Weight Loss Tips: இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ஃபாலோவர்ஸை கொண்ட உடற்பயிற்சி பயிற்சியாளர் லெஸ்ஸி, 28 நாட்களில் உடல் எடையை குறைக்க 7 டிப்ஸ்களை பரிந்துரைக்கிறார். நீங்கள் உடல் எடையை குறைக்கும் எண்ணத்தில் இருந்தால், இந்த தொகுப்பு உங்களுக்கானது. தற்போது உடற்பயிற்சி பயிற்சியாளர் உடல் எடை இழப்புக்கு பின்பற்றிய 7 குறிப்புகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
சோடா
உடல் எடை குறைப்பு பயணத்தில் முதல் விதியாக இருப்பது சோடாவை தவிர்ப்பது ஆகும். எடை அதிகரிப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு சர்க்கரை பானங்கள் உட்பட சோடாக்கள் முக்கிய காரணியாக உள்ளன. டயட் சோடாக்கள் கூட பசியை ஏற்படுத்தும். ஒருவேளை நீங்கள் சோடா எடுக்க விரும்பினால் அதை தண்ணீர் மற்றும் மூலிகை தேநீர்களுடன் மாற்றலாம்.
சர்க்கரை
கலோரி பற்றாக்குறையை ஏற்படுத்திவிட்டு, பின்னர் கூடுதல் சர்க்கரையை உட்கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை உட்கொள்வதும் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, செயலிழப்புகளுக்கு வழிவகுப்பதோடு பசியையும் துண்டுகிறது. எனவே நீங்கள் சர்க்கரையை தவிர்ப்பது நல்லது ஆகும். அது உங்கள் பசியை கட்டுப்படுத்தும் செரிமானத்தை மேம்படுத்தும் மேலும், கொழுப்பு இழப்பை ஆதரிக்கவும் உதவும்.
காஃபி
பொதுவாக பசியை கட்டுப்படுத்த காஃபி அல்லது டீ போன்ற பானங்களை உட்கொள்வது வழக்கம். நாள் ஒன்றுக்கு 2, 3 காஃபி தீங்கு விளைவிக்காது என்றாலும், அதிக அளவில் காஃபியை உட்கொள்வது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது முறையான தூக்கத்தை சீர்குலைக்கிறது. மேலும், பதட்டத்தை அதிகரிக்கிறது. எனவே உடல் எடை இழப்பு காலத்தில் காஃபியை தவிர்க்க முயற்சிக்கவும்.
சீக்கிரமாக தூங்குங்கள்
பொதுவாகவே தூக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதிலும் உடல் எடை இழப்பு காலத்தில், சீரான தூக்கம் கண்டிப்பாக வேண்டும். நாளுக்கு 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். குறிப்பாக உடல் எடை இழப்பு பயணத்தில் இருப்பவர்கள் இரவு 10 மணிக்கு முன்பாக தூங்க முயற்சிக்கவும்.
உடற்பயிற்சி
பயிற்சியாளர் லெஸ்ஸி ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என பரிந்துரைக்கிறார். நீங்கள் கடுமையான எடை இழப்புக்கு கார்டியோ மற்றும் வலிமை பயிற்சியை மேற்கொள்ளலாம். அதேபோல் நடைபயிற்சி மற்றும் ஜாக்கிங்கும் செய்யலாம்.
தியானம்
உடல் எடை குறைப்பு என்பது வெறும் உடற்பயிற்சி மற்றும் உணவு பற்றியது மட்டுமல்ல. மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது. தினமும் 10 நிமிடங்கள் தியானம் செய்வது மன அழுத்தத்தை குறைக்கவும், உணர்ச்சிவசப்பட்ட உணவை கட்டுப்படுத்தவும், கவனத்தை மேம்படுத்தவும் உதவும்.
2 லிட்டர் தண்ணீர் குடுக்கவும்
நீரேற்றம் மிகவும் முக்கியமான ஒன்று. செரிமானம், நச்சு நீக்கம் மற்றும் ஆற்றலுக்கு நீர் அவசியம். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க முயற்சி செய்யுங்கள். மேலும், நீரேற்றம் பசியை அடக்கவும் வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கவும், நச்சுகளை வெளியேற்றவும் உதவும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் புவி என்பவரின் உடல் எடை குறைப்பு பயணம் தொடர்பான அனுபவங்கள் ஆகும். இவர் தகுந்த நிபுணர் இல்லை என்பதால் இவரின் அறிவுரைகள் நேரடியாக பின்பற்ற வேண்டாம். பின்பற்றும் முன்னர் மருத்துவ நிபுணர்களிடம் உரிய ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிங்க: 140 கிலோவில் இருந்த நபர்... 60 கிலோவை குறைக்க அவர் செய்தவை என்னென்ன?
மேலும் படிங்க: உடல் கொழுப்பை வேகமாக குறைக்க... இந்த 7 பழக்கங்கள் உதவும் - பிட்னஸ் கோச் டிப்ஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ