> Health
Advertisement

வெயிட் லாஸ் செய்த லாஸ்லியா-உதவிய ஒரு பழம்! நீங்களும் சாப்பிட்டு பாருங்க..

Losliya Weight Loss Diet Tips : தமிழ் திரையுலக பிரபலமாக இருக்கிறார் லாஸ்லியா. இவரை பிக்பாஸ் லாஸ்லியா என்று கூறினால், பலர் எளிதில் கண்டு பிடிப்பர். இவர் உடல் எடையை எப்படி குறைத்தேன் என்பது குறித்து ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.   

வெயிட் லாஸ் செய்த லாஸ்லியா-உதவிய ஒரு பழம்! நீங்களும் சாப்பிட்டு பாருங்க..

Losliya Weight Loss Diet Tips : தமிழ் ரசிகர்கள் மத்தியில், பிரபலமான நடிகையாக இருப்பவர் லாஸ்லியா. இலங்கையைச் சேர்ந்த இவர்,பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார். மக்கள் மத்தியில் அதற்குப் பிறகுதான் பிரபலமாக பேசு பொருளாகவும் மாறினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னாலும், அதன் பிறக்கும் கொஞ்சம் வெயிட் போட்டு இருந்தவர், இப்போது உடல் எடை குறைந்து காணப்படுகிறார். இதற்கான ரகசியத்தை அவரே கூறியிருக்கிறார். 

உடல் எடையை இழக்க காரணம்..

லாஸ்லியா, தனது வெயிட் லாஸ் குறித்து ஒரு நேர்காணலில் பேசியபோது அதற்கான காரணத்தையும் கூறினார். செய்தி வாசிப்பாளராக சேரும் முன்பு தான் 50 கிலோ எடை மட்டும்தான் இருந்ததாகவும், அதன் பிறகு தான் அதிகமாக வெயிட் எரியதாகவும் தெரிவித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன், ஓரளவிற்கு கட்டுக்கோப்பாக வைத்திருந்த தனது உடல் எடையை, அதிகமாக சுகர் சாப்பிட்டு இன்னும் அதிகமாக்கிவிட்டாராம். அதன் பிறகு மருத்துவர்களின் அறிவுரைப்படி எடையை குறைத்து இருக்கிறார்.

உதவிய உணவுகள்..

லாஸ்லியா தனக்கு உடல் எடையை குறைக்க என்னென்ன உணவுகள் உதவியது என்பது குறித்து பேசி இருக்கிறார். தனக்கு மட்டன் சாப்பிடும் பழக்கம் இல்லை என்று கூறும் அவர், சிக்கன் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம் என்கிறார். 

வெயிட் லாஸுக்காக, சாப்பாட்டிற்கு பதிலாக (அரிசி), மில்லட்ஸ் (சிறுதானியங்கள்) எடுத்துக்கொண்டாராம். மேலும் உணவில் அதிகமாக கீரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். 

காலையில் கோதுமை பிரட் சாப்பிடும் அவர், கூடவே காய்கறிகளை சேர்த்துக் கொள்வதாக கூறப்படுகிறது. மதிய உணவிற்கு சிறுதானியங்களை வைத்து செய்த சாப்பாட்டை சாப்பிடுகிறார். கூடவே அதிக அளவில் காய்கறிகளையும் எடுத்துக் கொள்கிறார். 

மாலையில் பசித்தால், காய்கறி சாண்ட்விச் சாப்பிடலாம் என கூறும் அவர், அந்த பசியை கட்டுப்படுத்த வயிறு முழுமையாக உணரும் தன்மையை தரும் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார். உதாரணத்திற்கு, கொழுப்பு குறைவான யோகர்ட், டயட் சீஸ் உள்ளிட்டவற்றை பரிந்துரைக்கிறார்.

இரவு உணவு..

லாஸ்லியா, தான் வெயிட் லாஸ் செய்ய இரவில் உணவை தவிர்த்து விட்டாராம். இதை, டயட்டில் இருக்கும் பலர் பின்பற்றுகின்றனர். ஒரு சிலர், இரவு உணவை 7 மணிக்கு முன்னதாக சாப்பிட்டு விடுகின்றனர். இப்படி இரவு உணவை ஸ்கிப் செய்யும் பட்சத்தில், அவர்கள் காலையில் சீக்கிரமாக சாப்பிட்டு விட வேண்டும் என்று கூறப்படுகிறது.

ஜிம்:

லாஸ்லியா, தனது உடல் எடையை குறைக்க தவறாமல் ஜிம்மிற்கும் சென்றிருக்கிறார். அவர், வாரத்தில் 5-6 நாட்கள் வரை ஜிம்மிற்கு சென்று வர்க்-அவுட் செய்திருக்கிறார். உடல் எடையை குறைக்க, உடற்பயிற்சியோடு சேர்ந்து டயட்டில் இருப்பதும் மிகவும் அவசியம் ஆகும். இதை பின்பற்றியே லாஸ்லியா தனது உடல் எடையை குறைத்திருக்கிறார்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் லாஸ்லியாவின் தனிப்பட்ட அனுபவங்களாகும். இதனை பின்பற்றும் முன்னர் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை) 

மேலும் படிக்க | ஜிம் போகாமல் 21 நாளில் வெயிட் லாஸ் செய்த மாதவன்! ‘இந்த’ 1 விஷயம்தான் சீக்ரெட்..

மேலும் படிக்க | 6 மாதங்களில் 15 கிலோ குறைந்த பிரபல நடிகை! அதுக்கு இது ஒன்னுதான் காரணம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More